நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம்.
எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittorent, Rapidshare,
Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share,
Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கம்
செய்வோம். இதில் உள்ள அனைத்திலும் ஒரு பிரச்சனை நேரம் மற்றும் தரவிறக்கும் வேகம்
தான். ஒரு தளங்களில் ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்ய முயற்சி செய்தால்
முதலில் தரவிறக்க 60 விநாடிகள் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு
தரவிறக்கம் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் தரவிறக்க வேகம் மிகவும்
குறைவாகவும் இருக்கும்.
இதை தீர்க்க ஒரு இலவச தளம் உள்ளது. அதன் பெயர் fetch.io இது ஒரு Cloud Computing முறையில் இயங்ககூடிய தளம்.
இந்த வலைத்தளம் மூலம் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire,
Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும்
Fileserve போன்ற தளங்களில் நேரக் காத்திருப்பு இல்லாமல் தரவிறக்க முடியும்.
இதில் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட தளங்களிலுருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
தரவிறக்கப்படும் வீடியோ கோப்புகள் நேரடியாக MP4 ஆக மாற்றி தரும்.
இந்த வலைத்தளத்தில் மூலம் நான் பத்து எம்பி உள்ள வீடியோ கோப்புகள் ஓரு மூன்று விநாடிகளுக்குள் தரவிறக்கித்தந்தது.
இணையத்தள சுட்டி
நண்பர்களே இதுவரை நம்முடைய வலைத்தளத்தின் பெயரை தன்னுடைய வலைத்தளத்தின்
டாப் டென்னில் இடம்பெறச் செய்த நண்பரும் பதிவருமான திரு. பிரபு என்கிற
சாய்தாசன் அவர்களுக்கு எனது நன்றி
இனி நமது வலைத்தளத்தின் சுட்டிகள் அவருடைய டாப் டென்னில் வெளிவராது.
ஏன் வெளிவராது என்று கேட்பவர்களுக்கான பதில் இதற்கு முன் இட்ட பதிவான பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க மற்றும் வைபை வாட்சர் உங்களுக்காக
என்ற பதிவினை நீக்கினால் மட்டுமே நம் பதிவுகள் வெளிவரும் என்று
கூறிவிட்டார். எனக்காக நிறைய உதவிகள் செய்தவர் அதுமட்டுமல்லாமல் நிறைய
அறிவுரைகள் கூறியவர் இருந்தாலும் இதற்கான பதிலை நான் வாசகர்களிடம் இருந்து
எதிர்பார்க்கிறேன். இந்த பதிவினை நீக்கலாமா வேண்டாம் என்று நீங்களே
கூறுங்கள். எனக்கு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன். வாசகர்களுடைய
உதவியினை எதிர்பார்க்கிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...