உங்கள் கோப்புகளை முழுமையாக நீக்க மற்றும் வலை முகவரி சுருக்கிகள் மூன்று உங்களுக்காக

நண்பர்களே நாம் நம்முடைய முக்கியமான தகவல்கள் அடங்கிய கோப்புகள் அல்லது தேவையில்லாத கோப்புகளில் Del கீ கொண்டு நீக்குவோம்.  அல்லது Shift+Del கீ கொண்டு நீக்குவோம்.  வெறும் Del கீ கொண்டு நீக்கினால் Recycle Bin பகுதிக்கு சென்று விடும் அங்கிருந்து நாம் மீட்டுக் கொள்ளலாம்.  அதே Shift+Del கொண்டு நீக்கினால் Restoration என்ற மென்பொருள் கொண்டு மீட்டெடுக்கலாம்.   இது போன்ற மென்பொருட்களை கொண்டு மீட்டெடுத்தால் யார் வேண்டுமானாலும் நம் கோப்புகளை திருட்டுதனமாக மீட்டெடுத்து உபயோகிக்கலாம்.  அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் Eraser என்ற மென்பொருளை கொண்டு நீக்கினால் அந்த கோப்புகள் யார் கைக்கும் கிடைக்காத வண்ணம் வன்தட்டிலிருந்து மிகவும் பாதுகாப்பாக நீக்கிவிடலாம். 

இந்த மென்பொருள்  அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையில் உபயோகிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான மென்பொருள் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளும் கூட

இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ், மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்தும் வண்ணம் தனி தனி மென்பொருளாக கிடைக்கிறது.

இந்த மென்பொருளை கடந்தா வாரம் மட்டும் 30000க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கி உபயோகித்து நன்றாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த மென்பொருள் வெளிவந்த வருடம் 2006

Eraser 6.0.8.2273 இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் அனைவருக்கும் ஒரு பிரச்சனை வரும் அந்த பிரச்சனை என்னவென்றால் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல Start மெனு இல்லாததே பிரச்சனை.  இதை தீர்ப்பதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதுதான் Start Menu XP இந்த மென்பொருளை நிறுவி உங்களுக்கு ஸ்டார்ட் பாருக்கு ஏற்றவாறு குரூப்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
பெரிய பெரிய வலை முகவரிகளை சிறியதாக மாற்ற நாம் bit.ly, goo.gl, is.gd,mcaf.ee போன்ற வலைத்தளங்களுக்கு சென்று பெரிய வலை முகவரிகளை சிறிய முகவரியாக மாற்றி மின்னஞ்சல் செய்வோம். 
அது போல செய்ய ஒவ்வொரு தளத்திற்கும் செல்லாமல் நம் வலை உலாவியிலிருந்து செய்ய சிறு மென்பொருட்கள் உள்ளது.  அதை நிறுவினால் போதும்.

பயர்பாக்ஸ் Firefox உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி இது கூகிள், மெக்காபி, மற்றும் பிட் லி போன்ற வலைத்தளங்கள் செல்லாமல் வலை முகவரிகளை சுருக்கலாம்.
 
பிட் லி வலை முகவரி சுருக்கி மென்பொருள் 
பயர்பாக்ஸ் Firefox  வலை உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி

கூகிள் குரோம் வலை உலாவியில் பிட்லி வலை முகவரி சுருக்கி நீட்சி சுட்டி 
இந்த நீட்சிகள் இரண்டும் பிட்லி வலைத்தளத்தை மட்டுமே  கொண்டு செயல்படுகிறது.
கூகிள் வலை முகவரி சுருக்கி நீட்சி குரோம் வலை உலாவியில் மட்டுமே செயல்படும். கூகிள் குரோமிற்கான நீட்சி சுட்டி

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.நன்றி மீண்டும் வருகிறேன்

5 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை