அனைத்துவித தளங்களில் இருந்தும் வேகமாக வீடியோக்கள் தரவிறக்க

நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம்.

 எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்வோம்.  இதில் உள்ள அனைத்திலும் ஒரு பிரச்சனை நேரம் மற்றும் தரவிறக்கும் வேகம் தான்.  ஒரு தளங்களில் ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்ய முயற்சி செய்தால் முதலில் தரவிறக்க 60 விநாடிகள் வரை காத்திருக்க வேண்டும்.  அதன் பிறகு தரவிறக்கம் செய்ய வேண்டும்.  அது மட்டுமல்லாமல் தரவிறக்க வேகம் மிகவும் குறைவாகவும் இருக்கும். 

இதை தீர்க்க ஒரு இலவச தளம் உள்ளது.  அதன் பெயர் fetch.io  இது ஒரு Cloud Computing முறையில் இயங்ககூடிய தளம்.

இந்த வலைத்தளம் மூலம் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் நேரக் காத்திருப்பு இல்லாமல் தரவிறக்க முடியும்.


இதில் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட தளங்களிலுருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

தரவிறக்கப்படும் வீடியோ கோப்புகள் நேரடியாக MP4 ஆக மாற்றி தரும்.



இந்த வலைத்தளத்தில் மூலம் நான் பத்து எம்பி உள்ள வீடியோ கோப்புகள் ஓரு மூன்று விநாடிகளுக்குள் தரவிறக்கித்தந்தது.

இணையத்தள சுட்டி



நண்பர்களே  இதுவரை நம்முடைய வலைத்தளத்தின் பெயரை தன்னுடைய வலைத்தளத்தின் டாப் டென்னில் இடம்பெறச் செய்த நண்பரும் பதிவருமான திரு. பிரபு என்கிற சாய்தாசன் அவர்களுக்கு எனது நன்றி

இனி நமது வலைத்தளத்தின் சுட்டிகள் அவருடைய டாப் டென்னில் வெளிவராது.

ஏன் வெளிவராது என்று கேட்பவர்களுக்கான பதில் இதற்கு முன் இட்ட பதிவான  பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க மற்றும் வைபை வாட்சர் உங்களுக்காக என்ற பதிவினை நீக்கினால் மட்டுமே நம் பதிவுகள் வெளிவரும் என்று கூறிவிட்டார்.   எனக்காக நிறைய உதவிகள் செய்தவர் அதுமட்டுமல்லாமல் நிறைய அறிவுரைகள் கூறியவர் இருந்தாலும் இதற்கான பதிலை நான் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.  இந்த பதிவினை நீக்கலாமா வேண்டாம் என்று நீங்களே கூறுங்கள்.  எனக்கு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன்.  வாசகர்களுடைய உதவியினை எதிர்பார்க்கிறேன். 

வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க அந்த குறிப்பிட்ட பதிவில் சில பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்கும் முறையை நீக்கி விட்டேன்.  தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
 

நன்றி  மீண்டும் வருகிறேன்

22 ஊக்கப்படுத்தியவர்கள்:

மாணவன் said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே!

குறையொன்றுமில்லை. said...

பயனுள்ள பதிவு நண்பரே. எழுத்துக்கள் மிகவும் சிறிய சைசில்
இருக்கின்றன. படித்து புரிந்து கொள்ள சிரமமா இருக்கே.

Mohamed Faaique said...

நீக்கி விடுவதே நல்லது. பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிப்பது அவ்ளோ நல்லதில்லை அதை நீன்னுவதில் எனக்கு கவலையில்லை. மற்றும் வைபை வாட்சர் அது தேவையான ஒன்றுதானே!!!! அதை நீக்குவது எனக்கு பிடிக்கவில்லை..

தக்வலுக்கு நன்றி

Shanmugam Rajamanickam said...

நீங்கள் அதை நீக்குவதை விட வேறு மாற்றங்கள் செய்து வெளியிடலாமா என் கேளுங்கள். முடியாது நீக்கிதான் ஆகணும்னு சொன்ன கண்டீப்ப நீக்கிருங்க.

Shanmugam Rajamanickam said...

ப்ரீயா இருந்த நம்ம கடைக்கு வாங்களே டீ வடை எல்லாம் சூடா இருக்கு சாப்பிட்டுகிட்டே பேசலாம்...........

வரதராஜலு .பூ said...

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி, நான் உறுப்பினராகிவிட்டேன்

senthil said...

how to save the downloaded files in our computer.

senthil said...

I downloaded the files but unable to save in our computer. give ideas to save in our computer. thanking you

Vadielan R said...

செந்தில் நீங்கள் fetch செய்த பிறகு Completed என்று வந்த பிறகு அதன் மேல் உள்ள ப்ளே பட்டனை அழுத்தினால் வலது பக்கம் Dowload this File மற்றும் Share this file என்று தோன்றும் அதன் மூலம் நீங்கள் உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்யலாம்.

senthil said...

Thank you vadivelan sir, but the options u said did not displayed. pls explain the reason. and give an idea. thanking you

calmmen said...

thanks boss,very useful

Unknown said...

நீக்கவேண்டாம்.ஏனெனில், இதெல்லாம் பெரிய விடயமல்ல; உலகம் தற்போது போகிக்கொண்டிருக்கும் வேகத்தை எண்ணும் போது.கட்டாயம் நீக்க வேண்டும்; ஏனெனில், அதனால் பிறரின் மனம் பாதிக்கப்படுகிறதே

ADMIN said...

பகிர்வுக்கு மிக்க நன்றி..! அப்படியே இங்கனயும் வந்துட்டு போங்களேன்..!

vikram said...

//தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.//

agreed.

palapavanam said...

neekkavum nanpare

bala said...

Not working , they are asking to pay $4 min to start with. Any other option ?

avvavm said...

That site looking pay site.

avvavm said...

இலவச சைட் இருந்தால் சொல்லுங்கள் goutham.

vadakaraithariq said...

உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன். பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_15.html

தாரிக்

Unknown said...

arumai. arumai. nanri!

Unknown said...

arumai. arumai. nanri!

ganesh said...

fetch.io தரவிறக்கம் செய்ய முடிவில்லை உதவுங்கள்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை