இந்தியாவிற்கு நான்காவது இடம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 470க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 

நண்பர்களே நாம் ஒரு காலத்தில் மழை வருமா என்று கேட்டால் ஒரு கையை நெற்றியில் வைத்துக் கொண்டு மேலே வானம் பார்த்து கிழக்கிலிருந்து மேகங்கள் வருகிறது அதனால் மழை வரும் என்று சொல்வார்கள்.  ஆனால் இப்பொழுது வீட்டில் இருந்த படியே மடிக்கணினியில் மழை வருமா வெயில் அடிக்குமா என்று பார்த்துக் கொள்கிறோம்.  உங்கள் கணினியில் தற்போதைய வானிலையை தெரிந்து கொள்ள  இந்த மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருள் அனிமேட்டட் முறையில் வடிவமைக்கப்பட்டது.  அத்துடன் இது ஒரு தொழில்முறை (Professional )மென்பொருளும் கூட பதினைந்து நாட்களுக்கு பிறகு தானாகவே இலவச மென்பொருளுக்கு மாறி விடும்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


நிர்சாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் இது.  இந்த மென்பொருளில் 124 வகையான சிறு மென்பொருள்கள் அடங்கியுள்ளன.  இதன் மூலம் நிறைய வேலைகள் செய்ய முடியும்.  இதை பதிமூன்று வகைகளாக பிரித்துள்ளனர். 

பாஸ்வேர்ட் ரெகவர் யுட்டிலிட்டி,  நெட்வொர்க் மானிட்டரிங் யுட்டிலிட்டி, வீடியோ/ஆடியோ யுட்டிலிட்டி, இணையதள யுட்டிலிட்டி, டெஸ்க்டாப் யுட்டிலிட்டி, டிஸ்க் யுட்டிலிட்டி, அவுட்லுக் / ஆபிஸ் யுட்டிலிட்டி, இது போன்று பிரிக்கப்பட்டுள்ளது.  இதை தரவிறக்க சுட்டி

124 மென்பொருளில் பட்டியல் மற்றும் விளக்கம் இங்கே சுட்டி


இந்தியா இணையம் உபயோகிக்கும் நாடுகளில் நான்கவது இடம் வகிக்கிறது.
ஆனால் இருக்கு மக்கள் தொகையில் இது மிகவும் குறைவு என்பது உண்மை.

கீழ் வரும் படங்களை பாருங்கள்





நண்பர்களே முடிந்தால் தமிழிசில் சேர்த்து விடவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பூஸ்ட் ஸ்பீடு 5 இலவசம் வீடியோ கன்வெர்டர் ஜிமெயிலில் உங்கள் வலைத்தளங்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 460க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 

நண்பர்களே உங்கள் கணினி வேகமாக இயங்கவும் நீங்கள் உபயோகிக்கும் அப்ளிகேசன்கள் மென்பொருட்கள் வேகமாக திற்க்கவும் இந்த மென்பொருள் உபயோகமாக இருக்கும் இதன் பெயர் பூஸ்ட் ஸ்பீடு 5 இந்த மென்பொருள் ஜூலை 31 வரை இலவசமாக வழங்கப்படுகிறது.

வன்தட்டில் தேவையில்லாத இடங்களில் உள்ள காலி இடங்களை செம்மை படுத்தி ஒழுங்குபடுத்துகிறது.

உங்கள் ரெஜிஸ்டரியை சுத்தப்படுத்த உதவுகிறது.

உங்கள் வன்தட்டில் உள்ள தற்காலிக கோப்புகள் மற்றும் தேவையில்லாத கோப்புகளை நீக்குகிறது.

உங்கள் கணினி தொடங்கும் போது தானாகவே தொடங்கும் மென்பொருட்களை நிறுத்த உதவுகிறது.

இந்த மென்பொருளை தரவிறக்க இங்கு சென்று முதலில் ஒரு கணக்கினை தொடங்குங்கள் சுட்டி

பின்பு அந்த கணக்கினுள் நுழைந்து இந்த சுட்டி கிளிக் செய்து இந்த பக்கத்தில் கொடுத்துள்ள மென்பொருளை தரவிறக்குங்கள்.  சுட்டி

பின்னர் மென்பொருளை நிறுவும் பொழுது Promo Code கேட்கும்  அப்பொழுது பின்வரும் கோடினை கொடுக்கவும் Promo Code -   CREATIVEMARK0610

பிறகு இந்த தளம் சுட்டி சென்று உங்கள் மென்பொருளை இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து அங்கு உங்கள் உண்மையான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருளுக்கான பதிவு செய்த சாவி ( License Key) கிடைக்கும்.





நீங்கள் நீக்கிய ( Deleted ) கோப்புகளை திரும்ப பெற ஒரு இலவச கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருள் விண்டோஸ் 2000 முதல் விண்டோஸ் 7 வரை அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும்.





உங்களிடம் உள்ள எந்த ஒரு வீடியோ ஆடியோ புகைப்படம் போன்றவற்றை உங்களுக்கு பிடித்த கோப்பாக மாற்ற பல்வேறு மென்பொருள் பயன்படுத்த வேண்டும் இவையனைத்தும் ஒரு ஒரு இலவச மென்பொருளில் செய்தால் எப்படியிருக்கும். இதுதன் அந்த இலவச மென்பொருள் பெயர் அடாப்டர் சுட்டி இந்த மென்பொருள் விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்குகளில் இயங்கும் வகையில் வடிவைமைக்கப்பட்டிருக்கிறது.


உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் இருக்கும் பொழுது மேலே Web Clip என்று விளம்பரங்கள் வரும் இந்த இடத்தில் விளம்பரத்திற்கு பதில் உங்களுக்கு பிடித்த வலைப்பதிவர்களின் முகவரி கொடுத்தால் அவர்கள் கடைசியாக எழுதிய பதிவின் தலைப்பு உங்களுக்கு செய்தியாக தரும்.  அதை எப்படி மாற்றுவது ???

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து வலது புறம் மேலே Settings என்பதனை தேர்வு செய்யுங்கள்.

அதனுள் Web Clips என்பதனை தேர்வு செய்யுங்கள்.

இதில் நிறைய தளங்கள் இணைத்திருப்பார்கள் உங்களுக்கு தேவையில்லாத தளங்களை எடுத்து விடுங்கள்

பிறகு உங்களுக்கு பிடித்த தளங்களின் முகவரியை உள்ளீடுங்கள் இனி உங்கள் இன்பாக்ஸில் உங்களுக்கு பிடித்த தளங்களின் பதிவின் தலைப்புகள் இன்பாக்ஸின் மேலே.

எனக்கு போன வியாழக்கிழமை அன்று பார்பர்ஷாப்பில் முடிவெட்டிவிட்டு இறங்கும் பொழுது தவறி விழுந்து காலில் ரத்தக்கட்டு மற்றும் சுளுக்கால் மிகவும் அவதியால் இருந்த பொழுது நம் நண்பர் ஜாக்கி  சேகர் அவர் போன் செய்தார் விஷயத்தை கேள்விபட்டவுடன் தனது அடுத்த பதிவில் என்னை பற்றி தெரிவித்து இருந்தார்.  உடனே நிறைய போன் கால்கள் மற்றும் மின்னஞ்சல்கள் எப்படி என்று அனைவருக்கும் விளக்கி சொன்னேன். கால் வலியுடன் வாயும் வலிக்கத் துவங்கி விட்டது.  என் உடல்நலத்தை விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி


இப்பொழுதெல்லாம் ஹேக்கர்களின் தொல்லை தாங்க முடியவில்லை நண்பர் சூர்யகண்ணனின் வலைத்தளம் திருடப்பட்ட பொழுது என்ன செய்வது என்றே தோன்றவில்லை உடனே அவருக்கு போன் செய்து ஆறுதல் கூறினேன்.  அவர் தன் புதிய முகவரிக்கு மாறியிருக்கிறார் அவரின் புதிய முகவரி இது சுட்டி  அத்துடன் நண்பர்கள் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை புதிய பதிந்தவுடன் ஒரு பேக் - அப் ஒன்றை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைனில் பணவர்த்தனை செய்பவர்கள் உங்கள் வங்கி கொடுத்துள்ள ஆன்லைன் விசைபலகையை பயன்படுத்துங்கள். மிகவும் பாதுகாப்பானது.

நண்பர்கள் யாராவது முடிந்தால் இந்த பதிவை தமிழிசில் இணைத்து விடவும் 
 
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பவர் ஆர்ச்சிவர் மற்றும் சில மென்பொருட்கள் இலவசமாக சட்ட ரீதியாக

ஒன்றரை லட்சம் ஹிட்ஸுகளையும், 450க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 
 
நண்பர்களே நீங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் நீங்கள் எப்படி விளையாடி இருக்கீறீர்கள் என்று அறிந்து கொள்ளவும்.  உங்களுக்கு பிடித்த காட்சியை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவும்  அல்லது அதை வீடியோ படமாக எடுத்து வைத்துக் கொள்ளவும் இந்த மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருள் திறந்தநிலை கட்டற்ற மென்பொருளாகும்.  மென்பொருளின் பெயர் டாக்ஸி



மென்பொருள் தரவிறக்க சுட்டி

டேட்டா டிவிடிக்கள் எழுத அனைவரும் அதிகமாக உபயோகப்படுத்துவது நீரோ என்னும் மென்பொருளாகும்.   இந்நிறுவனத்தினர் இப்பொழுது நீரோ லைட் 10 என்ற மென்பொருளை இலவசமாக தருகின்றனர் இதன் மூலம் CD-R, CD-RW, DVD±R, DVD±RW, DVD-RAM, DVD±R DL போன்ற வன்தட்டுகளில் எழுதலாம்.  நீரோ லைட் தரவிறக்க இங்கே செல்லுங்கள்.   மென்பொருள் சுட்டி



உங்கள் கணினியில் உள்ள முக்கிய போல்டர்களை லாக் செய்ய அத்துடன் உங்கள் கணினியில் யாரும் பென் ட்ரைவ் உபயோகிக்காத வண்ணம் தடுக்க இரண்டிற்கு சேர்த்து ஒரு மென்பொருள் பட்டூலாக். இது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆதரிக்கிறது.  மென்பொருள் தரவிறக்க சுட்டி




பைல்களை சுருக்க அனைவரும் விண்ஜிப் மற்றும் 7 ஜிப் உபயோகித்திருப்பீர்கள் அது போன்ற ஒரு மென்பொருள்தான் பவர் ஆர்ச்சிவர்.  இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்
ZIP, RAR, 7-ZIP, CAB, ACE, LHA (LZH), TAR, GZIP, BZIP2, BH, XXE, UUE, yENC, MIME (Base 64), ARJ, ARC, ACE, ZOO plus ISO, BIN, IMG, NRG  இத்தனை கோப்புகளையும் நீங்கள் விரிக்கலாம் சுருக்கலாம் என்றால் இதை காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.  

அது உண்மைதான் ஆனால் இந்த மாதம் அதாவது ஜுலை நான்காம் தேதி அன்று ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி இந்த மாதம் முழுவதும் இலவசமாக தருகின்றனர் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.  இந்த மென்பொருளில்  நிறைய விஷயங்கள் உள்ளன.  உபயோகிக்கும் போது உங்களுக்கே தெரியவரும். இங்கு சில இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் போல செயல்படும் மற்றும் சிடி டிவிட் விர்ச்சுவல் ட்ரைவாக மவுன்ட் செய்யலாம்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி

மீண்டும் சில மென்பொருட்களுடன் விரைவில் உங்களிடம் வருகிறேன். 



நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

இலவச ஆல் இன் ஒன் மென்பொருள் மற்றும் லைசென்ஸ் கீகள் மீட்டெடுக்க மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 425க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 
 
நண்பர்களே உங்கள் கணினியில் எந்த மென்பொருள் நிறுவி இருந்தாலும் அதற்கு நீங்கள் உரிமம் வாங்கி நிறுவி இருப்பீர்கள் சில நேரம் அந்த உரிம எண் உங்களிடம் தொலைந்து போயிருக்கலாம். ஆனால் அந்த மென்பொருள் அப்படியே உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் அந்த நிறுவப்பட்ட மென்பொருளிலிருந்து அந்த மென்பொருளுக்கான உரிம எண் தேடி எடுக்கலாம்.  அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.  மென்பொருள் சுட்டி 



இசை டிஜேக்களுக்கான ( DJ - Disc Jockey) மென்பொருள் மிகவும் விலை அதிகம் ஆனால் இலவசமாக அனைவரும் உபயோகப்படுத்தும் வகையில் சுலபமாக இருக்கிறது இந்த மென்பொருள்.  அதுவும் இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.  மென்பொருளின் பெயர் மிக்ஸ் என்பதாகும்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


இலவச வீடியோ கன்வெர்டர் வகையில் இதுவும் வருகிறது. மென்பொருள் பெயர் FreeMake Video Converter ஆனால் இந்த மென்பொருள் செய்யும் செயல்கள் அதிகம்.   மிகவும் நிறைய வகையான கோப்புகளை ஆதரிக்கிறது.  மென்பொருளில் இருந்து நேரடியாக யூட்யூபில் பப்ளிஷ் செய்யலாம்.  டிவிடி சிடி எரிக்கலாம்.  போட்டோ ஸ்லைடு ஷோ செய்யலாம்.  வீடியோ எடிட்டிங் செய்யலாம்.  மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பு வகைகளை தெரிந்து கொள்ள சுட்டி


இந்நிறுவனத்தின் இன்னும் ஒரு தயாரிப்பு FreeMake Video Downloader  இந்த மென்பொருள் வீடியோ தளங்களிலிருந்து படங்களை தரவிறக்க உதவுகிறது.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த இரண்டு மென்பொருளையும் சேர்த்து தரவிறக்க விரும்புவர்களுக்காக FreeMake Suite என்று வெளியிடப்படுகிறது.  தரவிறக்க சுட்டி


சில ஈஸ்டர் எக்

வலை உலாவியில் google.com திறந்து வைத்துக் கொள்ளுங்கள் Lol limewire இவ்வாறு டைப் செய்து "I'm Feeling Lucky" என்பதை கிளிக் செய்யுங்கள் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

வலை உலாவியில் google.com திறந்து வைத்துக் கொள்ளுங்கள் google loco இவ்வாறு டைப் செய்து "I'm Feeling Lucky" என்பதை கிளிக் செய்யுங்கள் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.


இதே போல பின் வரும் வார்த்தைகளை உலாவியில் google.com திறந்து அதில் டைப் செய்து "I'm Feeling Lucky" என்பதை கிளிக் செய்து பாருங்கள் என்ன நடக்கின்றது என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


  1. Google 133t 
  2. Google gothic 
  3. xx~klingon
  4. xx~piglatin
  5. Google easter egg
  6. Google Bearshar


நன்றி மீண்டும் வருகிறேன்

நான் இன்னும் சிறப்பாக புதிய மென்பொருளை தேடி எழுத வேண்டும் என்றால் உங்கள் பின்னூட்டம் மட்டுமே என்னை ஊக்கப்படுத்தும். 

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை