அனைத்து பதிவர்களும் உஷார் பதிவுகள் மட்டுமல்ல வலைத்தளமும் திருடப்படுகிறது

நண்பர்களே இதுவரை 370 பதிவுகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன்.  பாலோயர்களும் 500க்கு மேல் தொடர்கிறார்கள்.  அலெக்ஸா மதிப்பு பட்டியலும் மேலே சென்று கொண்டிருக்கிறது.  ஹிட்ஸ் இரண்டு லட்சத்தை தொடர போகிறது.  என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திங்கள் காலை 9:30 மணி அளவில் சூர்யா கண்ணன் தொலைபேசுகிறார். 

சூர்யா கண்ணன்
: வணக்க்ம் சார் என்ன சார் ஆச்சு உங்க தளத்திற்கு?

நான்  : ஏன் எனக்கு தெரிந்து இதுவரை ஒன்றுமில்லையே? ஏன் என்ன ஆச்சு பிரச்சனையா கண்ணன்?

சூர்யா கண்ணன்
:  இல்ல உங்க வலை தளத்தை ஒபன் செய்ய முடியலை அதான்???

நான் :  என்ன எர்ரர் வருது?

சூர்யா கண்ணன்:  உங்கள் தளம் ரிமூவ் செய்யப்பட்டுள்ளது என்று வருகிறது.

நான் :  அப்படியா?? (வாய்விட்டு சிரிக்கிறேன்)  அப்படி எல்லாம் இருக்காது கண்ணன்.

சூர்யா கண்ணன்:  இல்லை சார் நிஜம் தான் நீங்க வேணும்னா திறந்து பாருங்கள் என்றார்

நான்:  நான் ட்ரைவிங்கல இருக்கேன் நீங்களே ஒபன் பண்ணி பாருங்க என்று என் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் கொடுக்கிறேன்.

சூர்யா கண்ணன்:  வெரிபிகேசன் கோடு கேட்கிறது.  கொடுக்கட்டுமா

நான் :  ம்ம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன் என்றார்.

பிறகு கூப்பிட்டு பரவாயில்லை பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தீர்கள் இல்லை என்றால் உங்கள் கூகிள் அக்கவுண்ட் அனைத்தும் கண்டமாயிருக்கும் என்றார்.   பாஸ்வேர்ட் மாற்றிவிட்டேன் அதை SMS செய்கிறேன்

அப்புறம் அலுவலகத்திற்கு வந்து என் மெயில் ஐடியை திறந்து பார்த்த பிறகுதான் விபரீதம் புரிந்தது.  என் மெயில  ஐடியை ஹேக் செய்து என் ஐடி வழியாக என்னிடம் உள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் ஆபாச மெயில்கள் அனுப்ப பட்டிருந்தது.  அதற்கு ரிப்ளை வேறு எப்பா தாங்க முடியல எல்லாரும் என்ன அசிங்க அசிங்கமா திட்டி வேற மெயில் அனுப்பியிருந்தாங்க.  ஒரு நண்பி செருப்பு பிஞ்சிடும்னு வேற மெயில் அனுப்பிருந்தாங்க.  என்ன பண்றது எல்லாம் என் நேரம் நினைச்சி போய்க்கிட்டு இருக்கறேன்.

இவ்வளவு விளக்கமா ஏன் சொல்றேனா என் வலைத்தளம் திருட்டு போச்சி ஆனா மீட்டுட்டேன் இதற்கு காரணம் நண்பர் சூர்யா கண்ணன் மற்றும் முத்துவேல் தான்.  முத்துவேல் தொடர்பு கொள்ள வேண்டும் உங்கள் செல்பேசி எண் தரவும்.

நண்பர்கள் பதிவர்கள் பிளாக்கர்கள் அனைவரும் ஒரு பேக் - அப் மற்றும் மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்கள் பாஸ்வேர்டை மாற்றுங்கள். 


(ஆபாச மின்னஞ்சல் வர நான் காரணம் அல்ல எந்த ஒரு கபோதியோ என் வெப்சைட் ஹேக் பண்ணிட்டான் அவன் மட்டும் கிடைச்சான் அவன ஒரு கேள்வி நான் அந்த அளவு என்னடா சம்பாதிச்சிட்டேனு கேட்பேன்.  இதன் மூலமா வர வருவாய் என் பத்து நாள் பெட்ரோல் செலவுக்கு மட்டுமே சரியாக இருக்கிறது.  இந்த நிலையில இத ஏன் பண்ணேனு ஒரு கேள்வி மட்டுமே.  இருந்தாலும் இவன் மூலமா நாமளும் இந்த உலகத்தில ஒரு பிரபல பதிவர் என்ற அடையாளம் நிலை நிறுத்தப்பட்டிருப்பதால் மன்னித்து விடுவோம்.)


என் வலைத்தளம் திருடப்பட்டது பிரான்ஸ் என்ற நகரத்தில் இருந்து ஏன் என்றால் நான் ஜிமெயில் உபயோகித்த பிறகு அங்கிருந்து  உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.  அதை நிரூபிக்கும் படம் மேலே

செப்டம்பர் 1 எனது பிறந்த நாள் உங்கள் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களுக்காக தலை வணங்கி நிற்கின்றேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்

39 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை