நண்பர்களே முதலில் ஒரு நல்ல செய்தி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 15-11-2010 திங்கட்கிழமை அன்று இரவு 8:50 க்கு பிறந்தது. குழந்தை பிறந்தது ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனையில் மிக அருமையான கவனிப்புகள் அரசு மருத்துவமனையில். என் மனைவிக்கு பனிக்குடம் ஞாயிறு இரவு 11:30 மணிக்கு உடைந்து விட்டது. அது அவருக்கு தெரியவில்லை. பனிக்குடம்தான் உடைந்திருக்கிறது என்று என் மனைவிக்கு பனிக்குடம் உடைந்திருகிறது என்று தெரிந்தவுடன் பக்கதிலுள்ள தனியார் மருத்துவமனையில்தான் முதலில் சேர்த்தேன் அவர்கள் சிசேரியன் தான் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
உடனே என் மனைவி செவிலி தோழி ஒருவர் உடனே ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறினார். உடனே நானும் மதியம் ஒரு மணிக்கு மருத்துவமனியில் சேர்த்து விட்டேன். அவர்களும் சிசேரியன் தான் செய்ய வேண்டும் என்று கூறினாலும் அது கடைசி கட்டம் என்றும் முதலில் உங்கள் மனைவிக்கு இயற்கையான பிரசவ வலி வர மருந்துகள் தருகிறோம் என்று அழைத்து சென்றார்கள்.
அது போல மருந்துகள் கொடுத்த பின் இயற்கையான பிரசவ வலி இரவு 8 மணிக்கு வந்து 8:50 என் பெண் இந்த பூமியில் அவதரித்து விட்டாள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் என்னுடைய சக பதிவர்கள் செய்த உதவி மிகவும் பெரியது நம் நண்பர் வேலன் நலம் பெற பிரார்த்திப்போம் வாருங்கள் என்று ஒரு பதிவிட்டு என் குழந்தையும் மனைவியும் நலம் பெற பிரார்த்தித்தார்கள் இந்த நேரத்தில் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி இன்றைய பதிவிற்கு போவோம்.
நம் கணினியில் மால்வேர்கள் வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது உடனே இந்த தளத்திற்கு சென்று இந்த மென்பொருளை தரவிறக்குங்கள். இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஸ்கேன் செய்து எங்கு மால்வேர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய மால்வேர்கள் இருந்தாலும்.கண்டுபிடித்து கொடுத்துவிடும். இந்த மென்பொருள் காஸ்பர்ஸ்கை நிறுவனத்தினரால் தரப்படுவதால் இந்த மென்பொருள் மிகவும் நம்பிக்கையானது. மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருள் குறித்த வலைப்பக்கம் சுட்டி
உங்களிடம் உள்ள மைக்ரோசாப்ட் வேர்ட் 6.0 முதல் 2010 வரை உள்ள கோப்புகளை மைரோசாப்ட் நிறுவாமல் வெறும் விவர் வழியாக பார்க்க இந்த Viewer உங்களுக்கு உதவும். இதே போல் இவர்கள் எக்ஸல் கோப்புகளை பார்க்கவும் ஒரு மென்பொருள் தந்துள்ளார்கள்.
மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் எக்ஸல் கோப்புகளை வெறும் விவர் வழியாக பார்க்க மற்றும் பிரிண்ட் எடுக்க மட்டும் இதை பயன்படுத்தலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி
சில பல விளம்பரங்களை கிளிக் செய்யுங்க நீங்க படிக்கீறீங்க அதுக்கு நாங்க ரொம்ப உழைக்கிறோம் எங்கள் உழைப்பிற்கு உங்களால் முடிந்த கூலி கொடுக்கலாமே. விளம்பரங்களை கிளிக் செய்யுங்க அதோட ஓட்டும் போட்டுங்க..
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...