விஎல்சிக்கு மாற்று நூவ் ஹலோவின் சலுகைகள் உங்களுக்காக

நண்பர்களே தீபாவளி எல்லாம் நன்றாக கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  அக்டோபர் 31 அன்று அமெரிக்காவின் மிகவும் பிரபலமான விழாவான ஹாலோவின் என்ற விழா கொண்டாடுகிறார்கள்.  இதற்காக நிறைய நிறுவனங்கள் மென்பொருட்களை சில குறிப்பிட்ட தேதிகள் வரை இலவசமாக கொடுத்து வருகிறார்கள்.  இந்த முறை மூன்று மென்பொருட்கள் கிடைத்துள்ளது. 

WinX HD Video Converter  இது எந்த ஒரு வீடியோ கோப்பினையும் வேறு ஒரு வீடியோ கோப்பாக மாற்ற கூடியது.  Halloween Special Offer தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருள் இலவசமாக இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே!!!

WonderFox DVD Ripper இந்த மென்பொருள் உங்களுடைய டிவிடி கோப்பினை பின்வரும் கோப்புகளாக மாற்ற உதவுகிறது.  AVI, MP4, VOB, MKV, MPEG, MOV, FLV, WMV, 3G  இதுமட்டுமல்லாமல் டிவிடியிலிருந்து AVI கோப்பாக மாற்ற வெறும் 50 முதல் 100 நிமிடங்களில் முடித்து கொடுக்கிறது.  வேகம் விவேகம் சூப்பர் பாஸ்ட் அதுக்கு இதுதான் பெயர்.

Halloween Special Offer தரவிறக்க சுட்டி


uRex Video Converter Platinum இதுவும் ஒரு வீடியோ கன்வெர்ட்டர்தான்.   மிகவும் நன்றாக இருக்கும் ஒரு மென்பொருள்.  இந்த மென்பொருள் நவம்பர் 10 க்குள் தரவிறக்கி ஆக்டிவேட் செய்தால் மட்டுமே முழு உபயோக்ப்படுத்த முடியும்.

தரவிறக்க சுட்டி



கணினியில் எந்த ஒரு வீடியோவையும் பார்க்க நிறைய நண்பர்கள் உபயோக்ப்படுத்துவது விஎல்சி மீடியா ப்ளேயர் ஆகும்.  இந்த மென்பொருளை ஏன் உபயோகப்படுத்துகிறார்கள் என்றால் உபயோகப்படுத்துவதில் எளிது நிறைய பயன்கள் மற்றும் அதன் தரம்.  அதே போல விஎல்சி மீடியா ப்ளேயர் ஒரு போட்டியாளர் களத்தில் குதித்திருக்கிறார்கள். 

இவர்கள் வெளியிட்டிருக்கும் மென்பொருள் பெயர் நூவ் ( noow)  இந்த மென்பொருள் விஎல்சி விட நிறைய வேலைகள் செய்கிறது. எந்த ஒரு வீடியோ கோப்புகளையும் சுலபமாக கையாள்கிறது.  உயர்தர கோப்புகளை நல்ல தரத்துடன் காண்பிக்கிறது.


எந்த ஒரு வீடியோ தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்க இந்த மென்பொருள் மூலம் செய்ய முடிகிறது.


டொரண்ட் கோப்புகளையும் இந்த மென்பொருள் கையாளுகிறது.

உங்கள் கணினியில் உள்ள வீடியோ கோப்புகளை தேடவும் இந்த மென்பொருளால முடியும்.

இந்த மென்பொருளை காஸ்பர்ஸகை ஆன்டி வைரஸ் நிறுவனம் சோதித்து நம்பகமான மென்பொருள் என்று சான்றளித்துள்ளது.  இதனால் பயம் இல்லாமல் கணினியில் நிறுவலாம்.

காஸ்பர்ஸ்கை ஆன்டிவைரஸ் மென்பொருள் நிறுவனம் Noow மென்பொருளை சோதித்து சான்றளித்தது குறித்த சுட்டி

Noow மென்பொருளை தரவிறக்க சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் கோப்புகளை சோதிக்க 19 வகையான ஆன்டி வைரஸ்

நண்பர்களே டிவிடியிலிருந்து ISO கோப்பாக மாற்றவும் ISO கோப்பிலிருந்து டிவிடிக்கு எழுதவும் ஒரு இலவச மென்பொருள்.  இந்த மென்பொருள் CD, DVD5, DVD9, BD25 and BD50 இந்த வகைகளில் எழுத முடியும்.   
என்கிரிப்ட் செய்யப்பட்ட டிவிடிக்களையும் இந்த மென்பொருள் மூலம் நிறைய டிவிடி நகல்கள் உருவாக்க முடியும்.  இந்த மென்பொருள் அனைத்து விண்டோஸ் வெர்சன்களிலும் வேலை செய்யும். 


மென்பொருளின் பெயர் BDlot DVD ISO Master

இந்த மென்பொருள் அளவு 2.5எம்பி மட்டுமே

இந்த மென்பொருள் குறித்து மேலும் அறிந்து கொள்ள சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

உங்களிடம் உள்ள ஒரு கோப்பை நீங்கள் நிறுவியிருக்கும் வைரஸ் உள்ளதா என்று சோதிப்பீர்கள்.  அந்த சோதனை முடிவில் வைரஸ் இல்லை என்று வந்த பிறகு உங்கள் நண்பருக்கு பென் ட்ரைவ் அல்லது மின்னஞ்சல் மூலம் கோப்பினை அனுப்புகிறீர்கள்.  அதை அவர் தரவிறக்கும் பொழுது அவருடைய ஆன்டி வைரஸ் வைரஸ் இருக்குது என்று தெரிவித்தால் எப்படி இருக்கும்.  நாம் வைரஸ் சோதனை செய்த பிறகு  அவருடைய கணினியில் மட்டும் நமது கோப்பில் வைரஸ் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா??


ஒரு நிமிடம் பொறுங்கள் அனைத்து ஆன்டிவைரஸ்களும் எல்லா வைரஸ்களுக்கு எதிராக போராடுவதில்லை சில வைரஸ்களை தவறவிடுகின்றனர்.  அதனால் அவர்களை நொந்து கொள்வதில் பிரயோஜனம் இல்லை.  இதற்கு வழி இல்லையா என்றால் வழி இருக்கிறது.  மல்டிபிள் வைரஸ் ஸ்கேனர் கொண்டு சோதிப்பது.  இது மாதிரி மல்டிபிள் ஆன்டிவைரஸ் ஸ்கேனர் மென்பொருள் இல்லை என்று நினைப்பீர்கள் உண்மைதான்.  நிறுவும் வகையிலான பொருள் இல்லை ஆனால் ஆன்லைன் மென்பொருள் உண்டு.  ஆம்  இந்த வலைத்தளம் பெயர் மெட்டஸ்கேன் META SCAN
இந்த வலைத்தளம் 19 வகையான ஆன்டி வைரஸ்களை கொண்டு சோதித்து அறிகிறது.

AVG
Eset
F-Prot
Avira
McAfee
Quick Heal
Avast
Bit Defender
Bullgard
Calmwin
Emisoft
Kingsoft
Norman
Sophos
Norton
Virusbuster
Fortinet
F-Secure
GFI

மேலுள்ள அனைத்து வைரஸ் என்ஜின்கள் கொண்டும் சோதித்து அறியப்படுகிறது

இந்த வலைத்தளத்தில் 40 எம்பி வரை உள்ள கோப்புகளை சோதித்து அறியலாம்.

வலைத்தள முகவரி சுட்டி


அனைவருக்கும் ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

புகைப்படங்களை அனிமேசன் செய்ய மட்டுமல்ல இன்னும் நிறைய

நண்பர்களே உங்களுக்கு யூட்யூபில் இருக்கும் வீடியோவை தரவிறக்க எத்தனையோ மென்பொருட்கள் வலைத்தளங்கள் தெரியும்.  இருந்தாலும் யூட்யூப் வீடியோ இல்லாமல் வெறும் எம்பி3 ஆக தரவிறக்க ஒரு சூப்பரான வலைத்தளம் இருக்கிறது.  இதில் வெறும் யூட்யூப் லின்க் மற்றும் உங்கள் மெயில் முகவரி கொடுத்தால் போதும். 

அத்துடன் அதில் நான்கு வகையான அவுட்புட் பார்மெட்டில் எடுக்கலாம்.  MP3, OGG, AAC, WMA

மூன்று விதமான குவாலிட்டிகள் உண்டு.  Worst, Medium மற்றும் Best

யூட்யூப் வீடியோக்களை வெறும  ஆடியோ கோப்புகளாக மாற்ற இந்த வலைத்தளம் மிகவும் உதவியாக இருக்கும்.  நேரடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

குறிப்பு இந்த தளத்தில் விளம்பரங்கள் அந்த தளத்தினை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  படத்தில் உள்ளது போல தேர்வு செய்யுங்கள்.

Mobile Media Converter Online Link


தினம் ஒரு புதிய ஸ்கீரின் சேவர் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால் இந்த வலைத்தளம் உதவியாக இருக்கும்.  இந்த தளத்தில் புதிய புதிய ஸ்கீரின் சேவர்கள் தினமும் கிடைக்கிறது.

இதில் விண்டோஸ் மட்டுமல்லாமல் மேக் கணினிகளுக்கும் ஸ்கீரின் சேவர்கள் உள்ளது. 

இந்த தளத்தில் உள்ள வகைகளில் நீங்கள் தேர்ந்தெடுத்து தரவிறக்கிக் கொள்ளலாம். 

இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை. 

எந்த ஒரு தீங்கும் இல்லாத ஸ்கீரின் சேவர்கள்.

நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்கீரின் சேவரை ஒரே கிளிக்கில் டவுன்லோடு  செய்யும் வசதி உள்ளது.

இந்த தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தால் புதிய ஸ்கீரின் சேவர் வரும் பொழுது உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும். 

இந்த ஸ்கீரின் சேவர் தளத்திற்கு செல்ல  Daily New Free ScreenSaver Link


உங்களிடம் உள்ள புகைப்படங்களை வைத்து நீங்கள் GIF Animation பைல்கள் உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது.  இந்த தளத்தில் உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து உங்கள் தேவைக்கேற்ப GIF Animation கோப்பாக மாற்றி பெற்றுக் கொள்ளலாம்.  இதில் GIF Animation கோப்பாக உருவாக்கிய பிறகு நேரடியாக உங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.  அல்லது உங்கள் வலைப்பூவில் லின்க்கும் கொடுக்கலாம்.

இந்த தளத்தில் இருக்கும் சில வசதிகள்  Avatar எனப்படும் போரம்களில் உபயோகப்படுத்தும் அளவுக்கு போட்டோக்களை உருவாக்கித் தரும் வசதி.

புகைப்படங்களை ரீசைஸ் செய்யும் வசதி.

இதில் ஏற்கனவே GIF Animation ஆக உருவாக்கி வைத்திருக்கும் கோப்புகளை தரவிறக்க வசதியும் உள்ளது. 

உங்கள் கோப்புகளையும் GIF Animation அவர்களுடைய தளத்தில் வேண்டும் என்றால் மட்டும் சேமித்து வைக்கும் வசதியும் உள்ளது.

உங்கள் GIF Animation செய்த கோப்புகளை நண்பர்களுக்கு நேரடியாக அனுப்பும் வசதியும் உள்ளது.

இது போன்ற பல வசதிகள் உள்ளது. 

இந்த் தளத்திற்கு செல்ல PICASION Site Link


Google நிறுவனம் தற்பொழுது Google Translate பகுதியில் நம் தமிழும் சேர்ந்திருக்கிறது.  இதனால் ஓரளவுக்கு பிழைகள் இல்லாமல் தமிழில் இருந்து வேறு மொழிகளுக்கு மாற்ற்ம் செய்ய முடிகிறது.  நன்றி கூகிள்

Google Translate Link


தமிழர்களின் சார்பாக நன்றி கூகிள் நிறுவனத்திற்கும் இதற்காக உழைத்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் நன்றி Thanks To Google & Google Team



நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை