ப்ளீச் பிட் கீளினர் மற்றும் உங்கள் கண்ணை பாதுகாக்க எளிய மென்பொருள்

நண்பர்களே நம் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்க நிறைய முறைகளை பின்பற்றுவோம்.  அதில் ஒன்று சிசி கீளினர் உபயோகப்படுத்துவது.  இன்னொரு முறை நாமளே நீக்குவது தேவையில்லாத டெம்பரவரி கோப்புகள், இண்டெர்நெட் குக்கீகள் போன்றவற்றை நாமளே நீக்குவது.  நாமளே நீக்குவது என்பது மிகவும் சிரமமான விஷயம் என்பதால்தான் சிசிகீளினர் போன்ற மென்பொருட்கள் வந்து நம் கணினியின் பளுச்சுமையை குறைத்துள்ளது. 

சிசி கிளீனர் போன்ற ஒரு மென்பொருள்தான் ப்ளீச் பிட் Bleach Bit

இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பதால் இன்னும் நிறைய பேர் இதை மேம்படுத்துவார்கள் என்று கட்டாயம் நம்பலாம்.

இந்த மென்பொருள் 90க்கும் மேற்பட்ட அப்ளிகேசன்களை ஆதரிக்கிறது.

இந்த மென்பொருள் போர்ட்டபிள் மற்றும் கணினியில் நிறுவக்கூடிய வகையில் கிடைக்கிறது.

இந்த மென்பொருள் விண்டோஸ் அனைத்து வெர்சன்கள் மற்றும் லினக்ஸ் ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Bleach Bit Installer Download Link

Bleach Bit Portable Download Link


Bleach Bit Linux Download Link


கணினியில் தொடர்ச்சியாக வேலை செய்யும் நண்பர்கள் சிறிது நேரம் கூட ஓய்வு இல்லாமல் வேலை செய்வார்கள்.  இது போல் தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு சிறிது நேரம் ஒய்வு எடுக்க ஞாபகமூட்டும் ஒரு சிறு மென்பொருள் இது.  இந்த மென்பொருளை நிறுவி விட்டு இவ்வளவு நேரத்திற்கு நினைவூட்டுமாறு நேரத்தினை செட் செய்து கொண்டால் போதுமானது.  எந்த கலர் வேண்டுமோ அந்த கலர் செட் செய்து கொண்டால் நீங்கள் செட் செய்த நேரத்திற்கு நேரத்துடன் நீங்கள் செட் செய்த வண்ணமும் உங்கள் கணினி மாறி  உங்களை ஓய்வு எடுக்க சொல்லி நினைவூட்டும்.  இந்த மென்பொருளின் பெயர் ஃபேட் டாப் Fade Top



Fade Top Installer Download Link  452கேபி மட்டுமே

Fade Top Portable Download Link 190கேபி மட்டுமே


இது போல இன்னும் இரண்டு மென்பொருட்கள் உள்ளன்.  அதன் லின்குகள் கீழே கொடுத்துள்ளேன்.  உபயோகப்படுத்தி பாருங்களேன்.

WorkRave Download Link

Eyes Relax Download Link


ByTubeD

யூட்யூப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.  அந்த யூட்யூப் தளத்தில் கோடிக்கணக்கான வீடியோக்கள் உள்ளன.  அந்த வீடியோக்களில் சில கல்வி சம்பந்தமான வீடியோக்களும் உள்ளது.  ஒவ்வொரு வீடியோக்களும் பார்ட் 1 பார்ட் 2 என்று வரிசைப்படுத்தி ஒரு 20 பார்ட் வரை யூட்யூபில் வெளியிட்டுருப்பார்கள்.  அது போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான வீடியோக்களை தரவிறக்க இந்த பயர்பாக்ஸ் ஆடு ஆன் மிகவும் பேருதவியாக இருக்கும்.  இது போன்ற எந்த ஒரு வீடியோக்களையும் தரவிறக்க ஆடு ஆன் உபயோகமாக இருக்கும்.

Firefox ByTubeD Add-On Installer



Panda Antivirus Pro 2012

ஆன்டி வைரஸ் வரிசையில் பான்டா ஆன்டிவைரஸுக்கு தனி இடம் உண்டு எப்பொழுதுமே.  பான்டா ஆன்டிவைரஸ் நிறுவனம் இப்பொழுது ஆறு மாதத்திற்கான பான்ட ஆன்டிவைரஸ் ப்ரோ 2012னை இலவசமாக
வழங்குகிறது.  இந்த மென்பொருளை தரவிறக்க உங்களிடம் பேஸ்புக் கணக்கு இருந்தால் போதும்.  Facebook.com/PandaUSA இந்த லிங்கை கிளிக் செய்து செல்லுங்கள் கீழுள்ளது போல் ஒரு படம் வரும்

நீங்கள் Like Button கிளிக் செய்த பிறகு இது போல வரும்.

அவ்வளவுதான் உடனே தரவிறக்க வேண்டியதுதான்.

இது எதற்காக தெரியுமா இன்னும் நிறைய கஸ்டமர்களை தன் வசம் இழுக்க வேண்டி இது போன்று இலவசம் தருகிறார்கள் அதுவும் பேஸ்புக் கணக்கு வழியாக.

உங்களிடம் பேஸ்புக் கணக்கு இல்லை என்பவர்கள் இங்கே இருந்து நேரடியாக பான்ட ஆன்டிவைரஸ் ப்ரோ 2012னை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். Panda Antivirus PRO 2012 Download Link

அனைவருக்கும் நன்றி இது என்னுடைய 420வது பதிவு இது உங்களால்தான் என்னால் சாதிக்க முடிந்தது இன்னும் நிறைய எழுத உங்கள் கமெண்ட்ச் மற்றும் விளம்பர கிளிக்குகளும் மட்டுமே ஊக்கப்படுத்தும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை