நண்பர்களே நம் கூகிள் மெயில் ஒரு கோப்பை இணைக்கும் போது Attach a File என்பதை கிளிக் செய்து இணைப்போம். இந்த வசதியை மேம்படுத்தி டிராக் & ட்ராப் (Drog & Drop) முறையை செயல்படுத்தியிருக்கிறது. இந்த வசதியை பெற எந்த ஒரு மென்பொருளையும், ப்ளக் இன்களையும் நிறுவ தேவையில்லை. உங்களிடம் பயர்பாக்ஸ் 3.0 மேல் அல்லது கூகிள் குரோம் புதிய பதிப்பு நிறுவி இருந்தால் போதுமானது.
நாம் கூகிள் குரோம் நிறுவ முயற்சி செய்தால் முதலில் 500 கேபி அளவுள்ள கோப்புகள் நம் தரவிறக்கிய பிறகு அதை இயக்கி பின்னர் அந்த மென்பொருள் மூலம் முழு கூகிள் குரோம் உலாவி நிறுவப்படும். ஆனால் இணைய இணைப்பு இருக்கின்ற கம்ப்யூட்டருக்கு சரி இணைய இணைப்பு இல்லாமல் இருப்பவர்கள் என்ன செய்வது அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சிறு அலுவலகம் பெரு அலுவலகத்தில் ஒவ்வொரு கணிணியிலும் 20 எம்பி என்று தரவிறக்கினால் 50 கணிணிகளுக்கு 1 ஜிபி தரவிறக்க வேண்டியிருக்கும். இவர்களுக்காக சில முழு மென்பொருளையும் தரவிறக்க கூடிய மென்பொருட்களின் சுட்டி கொடுத்துள்ளேன் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் மென்பொருள் ஒரு முறை தரவிறக்கி நெட்வொர்க்கில் பகிர்ந்து கொள்ளலாம்.
கூகிள் எர்த் முழு மென்பொருள் தரவிறக்க சுட்டி
கூகிள் குரோம் உலாவி மென்பொருள் தரவிறக்க சுட்டி
யாகூ மெஸஞ்சர் மென்பொருள் தரவிறக்க சுட்டி
லைவ் மெஸஞ்சர் மென்பொருள் தரவிறக்க சுட்டி
லைவ் போட்டோ கேலரி மென்பொருள் தரவிறக்க சுட்டி
விண்டோஸ் லைவ் மென்பொருள் தரவிறக்க சுட்டி
ZooZoo Videos
சென்ற பதிவில் ஐபிஎல் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு வோடாபோனின் ஜுஜு மென்பொருள் கொடுத்திருந்தேன். இது போல் ஜூஜூ வீடியோ இருந்தால் கொடுங்கள் என்று நண்பர்கள் கேட்டனர் அவர்களுக்காக ஜூஜூ வீடியோக்கள்
வோடாபோனின் ஜுஜு வீடியோ தரவிறக்க இங்கே செல்லுங்கள்
வீடியோக்கள் தரவிறக்க
சுட்டி
இந்த தளத்தில் மொத்தம் 153 வீடியோக்கள் உள்ளன. இதில் ஆரம்ப கட்ட பக் இன நாய் தோன்றும் விளம்பரம் முதல் தற்போதைய ஜூஜூ வீடியோ வரை உள்ளது தரவிறக்கி கொள்ளுங்கள். 2007 முதல் வீடியோ முதல் இன்றைய வீடியோ வரை உள்ளது.
ஹார்னில் ஸ்டைல்பிக்ஸ்
ஒரு போர்டபிள் மென்பொருள் போட்டோஷாப் வேலைகளை செய்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள் சொல்லுங்கள். இன்று அறிமுகப்படுத்தும் இந்த மென்பொருள் ஒரு போர்டபிள் மென்பொருள் பெயர்
ஹார்னில் ஸ்டைல்பிக்ஸ்
இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்புகள் JPEG, PNG, GIF, TIF, TGA, BMP, TSP.
இந்த மென்பொருள் மூலம் ஸ்லைடுஷோ மூலம் படங்கள் பார்க்கலாம்.
சுலபமான படங்களை எடிட் செய்ய உதவும் டூல்கள்.
ஒரு புகைப்படத்திலிருந்து இன்னொரு புகைப்படத்திற்கு செல்ல குறுக்கு வழிகள் உதாரணம் Ctrl + tab கொடுத்தால் அடுத்த புகைப்படத்திற்கு செல்லும் அதே Ctrl + Shift + Tab கொடுத்தால் முன்னால் உள்ள புகைப்படத்திற்கு செல்லும்.
லேயர் முறை மற்றும் குருப்பிங் ஆதரிக்கும் தன்மை
ஒரு புகைப்படத்தில் உள்ள நான்கு நபர்களில் ஒருவரை மட்டும் வெட்டி எடுக்கும் வகையான ( Selection ) செலக்ஷன் டூல்ஸ்கள்
முப்பது வகையான புகைப்பட பில்டர்கள்
படம் வரைய உதவும் (Drawing Tools)
இந்த மென்பொருள் ஐம்பது வகையான மொழிகளை ஆதரிக்கிறது இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே ஆதரிக்கிறது. விரைவில் மாநில வாரியான மொழிகள் ஆதரிக்கும் என்று நம்பலாம்.
இது போல் நிறைய வசதிகள் நிறைந்த இந்த மென்பொருள் அனைவருக்கும் மிகவும் உபயோகமானது.
இந்த மென்பொருள் கணிணியில் நேரடியாக நிறுவும்படியான முறை மற்றும் சுலபமாக யுஎஸ்பி பென் ட்ரைவ்களில் எடுத்து சென்றும் எங்கும் உபயோகப்படுத்தும் முறை என்று இரண்டு கோப்புகள் தளத்தில் உள்ளது உங்கள் எது வேண்டுமோ அதை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
மென்பொருள்
தரவிறக்கச் சுட்டி
தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி நன்றி நன்றி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...