பைட்ஸ் கால்குலேட்டர்கள் மற்றும் பிடிஎப் படிக்க மாற்று வழி

நண்பர்களே இது வரை கூகிள் மேப் வழியாக ஒவ்வொரு நாட்டில் உள்ள நகரங்களையும் அதனுள் இருக்கும் ஊர்களையும் தெரிந்து கொண்ட நாம் இனி அந்த அந்த நகரங்களில் என்ன வானிலை நிலவுகிறது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த கூகிள் மேப்பில் அது மட்டுமல்லாமல் வானிலையினை சென்டிகிரேடாகவும் மற்றும் பாரன்கீட் என்னும் அளவையாகவும் தெரிந்து கொள்ள முடியும். 

இப்பொழுது மழை பெய்தால் கூடவே காற்றும் அடிக்கும்.  அந்த காற்றடிக்கும் வேகத்தினையும் கணக்கிட்டு கூறுகிறது கூகிள்.  அதன் வேகம் மைல் வேகத்தில் எவ்வளவு வேகம் என்றும் கிலோ மீட்டர் வேகத்தில் எவ்வளவு வேகம் என்றும் தெரிந்து கொள்ள முடியும். 

இது மட்டுமல்லாமல் அந்த நகரத்தில் வெப்கேம் இருந்தால் அதன் மூலம் வானிலை எப்படி இருக்கிறது என்றும் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்.

கூகிள் மேப் செல்ல சுட்டி

நம் கணினியில்  ஹார்ட் டிஸ்க் எவ்வளவு என்று கேட்டல் உடனே 500ஜிபி அல்லது 1 டிபி என்று கூறுவார்கள்.  அந்த 1 டிபி என்பது எத்தனை எம்பி என்று யாரையாவது கேட்டால் திணறுவார்கள்.  இந்த எம்பி ஜிபி டிபி போன்ற கணக்குகளை கால்குலேட் செய்ய ஒரு திறந்த நிலை மூலப்பொருள் (Open Source Applications) உள்ளது.  அதை தரவிறக்க சுட்டி

இதையே ஆன்லைனில் தெரிந்து கொள்ள இந்த சுட்டி

இனி உங்கள் நண்பர் கேட்டால் இதில் போட்டு உடனே சொல்லி விடுவீர்கள் அல்லவா?


பிடிஎப் ரீடர் நிறுவாமல் கூகிள் குரோம் வழியாகவே பிடிஎப் ரீடரில் படிக்கலாம்.  ஆம் உங்கள் கணினியில் Google Chrome புதிய பதிப்பு நிறுவப்பட்டிருந்தால் போதும்.  உங்களுடைய பிடிஎப் கோப்பின் மேல் வலது கிளிக் செய்யுங்கள்.

அதில் Properties தேர்வு செய்யுங்கள்.

Opens With என்ற இடத்தில் Change என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் Google Chrome.exe என்பதனை தேர்வு செய்யுங்கள்.
 
முடிந்தது இனி உங்கள் பிடிஎப் கோப்புகளை பிடிஎப் ரீடர் மென்பொருள் இல்லாமலேயே படிக்கலாம்.


ஒரு அடுத்த மாதம் விநாயகர்சதுர்த்தி வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் எத்தனை நாள் என்றால் மனதினுள் கணக்கு போட்டு சொல்வீர்கள்.  அதற்கு பதில் இந்த மென்பொருளை உபயோகியுங்கள்.  இந்த தேதியிலிருந்து இந்த தேதிக்கு எத்தனை நாட்கள் என்றால் உடனே இத்தனை மாதம் இத்தனை வாரம் இத்தனை நாட்கள் இருக்கிறது என்று கூறிவிடும்.

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

என்னுடைய பிறந்தநாளுக்கு எத்தனை நாட்கள் இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ள மேலுள்ள படத்தினை பாருங்கள்.

  நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை