நண்பர்களே உங்களிடம் இருக்கும் கைப்பேசிகள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது. சில நேரங்களில் அந்த கைப்பேசிகளில் இருக்கும் மெமரி கார்டுகளில் தான் அனைத்து புகைப்படங்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

சில நேரங்களில் நாம் கூட தவறுதலாக புகைப்படங்களை டெலிட் செய்ய நேரிடும். மெமரி கார்டுகளில் பைல் சிஸ்டம் கரப்ட் ஆகலாம். அந்த மெமரி கார்டுகள் சில நேரம் பழுது ஏற்பட்டு நீங்கள் எடுத்த புகைப்படங்கள் எதுவும் இல்லை என்று காட்டலாம். அல்லது அந்த கார்டினை பார்மெட் செய்ய வேண்டும் என்ற பிழைச் சொல் வரலாம்.
உதாரணத்திற்கு கீழ்க்கண்டவாறு பிழைச்சொற்கள் காட்டும்
Card not initialized
Media is not formatted. Would you like to format it now?
Read error
Memory card locked
Memory Card Corrupted
இது போன்ற பிழைச்சொற்கள் வரும் பொழுது என்ன செய்வது.
எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பீர்கள். ஆனால் இது போன்ற சமயத்தில் சில ரெகவரி மென்பொருட்கள் மூலம் எளிதாக மீட்டலாம்.
அது போன்ற ஒரு மென்பொருள்தான் போட்டோ ரெகவரி மென்பொருள்

இந்த மென்பொருளின் துணை கொண்டு மேற்கண்ட பிழைச்சொற்கள் போன்ற செய்திகள் வரும் பொழுது கூட உங்களுடைய போட்டோக்களை சுலபமாக மீட்டு எடுக்க முடியும்.
இந்த மென்பொருள் மூலம் ஹார்ட் டிஸ்க், அனைத்து வகையான மெமரி கார்டுகளில் இருந்து பழுதுபட்ட புகைப்படங்களை மீட்டு எடுக்க முடியும்.
இந்த மென்பொருள் நோக்கியா, சோனி, நிகான், கேனான் போன்ற புகைப்பட நிறுவனங்களின் கேமராவாக இருந்தாலும் மீட்டு எடுக்க முடியும்.
புகைப்படங்கள் மட்டுமல்லாமல் ஆடியோ வீடியோ கோப்புகளையும் மீட்டு தருகிறது.
புகைப்படத்தை மீட்டு எடுக்கும் முன் ப்ரிவீயு பார்த்த பிறகு மீட்டு எடுக்கும் வசதி உள்ளது.
போட்டோ ரெகவரி மென்பொருளை தரவிறக்கச் சுட்டி
தொடர்ந்து நல்ல பதிவுகள் எழுத உங்கள் ஊக்கமே என்னை இன்னும் பதிவுகள் எழுத தூண்டும் நண்பர்களே தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.
புதிய ஹாலிவுட் திரைப்படங்களின் வரிசையில் இப்பொழுது சக்கை போடு போடும் படம் பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் இந்த படத்தின் விண்டோஸ் 7 க்கான புதிய தீம் உங்களுக்காக 20+ HD Wallpapers உடன் தருகிறார்கள். இதனுடைய சில படங்கள் உங்கள் பார்வைக்கு கீழே





பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் தீம் தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...