இதுவரை தெரியாத புதிய மீடியா ப்ளேயர்கள்

நண்பர்களே மீடியா ப்ளேயர் என்றால் நமக்கு வருவது  விண்டோஸ் மீடியா ப்ளேயர் தான் இது மட்டுமல்லாமல் எத்தனையோ மீடியா மென்பொருட்கள் இருக்கிறது.   யாரும் இதுவரை பார்த்திராத மென்பொருட்கள் கூட மிகவும் அருமையாக இருக்கும்.   ஆனால் அறிமுகப்படுத்தும் வரைதான்  அது அறிமுகப்படுத்தி விட்டால் நம் வாசகர்கள் அதை பிடித்து ஒரு ரோடே போட்டு விடுவார்கள்.  எனக்கு தெரிந்த சிலமீடியா ப்ளேயர்கள் கீழே.  விஎல்சி, விண்டோஸ் மீடியா ப்ளேயர் போன்றவை எல்லாருக்கும் தெரிந்தது இது மட்டுமல்லாமல் நிறைய பேருக்கு தெரியாத சில மீடியா ப்ளேயர்கள் கொடுத்துள்ளேன்.




 AL Player

இந்த ப்ளேயர் பெயர் AL Player இந்த் AL என்பது Always அதாவது எதையும் ப்ளே செய்ய கூடியது என்பதாகும்.  இந்த மென்பொருள் நீங்கள் ப்ளே செய்யும் வீடியோ கோப்பின் கோடெக் என்பது இல்லை என்றால் கூட தானாகவே இணையத்தில் இருந்து தரவிறக்கி பதிந்து கொண்டு ப்ளே செய்ய கூடியது.

ஒரு கீ மூலம் நாம் சத்தத்தை Mute செய்ய முடியும்.  அந்த கீ ESC கீ ஆகும்.
திரும்ப அந்த கீயை உபயோகிப்பதன் மூலம் சத்தத்தினை திரும்ப பெற முடியும்.

இது ப்ளேயர் மட்டுமல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோக்களை எளிதாக ரெகார்ட் செய்யவும் செய்கிறது.

இந்த AL Player தரவிறக்க சுட்டி

AL Player குறித்த மேலதிக தகவல்கள் அறிய சுட்டி


DA Player

DA Player or DigiArty Player  இந்த ப்ளேயர் அனைத்து வகை பார்மெட் ப்ளே செய்கிறது.  இது உயர்தர கோப்புகள் 1080p கோப்புகளை ப்ளே செய்யும் பொழுதும் குறைந்த மின்சக்தியினை உபயோகிக்கிறது..




இந்த மென்பொருள் ப்ளூரே, டிவ் எக்ஸ், எம்கேவி போன்ற அனைத்து வகை கோப்புகளையும் கையாள்கிறது.

இதை தரவிறக்க சுட்டி

DA Player குறித்த மேலதிக தகவல்கள் அறிய சுட்டி


Daum Pot Player

இந்த மென்பொருளும் அனைத்தையும் ப்ளே செய்கிறது.  இந்த மென்பொருள் தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது என்பதுவே இதன் சிறப்பு.
Daum Pot Player மென்பொருளை தரவிறக்க சுட்டி

Daum Pot Player மென்பொருள் குறித்த மேலதிக தகவல்கள் அறிய சுட்டி


MPCSTAR Player

இந்த மென்பொருள் அனைத்து வகையான கோப்புகளையும் கையாள்கிறது.  நாம் வீடியோ ப்ளே செய்யும் பொழுது ஒரு சப்டைட்டில் மட்டுமே ப்ளே செய்து பார்ப்போம். ( பார்க்கவும் முடியும் )  இதில் இரண்டு சப்டைட்டில்களை தேர்வு செய்து பார்க்க முடியும்.

நீங்கள் எம்பி3 பாடல்களை கேட்கும் பொழுது இணையத்தில் இருந்து பாடல் வரிகளை தானாக இறக்கி காட்டும்.

MPCStar Media Player மென்பொருள் தரவிறக்க சுட்டி

MPCStar Media Player மென்பொருள் குறித்த மேலதிக தகவல்கள் அறிய சுட்டி

 Google Trick ஒன்று


நன்றி மீண்டும் வருகிறேன்.

படிக்கின்ற அனைவரும்  பிடித்திருந்தால் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.  பதிவில் வருகின்ற விமபரங்களை கிளிக் செய்யவும்.


» Read More...

கோர் மல்டிமீடியா சூட் மற்றும் புதிய படத்தின் வால்பேப்பர்கள்

நண்பர்களே புதிது புதிதாக வரும் மென்பொருட்கள் அனைத்தையும் முயற்சி செய்து பார்த்து அதில் ஏதாவது நமக்கும் உபயோகம் இருந்தால் உபயோகித்து பார்ப்பதில் தவறில்லையே என்பதால்தான் ஒரு மென்பொருள் வேலை செய்யும் வேலைகளை இன்னொரு மென்பொருள் செய்தாலும் அந்த மென்பொருளில் வேறு ஏதாவது ஒன்று கட்டாயம் புதிய உத்தி புகுத்தப்பட்டிருக்கும்.  அதனால்தான் ஒரே மாதிரியான நிறைய மென்பொருட்கள் நம் வலைத்தளத்தில் தருகிறேன்.  இது பலருக்கும் உபயோகம் இல்லாவிடிலும் சிலருக்காவது கட்டாயம் உபயோகம் இருக்கும் அந்த நோக்கிலே இந்த மென்பொருள் இங்கு பகிரப்படுகிறது.
 
இந்த மென்பொருள் ஒரு வீடியோ மற்றும் ஆடியோ கன்வெர்டர் மற்றும் ப்ளேயர் ஆகும்.  Video, Audio, Converter & Player, Browser All in One இதில் இன்னும் ஒன்றும் இருக்கிறது அதுதான் வலை உலாவி இந்த மென்பொருளினுள்ளேயே ஒரு வலை உலாவியும் இணைந்து வருகிறது.

இந்த மென்பொருள் அனைத்து வகையான வீடியோ ஆடியோ கோப்புகளை ஏற்றுக் கொள்ளும்

இதில் உங்களுக்கு என்று ஒரு Play List உருவாக்கி கொள்ளலாம்.

உங்கள் வன் தட்டில் உள்ள மீடியா கோப்புகளை தேடி படிக்க முடியும்.

இந்த மென்பொருளில் Tag Editorம் உண்டு.

இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்

Audio   -  (*.mp1;*.mp2;*.mp3;*.ogg;*.wma;*.asf;*.wav;*.mid;*.rmi;*.mod;*.s3m;*.xm;*.it)

Video    - (*.avi;*.mpeg;*.mpg;*.m1v;*.wmv;*.asf;*.asx;*.qt;*.mov;*.mpe;*.mpa;*.m2v*.mpg)

Images (*.Jpg;*.jpeg;*.Gif;*.Bmp)

இதை ஒரு மல்டிமீடியா சூட் என்றும் அழைக்கலாம்.

இந்த மென்பொருளின் பெயர் CORE Multimedia Suite.

மென்பொருளை தரவிறக்க சுட்டி



குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் படம் எடுப்பதில் Disneyக்கு நிகர் Disney தான் அந்த வகையில் சில மாதங்களுக்கும் முன் வெளி வந்த Alice in Wonderland திரைப்படத்தின்  வால்பேப்பர்கள், ஐகான்கள் மற்றும் போஸ்டர்கள் தரவிறக்கி உங்கள் கணினியில் வைத்து உங்கள் குழந்தைகளை அசத்துங்கள்.  Disney's Alice in Wonderland Wallpapers  தரவிறக்க சுட்டி






நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வீடியோ கன்வெர்டர் மற்றும் AMR to MP3 கன்வெர்டர் இலவசமாக

ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸுகளையும், 500க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

 நண்பர்களே உங்களிடம் உளள் புகைப்படங்களின் பிண்ணனியை நீக்க வேண்டும் என்றால் உங்களிடம் போட்டோஷாப் அல்லது அதற்கு இணையான மென்பொருள் வேண்டும்.  அந்த மென்பொருட்களும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டிதான் இருக்கும்.   புகைப்படங்களில் உள்ள பிண்ணனியை நீக்க என்று தனியாக ஒரு சிறு மென்பொருள் உள்ளது .  அதன் பெயர் பிக்ஸர் கட் அவுட் - Picture Cut Out இந்த மென்பொருள் மூலம் உங்களிடம் உள்ள புகைப்படங்களின் பிண்ணனியை சுலபமாக நீக்கலாம்.  இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 போன்ற இயங்குதளங்களில் இயங்கும்.

பிக்ஸர் கட் அவுட் - Picture Cut Out மென்பொருள் தரவிறக்க சுட்டி


மீண்டும் ஒரு இலவச வீடியோ கன்வெர்டர்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் AVI கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் MP4 கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் WMV கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் மொபைல் 3GP கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ கோப்பையும் DVD கோப்பாக மாற்றலாம்

எந்த ஒரு வீடியோ ஆடியோ கோப்பையும் MP3 கோப்பாக மாற்றலாம்


வீடியோ கோப்பை டிவிடியாக மாற்றிய பிறகு நேரடியாக டிவிடி (DVD Burn) தட்டில் எழுத முடியும்

இவ்வளவு வேலை செய்யும் மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

அதுதான் Freemake Video Converter இந்த வீடியோ கன்வெர்டரை தரவிறக்க சுட்டி

சுட்டி கொடுக்க மறந்துவிட்டேன் தவறு திருத்திய வால்பையனுக்கு நன்றி அருண்

உங்கள் மொபைலில் நீங்கள் உங்கள் குழந்தைகளின் குரல் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களின் குரல்கள் போன்றவற்றை ரெகார்ட் செய்து வைத்திருப்பிர்கள்.  அந்த கோப்புகள் அனைத்தும் பார்த்தால் நம் கணினியில் கேட்க முடியாது ஏன் என்றால் அது AMR கோப்பாகும்.  இந்த AMR வகை கோப்புகள் முதன் முதலி சோனி எரிக்சன் நிறுவனம் தான் கண்டுபிடித்து தங்கள் மொபைலில் பயன்படுத்தி வந்தனர். பின்னர் அனைவரின் பயன்பாட்டிற்கும் இந்த வகை கோப்பினை தந்தனர். இந்த வகை கோப்புகளை MP3 ஆக மாற்ற,  MP3ல் இருந்து AMR ஆக மாற்ற உங்களுக்கு இந்த சின்னஞ்சிறு மென்பொருள் உதவும் மென்பொருள்தரவிறக்க சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை