
நண்பர்களே Firefox 9.0.1 Version வெளியிடப்பட்டது. இதில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. Firefox 8.0 விட மிகவும் வேகமாக இருக்கிறது. 30 சதவீதம் வேகம் முன்னேறி இருக்கிறது. ஜாவா மற்றும் HTML 5 மிகவும் வேகமாக இயங்குமாறு மாற்றி அமைக்ப்பட்டிருக்கிறது.

Firefox 9.0.1 for Windows Download Link
Firefox 9.0.1 for Android Download Link
ஏற்கனவே ஒரு பதிவில் Kingsoft மைக்ரோசாப்ட்டுக்கு மாற்று என்று அறிமுகம் கொடுத்திருக்கிறேன். அதுகுறித்த சுட்டி அத்துடன் இந்த Kingsoft நிறுவனம் இப்பொழுது ஆன்ட்ராய்டு Android இயங்குதளத்திற்கென Kingsoft Office வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் என்ன விசேஷம் என்றால் இந்த மென்பொருளையும் இலவசமாகவே வழங்குகிறார்கள்.


இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி
இது போல தினம் ஒரு ஆண்ட்ராய்டு மென்பொருட்களை தமிழில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள் 365 நாட்களும் தினம் ஒரு ஆண்ட்ராய்டு மென்பொருள் என்று அறிமுகப்படுத்தி வருகின்றனர். இவர்கள் தளத்திற்கான சுட்டி இவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
கடந்த பதிவில் கூகிள் ட்ரிக் ஒன்று என்று அதோடு நிறுத்தி விட்டேன். அது என்ன வென்று தெரிந்து கொள்ளுங்களேன்.
உங்களுடைய பிரவுசரில் www.google.com திறந்து கொண்டு தேடுதல் பெட்டியில் let it snow என்று டைப் செய்து எண்டர் தட்டினால் உங்களின் தேடுதல் முடிவுகளுடன் பனி பொழிவும் கூடவே உங்கள் பிரவுசரில் நடைபெறும். முயற்சித்து பாருங்களேன்.

இன்னொரு ட்ரிக்
உங்களுடைய பிரவுசரில் www.google.com திறந்து கொண்டு
(sqrt(cos(x))*cos(200*x)+sqrt(
மேலுள்ள வாக்கியத்தை காப்பி செய்து பேஸ்ட் செய்து எண்டர் தட்டி பாருங்களேன்.
உங்கள் கணினியில் நீங்கள் இல்லாத பொழுது யாராவது எந்த கோப்பினையாவது நீக்கினார்களா என்று கண்டறிய ஒரு மென்பொருள் உள்ளது.
அந்த மென்பொருளின் பெயர் Deletion Extension Monitor என்பதாகும். இதன் வேலை உங்கள் கணினியில் எந்த நேரம் எந்த கோப்புகள் நீக்க்ப்பட்டது என்று குறித்து வைத்து மட்டும் கொள்ளும். இதனால் உங்கள் கணினியில் எந்த நேரத்தில் கோப்புகள் நீக்கப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த Deletion Extension Monitor மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் போர்ட்டபிள் மென்பொருளாகவும் கிடைக்கிறது.
இந்த மென்பொருள் நிறுவியிருப்பது கூட தெரியாமல் (Stealth Mode) ட்ரே ஐகானாக கூட இருக்காது என்பதால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
படிக்கிற நண்பர்கள் பதிவுகள் படித்திருந்தால் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூறுங்கள். அத்துட பின்னூட்டமிட்டால் இன்னும் ஊக்கம் கிடைக்கும். அத்துடன் விம்பரங்களை அழுத்தவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...