நண்பர்களே EASEUS Partition Master Professional Edition இலவசமாக தருகிறார்கள் இந்த மென்பொருளின் விலை $39.95 மதிப்புள்ளது. இந்த மென்பொருளின் மூலம் நிறுவப்பட்ட பார்ட்டிசன்களை மாற்றியமைக்கலாம். அந்த பார்ட்டிசன்களில் இருந்து ஒரு புதிய பார்ட்டிசன் உருவாக்கலாம். நீக்கப்பட்ட அல்லது டெலிட் செய்யப்பட்ட பார்ட்டிசன்களை மீட்டெடுக்கலாம். பூட்டபிள் சிடி / டிவிடி உருவாக்கலாம். இது போல் நிறைய செய்யலாம். இது முக்கியமாக சர்வீஸ் என்ஞ்சினியருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருள் வருகிற 22 அக்டோபர் 2010 வரை மட்டுமே இலவசமாக தருகிறார்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தரவிறக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்க சுட்டி

உங்களில் யார் யாருக்கு கார்கள் பிடிக்கும் கார்கள் பிடிக்காது என்பவர்கள் மிக சிலரே இருப்பார்கள். அவர்களுக்கான சில வால்பேப்பர்கள் கார்களின் வால்பேப்பர்கள் இதன் ரெசொல்யூசன் 1920×1200 அளவுகளில் இருக்கிறது. தரவிறக்க சுட்டி


பிடிஎப் புலி (PDF Tiger) இதன் பெயர் இந்த மென்பொருளில் இருந்து எந்த ஒரு கோப்பிலிருந்தும் பிடிஎப் கோப்பாக மாற்ற முடியும். இந்த மென்பொருள் 21 அக்டோபர் 2010 வரை இலவசம். மென்பொருளை
தரவிறக்க சுட்டி

மென்பொருளை தரவிறக்கி விட்டு கீழிருக்கும் இந்த ரெஜிஸ்ட்ரேசன் கோடு உபயோகித்துக் கொள்ளவும் எத்தனை பேர் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.
Registration Code:
R8Z8682LMDUAKHW
Word to PDF
PDF to Word Doc
PDF to JPG
Excel to PDF
PDF to RTF
PDF to BMP
PowerPoint to PDF
PDF to TXT
PDF to GIF
TXT to PDF
PDF to HTML
PDF to TIF
Images to PDF
PDF to SWF
PDF to PNG
All Printable Files to PDF
லைட்வொர்க்ஸ் என்ற நிறுவனம் பற்றி பல திரைப்படத்துறையினருக்கு தெரிந்திருக்கும். திரைப்படம் சம்பந்தப்பட்ட மென்பொருள். இந்த மென்பொருள் செய்யும் சாகசங்கள் நிறைய இருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் நிறைய திரைப்பட வேலைகள் செய்ய முடியும் அதுவும் மிக துல்லியமாக உதாரணத்திற்கு எடுத்த வீடியோக்களை வெட்ட வேறு வேறு வீடியோக்க்ளை ஒட்ட மிக்ஸிங் செய்ய இது போன்றவை சில. இந்த மென்பொருள் தற்பொழுது ஒபன்சோர்ஸ் ஆக வெளியிடப்பட இருக்கிறது. இது முதலில் பதிவு செய்பவர்களுக்கு ஒபன் சோர்ஸில் வெளியிடும் பொழுது உங்களுக்கு என்று ஒரு காப்பி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
இணையதள முகவரி

இந்த மென்பொருள் குறித்த மேலதிக தகவல்களுக்கு
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே உங்கள் சிறு குழந்தைகளுக்கு நீங்கள் ப்ரொஜக்ட் தயாரிக்கும் பொழுது உதவியாக இருப்பீர்கள் சில நேரம் அறிவியல் ப்ரொஜக்ட் செய்யும் பொழுது பூச்சிகளின் படங்கள் ஒட்ட சொல்லி அதை பற்றி நான்கு வரிகள் எழுத சொல்வார்கள். அப்பொழுது நமக்கு தெரிந்த கரப்பான் பூச்சிதான் ஞாபகம் வரும். பூச்சி வகைகளின் புகைப்படங்கள் அது குறித்த தகவல்கள் அனைத்தும் இந்த தளத்தில் உள்ளது. இத்தளத்தை பயன்படுத்தி உங்கள் ப்ரொஜக்ட்டை சிறப்பாக செய்து பெயர் வாங்கலாம். இந்த தளம் செல்ல
சுட்டி
முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலா வந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம். ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது. நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலா வருவோம். அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலா வந்தால் என்ன ஆகும். நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணினி தவிர வேற எந்த கணினிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது. மென்பொருள் தரவிறக்க
சுட்டி
ஆகஸ்ட் 1 - 7 வரை சர்வதேச தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் கட்டாயம் தாய்பால் பிறந்த குழந்தை குறைந்தது ஆறுமாதம் வரை தரவேண்டும்.
இது குறித்த சிறப்பு செய்திகள் கீழே குழ்ந்தைக்கு தாய்ப்பால் தருவதின் நன்மைகள் என்ன என்று குடுத்துள்ளேன். இந்த செய்தில் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

தாய்ப்பால் மற்ற உணவுகளைவிட ஒரு மேலான சத்துணவு ஆகும். தாய்ப்பால் கொடுப்பதால் பிள்ளை மற்றும் தாய் இருவரின் சுகாதார நலன்கள் பெருகும்.
* குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது. அப்படி செய்வது அவசியமும் கூட, ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் உபாதைகள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது. தாய்ப்பால் குழந்தையின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிர்ப்பு தன்மையை பெருக்கும்.
* தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும். ஏனெனில் தாய்ப்பாலானது மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் உள்சுவரில் நடு பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்துகிறது.
* பசும்பால் கொடுப்பது சில பிள்ளைகளுக்கு அலார்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. பசும்பாலோடு ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பது 100 சதம் பாதுகாப்பானது.
* தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றன என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.
* தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கான்சர் சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதை தடுக்கிறது.
* தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது. மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூலை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
* மற்ற தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களோடு ஒப்பிடும் போது குழந்தைபிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல்எடை குறைவு சீக்கிரம் ஏற்படுகிறது. உடல் எடை குறைவது தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மன அழுத்தத்தையும் மற்றும் பிள்ளைபேருக்குப்பின் ஏற்படும் உதிரப்போக்கையும் குறைக்க உதவுகிறது.
* குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது என நம்பப்படுகிறது. நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது மேற்க்கூறிய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.
* தாய்ப்பால் கொடுப்பது வசதியானது, இலவசமானது (மிகவும் முறைப்படுத்தப்பட்ட, பாட்டில் உணவு மற்றும் பிறகுழந்தையின் அத்தியாவசிய தேவையான உயர்வகை உணவகளுடன் ஒப்பிடும் போது ) மற்றும் தாய்ப்பால் எல்லாவற்றிலும் சிறந்தது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்சேய் உறவில் நல்ல இணக்கத்தை ஏற்பட உதவிசெய்கிறது. தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் அந்த அணைப்பு பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும் தேறுதலையும் ஏற்படுத்தும் ஒரு சிறந்த வழி.
உலகத்தின் மிகச்சிறிய பிடிஎப் ரீடர் என்று அறிமுகபடுத்திக் கொள்கிறது. உங்களுக்கு வெறும் பிடிஎப் கோப்பினை மட்டும் படிக்க வேண்டும் என்று நினைத்தால் இதை தேர்வு செய்யுங்கள். இதன் அளவு மற்ற பிடிஎப் ரீடர் மென்பொருட்களை விட மிகவும் குறைவு.
மென்பொருளின் அளவு 1.43 எம்பி அளவு மட்டுமே. பிடிஎப் ரீடரின் பெயரும் ஸ்லிம் பிடிஎப் ரீடர் பெயரைப் போலவே மென்பொருளும் சிறியது. பிடிஎப் ரீடரை தரவிறக்க சுட்டி விண்டோஸ் 7 ஆதரிக்கிறது 
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...