டொரண்ட் தரவிறக்க மட்டும் மென்பொருள் மற்றும் புதிய விளையாட்டுகள்

நண்பர்களே நாம் ஒவ்வொரு படங்களையும் டொரண்ட் என்னும் மென்பொருளை உபயோகப்படுத்தி தரவிறக்கி படம் பார்ப்பவர்கள்தான் அதிகம்.  அவ்வாறு  தரவிறக்கும் போது உங்கள் படங்கள் தரவிறக்கிக் கொண்டிருக்கும் பொழுதே தரவேற்றமும் செய்யும்.   அதாவது நீங்கள் ஒரு படத்தை Download செய்யும் போதே அந்த படம் Uploadம் செய்யப்படும்.  இது போல் நடக்காமல் இருக்க ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அதன் பெயர் BitThief பிட்தீப்.  இந்த மென்பொருள் மூலம் நீங்கள் எந்த ஒரு டொரண்ட் கோப்பையும் Upload செய்யாமல் Download மட்டும் செய்யலாம்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் இயக்க என்று தனித்தனி மென்பொருட்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பிட்தீப் இணையதள சுட்டி

நிறைய பேர் சிறு வயதில் சா பூ த்ரி என்ற விளையாட்டு ( விளையாட்டின் பெயர் சரிதானே தப்பாக இருந்தால் திருத்தவும்)  அது போன்று வெளிநாட்டில் Rock Paper Scissiors என்ற விளையாட்டு மிகவும் பிரசித்தமானது.  இந்த விளையாட்டு இப்பொழுது கணினியுடன் ஆடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த விளையாட்டை விளையாட சுட்டி

இந்த விளையாட்டு குறித்த மேலதிக தகவல்கள் குறித்த விக்கிபீடியா பக்கம் சுட்டி


விண்டோஸ் எக்ஸ்பியில் மற்றும் விண்டோஸ் 7க்கான கேட்ஜெட் பேக் தரவிறக்க சுட்டி

பல கடின வேலைகளுக்கிடையில் இந்த சிறு பதிவு மன்னிக்கவும் நண்பர்களே வேலை அதிகம்

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கவர்ச்சி வால்பேப்பர்கள் தரவிறக்க மென்பொருள் ( 18+ மென்பொருள்)

நண்பர்களே நிறைய பேர் பலவிதமான வண்ணப்படங்களை தங்கள் மானிட்டர் திரையை அலங்கரித்திருப்பார்கள்.  பெரியவர்கள் தாத்தா பாட்டிகள் தங்களுடைய பேரன் பேத்தி புகைப்படங்களை கொண்டு அலங்கரித்திருப்பார்கள்  அல்லது கடவுள் படங்களை வைத்து மானிட்டர் திரையை அலங்கரித்திருப்பார்கள்.  

அதே திருமணமானவர்கள் தங்கள் கணவர் / மனைவி / குழந்தைகள் / குடும்பமத்தின் புகைப்படத்தினை வைத்து மானிட்டர் திரையை அலங்கரித்திருப்பார்கள்.   திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் Bachelors  என்ன படங்களை வைத்து அலங்கரித்திருப்பார்கள்.   எனக்கு தெரிந்து தாய் தந்தை புகைப்படம் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு.  இவர்களுடைய திரையை அதிகம் அலங்கரிப்பது Celebrities என்னும் உலக புகழ்பெற்ற கவர்ச்சி நடிகைகளின் புகைப்படங்களை வைத்தே அலங்கரித்திருப்பார்கள்.  ( தாய் தந்தை முக்கியம் தோழர்களே ) 


இவர்களுக்கான மென்பொருள்தான் ஸ்கின்ஸ் பி.  இந்த மென்பொருளின் வேலை என்ன தெரியுமா Skins.be என்ற தளத்தில் உள்ள கவர்ச்சி படங்களை தற்காலிகமாக தரவிறக்கி உங்கள் மானிட்டர் திரையை அலங்கரிப்பதே இதன் சிறப்பம்சம். 

சரி இந்த மென்பொருளை நிறுவி விட்டீர்கள்  திடீரென்று உங்கள் திரையை அலங்கரித்திருக்கும் கவர்ச்சி நடிகையை பிடித்திருக்கிறது.  அந்த படத்தை ஒரு கோப்பாக சேமிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது.  இது ஒரு தற்காலிகமாக சேமிக்கும் மென்பொருள் என்று கூறியிருக்கிறேன் அல்லவா.  அதனால் இந்த மென்பொருளை நிறுவிய பிறகு உங்களுடைய விண்டோஸில்  My Pictures/Skins.be Downloader   என்ற போல்டரிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளில் எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை வால்பேப்பர்கள் மாற வேண்டும் என்றும் செட் செய்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் 27,000 வால்பேப்பர்கள் மற்றும் 870க்கும் மேற்பட்ட நடிகைகள் மாடலிங் கவரிச்சி புகைப்படங்கள் உள்ளது.

இது ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பதும் ஒரு சிறப்பம்சம்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

கவர்ச்சி நடிகைகள் எப்படி சாப்பிடுவார்கள் என்று பார்க்க விருப்பமா???  சுட்டி
கூகிள் குரோமில் இணையத்தில் உலாவரும்போது கூகிள் வீடியோ விளம்பரங்கள் வரும் அதை நிறுத்த மற்றும் இமேஜ்கள் இல்லாமல் திறக்க இணையத்தில் வரும் பாப் அப் விண்டோக்களை நிறுத்த கூகிள் குரோம்க்கான நீட்சி சுட்டி

இந்த மென்பொருள் கவர்ச்சி வால்பேப்பர்கள்  தரவிறக்கும் மென்பொருள் மட்டுமே.  இதுவும் ஒரு மென்பொருள் வகை என்பதால் கொடுத்திருக்கிறேன்.  ஆண்களுக்கு அதிகம் பயன்படும் என்ற காரணத்தால் கொடுத்திருக்க்கிறேன்.  இந்த Skins.be மென்பொருள் பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் பின்னூட்டத்தில் கூறலாம்.  நீக்கி விடலாம். 

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு வாய்ப்பாக அமையும்.  வெவ்வேறு நாடுகள்,  மாநிலங்கள் மற்றும் ஊர்களில் இருந்து வரும் ஒவ்வொருவரும் ஒரு முறை கிளிக் செய்தால் கூட போதுமானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.  பார்ப்போம் நண்பர்களின் உதவி எப்படி இருக்கிறது  யாரிடமும் பணம் கேட்கவில்லை  உழைத்து எழுதுகிறேன் சிறு உதவி செய்யுங்கள் என்றே கேட்கிறேன்.

நன்றி மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் சந்திப்போம்.

» Read More...

400வது பதிவு மற்றும் SARDU உருவாக்குவது எப்படி?

நண்பர்களே இன்று பலவகையான Rescue Disk களை இணைத்து ஒரு USB Disk வழியாக Boot செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம்.  இது போல் செய்வதால் என்ன பலன் என்றால் சுலபமாக எந்த கணினியிலும் Rescue Disk வழியாக Boot செய்யலாம்.   பலவகையான Anti Virus மற்றும் Utitlity களை எந்த கணினியில் Bootable ஆக கையாள முடியும்.   இந்த வகைய Rescue USB Disk களை கொண்டு எந்த ஒரு கணினியிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும். இது கணினி சர்வீஸ் என்ஜினியர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.


இது போன்ற USB டிஸ்க் தயாரிக்க குறைந்த பட்சம் 2 ஜிபி பென் ட்ரைவ் இருத்தல் நலம்.


முதலில் பென்ட்ரைவை பார்மெட் செய்து கொள்ளுங்கள்.

பென்ட்ரைவை பார்மெட் செய்யும் போது  FAT 32 ஆக பார்மெட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த சுட்டியில் இருந்து SARDU ( Shardana Antivirus Rescue Disk Utility) தரவிறக்கிக் கொள்ளுங்கள்.    SARDU தரவிறக்க சுட்டி

தரவிறக்கிய பிறகு அது ஒரு Zip கோப்பாக இருக்கும்.  அந்த கோப்பை Extract செய்து கொள்ளுங்கள்.

Extract செய்த போல்டரில் இருந்து SARDU மென்பொருளை திறக்கவும். 

அதில் உங்களுக்கு தேவையான அத்துடன் உங்கள் பென் ட்ரைவ் கொள்ளளவுக்குள் தேவையான ஆன்டி வைரஸ் மற்றும் யூட்டிலிட்டிகளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். 

தரவிறக்கம் முடிந்தவுடன் ஒருமுறை மென்பொருளை மூடிவிட்டு திரும்பவும் திறக்கவும். 
 


( நீங்கள் தரவிறக்கிய கோப்புகள் எந்த ட்ரைவில் நீங்கள் SARDU மென்பொருளை இயக்கினீர்களோ அந்த போல்டரில் ஒரு ISO என்ற போல்டர் உருவாகி அதற்குள் அனைத்து ஆன்டிவைரஸ் ரெஸ்க்யூ கோப்புகள் மற்றும் மென்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தேவையென்றால் அந்த கோப்புகளை தனி தனி சிடிக்களில் தனி தனி  ரெஸ்க்யூ சிடிக்களாகவும் எரிக்கலாம்.)

மென்பொருளை திறந்த பிறகு Make USB என்று வலது புறத்தில் உள்ள பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான் முடிந்தவுடன் உங்கள் ரெஸ்க்யூ யூஎஸ்பி ட்ரைவை எங்கு வேண்டுமானாலும் பூட்டபிளாக உபயோகபடுத்தலாம்.

இதற்கு தேவையானவை உங்கள் கணினியில் USB பென் ட்ரைவ் குறைந்தது 2 ஜிபி, இணைய சேவை,  மற்றும் SARDU மென்பொருள்.



இதுவரை பதிவு படித்தவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு


நண்பர்களே இது என்னுடைய 400வது பதிவு இதுவரை என்னை ஊக்கமளித்து மேலே கொண்டுவந்த அனைத்து நண்பர்களுக்கும் பதிவர்களுக்கும் இன்ட்லி, தமிழ்10, திரட்டி, தமிழ்மணம் போன்ற திரட்டி நண்பர்களுக்கும்.  எந்த ஒரு நன்றியையும் கூறமால் என் பதிவுகளை தாங்களாகவே Republish அல்லது காப்பி  பேஸ்ட் செய்த சக திருட்டு நண்பர்களுக்கும்.  ஒன்றுமே வருமானம் இல்லாத நிலையில் தமிழ் கம்ப்யூட்டர் என் வலைப்பூவில் வந்த பதிவுகளை தங்கள் புத்தகத்தில் வெளியிட்டு அதன் மூலம் சிறு வருமானம் தந்த தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கும் அதன் நிறுவனருக்கும்.  என்னால் திரட்டிகளில் இணைக்க முடியாத பொழுது என் பதிவுகளை திரட்டிகளில் இணைத்த கேபிள்ஷங்கர் மற்றும் வால்பையன் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள். 


இத்தனை பதிவுகளுக்கு பிறகு சில நூறு ரூபாய்கள் செலவு செய்து கூகிள் நிறுவனத்தின் கூகிள் ஆட்ஸ் வாங்கியிருக்கிறேன்.  இதன்  மூலமாவது சிறு வருமானம் வர வழி வகுத்துக் கொடுங்கள்.  இந்தியா மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்கள் பதிவுகளை படிக்கும் பொழுது தாங்கள் ஒரு கிளிக் செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.  செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.   என்றும் உங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் நாடி நிற்கும்  உங்களில் ஒரு நண்பன்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கணினியில் உள்ள போல்டர்களை கூகிள் டாக்ஸில் ஏற்ற எளிய வழி

நண்பர்களே அனைவருக்கும் ஒரு சூப்பரான வீடியோ மாற்றியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.   இப்போதிருக்கும் சூழ்நிலையில் கணினியில் வீடியோ மாற்றி இல்லாத கணினியை காண்பது அரிது.  ஆனால் இப்பொழுது இருக்கும் வீடியோ மாற்றிகளில் மிகவும் வேகமாக வேலை செய்யும் வீடியோ மாற்றியை கண்டுபிடித்து நிறுவுவது என்பது மிகவும் கடினம். 

அந்த வகையில் இந்த வீடியோ மாற்றி மிகவும் அருமையான வீடியோ மாற்றி

மிகவும் வேகமானது.

எந்த ஒரு நச்சுநிரல்கள் இல்லை.

எந்த ஒரு கோடேக்குகளும் நிறுவ வேண்டியதில்லை.

எந்த ஒரு வீடியோவிலும் இருந்து எந்த ஒரு வீடியோவிற்கும் மாற்ற முடியும்.

எந்த ஒரு ஆடியோவிலும் இருந்து எந்த ஒரு ஆடியோவிற்கும் மாற்ற முடியும்.

பலதரப்பட்ட வீடியோ கோப்புகளை ஒரு வகையான கோப்பாக மாற்றலாம்.

இந்த வீடியோ மாற்றி மென்பொருளின் பெயர் இயூசிங்

இயூசிங்  வீடியோ மென்பொருளை தரவிறக்க சுட்டி


ஒபரா 11 பீட்டா

ஒபரா இணைய உலாவி இப்பொழுது 11 பீட்டா ஆர்சி என்று வெளியிடப்பட்டுள்ளது.  இந்த ஒபராவின் புதிய இணைய உலாவியை சோதித்துப் பார்க்க இங்கே சுட்டி


கூகிள் போல்டரை வலையேற்ற

கூகிள் கோப்புகள் இணையதளத்தில் எப்பொழுதும் எந்த ஒரு கோப்புகளையும் பதிவேற்றலாம்.  ஆனால் போல்டர்களை பதிவேற்ற முடியுமா.  இது குறித்து நாம் எப்பொழுதும் சிந்தித்ததில்லை.  கூகிள் நிறுவனத்தினர் இந்த வசதியை தானாக செய்து தரும் வரை காத்திருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.  அவர்கள் செய்து தரும் வரை நாம் காத்திருக்க வேண்டாம்.  அதற்கான ஒரு மென்பொருள் இப்பொழுது வெளிவந்திருக்கிறது.

இந்த மென்பொருளின் பெயர்  சைபர்டக்  இந்த மென்பொருள் மூலம் சுலபமாக கூகிள் கோப்புகள் இணையத்தளத்தில் வலையேற்றலாம்.

இந்த மென்பொருளை நிறுவி திறந்து கொண்டு அதில் கூகிள் டாக்ஸ் என்பதனை தேர்வு செய்து உங்கள் பயனர் சொல் மற்றும் கடவுச் சொல்லை கொடுத்தால் உங்கள் கூகிள் கோப்புகள் தெரிய ஆரம்பிக்கும். மென்பொருளின் மேலே அப்லோடு என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியின் எக்ஸ்பளோரர் தோன்றும் அதில் உங்களுக்கு தேவையான போல்டரை தேர்ந்தெடுத்து அப்லோடு செய்தால் போதும் உங்கள் கூகிள் டாக்ஸ் கணக்கினுள் இந்த கோப்புகள் போல்டரோடு சேமித்து விடும்.

இது ஒரு FTP யாகவும் செயல்படும்.

இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருள் என்பதும் ஒரு சிறப்பு.

இந்த மென்பொருளில் கூகிள் மட்டுமல்ல அமேசான் S3 என்ற வலைத்தளத்திலும் கோப்புகளை பதிவேற்றலாம்

மென்பொருள் தரவிறக்க சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஆறு மாதத்திற்கான ஆன்டிவைரஸ் மென்பொருள் இணைய மையங்களில் உங்களுக்கு தேவையான மென்பொருள்

நண்பர்களே  உங்கள் கணினிக்கு ஆன்டி வைரஸ் மென்பொருள் ஆறுமாதத்திற்கான இலவச மென்பொருள் வேண்டுமா.  இந்த மென்பொருள் பெயர் புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி BullGuard Internet Security 10 இந்த மென்பொருள் ஆன்டிவைரஸ், ஆன்டிஸ்பைவேர், பயர்வால், ஸ்பம்பில்டர், உங்கள் கணினி டேட்டாக்களை அவர்கள் தளத்தில் பேக் - அப் எடுத்து வைக்க 5 ஜிபி இலவச இடம் போன்றவை இலவசமாக தருகிறார்கள்.


இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மற்றும் உண்மையான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும்.  அக்டோபர் பதினைந்தாம் தேதி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆறு மாத்திற்கான புல்கார்ட் இண்டெர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் இலவ்சமாக அனுப்பி வைப்பார்கள்.

இன்றே உங்களுக்கான மென்பொருளுக்கு உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு பனி விலங்கான பெங்குவின் தீம் இலவசமாக பெற இங்கே சொடுக்குங்கள்.  சுட்டி





நீங்கள் சில நேரம் உங்கள் கணினி இல்லாமல் உங்கள் கணினியில் அல்லது இணையதள மையங்களில் உலாவும் போது சில மென்பொருட்கள் இல்லாமல் தவிக்க நேரிடலாம்.  இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு ஆபாத்பாந்தவனாக உதவிக்கு ஓடி வருகிறது ஒரு இனிய இணைய தளம். இந்த இணையதளத்தில் உங்களுக்காக அனைத்து வகையான மென்பொருட்களும் உள்ளது. இணையதள சுட்டி  இதற்கு முதலில் 26 எம்பி அளவுள்ள ஒரு பிரவுசர் ப்ளக் இன் நிறுவ வேண்டும்.  இப்பொழுது எல்லாம் எல்லா இணையதள மையங்களிலும் மிக நல்ல வேகத்தில் இணையம் இருப்பதால் 26 எம்பி என்பது பெரிய விசயமே இல்லை என்பதால் முயற்சி செய்து பார்க்கலாம். 







நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

என்னுடைய புதிய இணையதளம் திறப்பு

நண்பர்களே நேற்று இரவு என் உறவினர் ஒருவருக்கு 7 பாட்டில் ரத்தம் தேவை என்று பஸ் மற்றும் ட்விட்டரில் போட்டிருந்தேன்.  நம் வலைப்பதிவர்கள் வால்பையன் மற்றும் கேபிள்ஷங்கர் அவர்களிடம் உதவுமாறு கேட்டிருந்தேன்.  அனைவரும் கட்டாயம் உதவுகிறோம் என்று வாக்களித்து அது போலவே செய்தனர்.  வால் பையன் ட்விட்டரில் போட்டு எனக்காக உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.  இரவு 11 மணி வரை அனைவரும் உதவுவதற்காக நட்புக் கரம் நீட்டினர். இறைவன் அருளாலும் நம் வலைப்பதிவர்களாலும் நம் வாசகர்களாலும் தேவையான ரத்தம் கிடைத்துள்ளது.  எமக்கு உதவிய வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள், மற்றும் பெயர் தெரியாத நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..



இந்த நல்ல நேரத்தில் என்னுடைய பழைய இணையதளத்திற்கு புதியதாக டொமைன் வாங்கி அதையும் புதிய இணையதளமாக மெருகேற்ற இருக்கிறேன்.  புதிய வலைத்தளத்தில் தொழில்நுட்பம் தவிர அனைத்தும் பதிவேற்றப்படும்.  நான் பஸ்ஸில் ரசித்தது ட்விட்டரில் படித்தது பிகாஸா மற்றும் மற்ற இணையதளங்களில் இருந்து எடுத்த புகைப்படங்கள் மட்டுமே அங்கே இடம் பெற போகிறது.  வித்தியாசத்தை விரும்புபவர்கள் அங்கே வரலாம்.  புதிய இணையத்தள சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அனைத்து வீடியோ இணையதளங்களிலும் இருந்து வீடியோக்களை தரவிறக்க

நண்பர்களே McAfee நிறுவனத்தில் இருந்து ஒரு வலைத்தளம் வந்திருக்கிறது.  இது வரை மிகப்பெரிய இணையத்தள லின்குகளை மற்றவர்களுக்கு அனுப்புகையில் பின்வரும் http://tinyurl.com/ http://tweetburner.com/ http://bit.ly/ http://snipurl.com/ http://budurl.com/ http://tr.im/ தளங்களில் ஏதாவது ஒரு தளம் வழியாக மிகப்பெரிய இணைய லின்குகளை சிறு லின்குகளாக மாற்றி அனுப்புவோம்.  இந்த தளங்களின் வரிசையில் புதிய McAfee நிறுவனம் ஆன்டிவைரஸ் எதிர்ப்பு மென்பொருளில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் அவர்களிடம் இருந்து வந்த இந்த தளம் மிகவும் பாதுகாப்பானது. இது இப்பொழுது Beta வரிசையில் வெளிவந்துள்ளது விரைவில் பீட்டாவிலிருந்து வெளிவருகிறது.  இணையதள முகவரி
Hulu, Veoh, Boxee, Joost, YouTube, Yahoo Video, CBS, MTV போன்ற தளங்களிலிருந்து வீடியோவை தரவிறக்க ஒரு அற்புதமான மென்பொருள் மிக சுலபமான மென்பொருள் StreamTransport.  நீங்கள் இந்த மென்பொருள் நிறுவினால் நீங்கள் காப்பி செய்யும் லிங்குகளை தானாகவே கண்டு கொள்ளும்.  இதன் வழியாக தரவிறக்கும் போது FLV, MP4 போன்ற கோப்பாக சேமிக்கவும் முடியும்.  தரவிறக்கம் முடிந்தவுடன் தானாக விண்டோஸ் ஷட்டவுண் செய்யும் வசதியும் உள்ளது.  இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம். இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


சிசிகிளினர் வரிசையில் இன்னும் ஒரு மென்பொருள் ஸ்லிம்கீளினர் இது இப்பொழுது பீட்டாவாக பொதுமக்களுக்காக இலவசமாக தரப்பட்டு வருகிறது.  இந்த மென்பொருள் மூலம் சிசிகீளினர் செய்யும் வேலைகள் மட்டுமன்றி கோப்புகளை பலதுண்டுகளாக பிரித்து நீக்கும் வசதியுண்டு.  இந்த மென்பொருளை முயற்சித்து பார்க்க சுட்டி

நேஷனல் ஜியோகிராபிக்ஸ் தொலைக்காட்சியை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  அந்த தொலைக்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வால்பேப்பர்களாக வெளியிட்டுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  அந்த வால்பேப்பர்களை தரவிறக்க இதோ ஒரு மென்பொருள் அவர்களிடமிருந்தே வருகிறது.  இது பழைய வால்பேப்பர்க்ளையும் புதியதாக வரும் வால்பேப்பர்களையும் காட்டுகிறது.  உங்களுக்கு பிடித்ததை தரவிறக்கிக் கொள்ளலாம்.  50000க்கும் மேற்பட்ட வால்பேப்பர்கள் உள்ளது.  மொத்தமாக தரவிறக்கும் வசதி உள்ளது.  உங்களுக்கு தேவையான அளவுகளிலும் தேடி எடுத்துக் கொள்ளலாம். HD எனப்படும் உயர்தர வால்பேப்பர்களும் இதில் அடங்கும்.  இந்த மென்பொருளை இயக்க வேண்டாம் நேரடியாக இயக்கலாம்.  இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

 


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இணையதளத்தில் மால்வேர் லின்குகள் கண்டறிய மற்றும் ஹாலிவுட் திரைப்பட வால்பேப்பர்கள்

நண்பர்களே நீங்கள் ஆங்கில திரைப்படங்களை விரும்பி பார்ப்பவரா அத்துடன் அந்த படத்தை பார்த்தவுடன் உடனே உங்கள் கணினி திரையில் அந்த ஆங்கில படத்தின் வால்பேப்பரை தரவிறக்கி உடனே மாற்றிவிடுவீர்களா??  அப்படி என்றால் உங்களுக்குதான் இது அதிகம் உபயோகப்படும்.  

இந்த தளத்திலிருந்து நிறைய புதிய ஆங்கில படங்களின் வால் பேப்பர்கள் அனைத்தும் ஒரே தளத்தில் இருந்து தரவிறக்க இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
 


மேலுள்ள படங்கள் போல ஆயிரக்கணக்கில் அனைத்து ஆங்கில படங்களின் வால்பேப்பர்கள் இங்கு கிடைக்கும். இணையதள சுட்டி


ஜிமெயில் குரல் சேவை ஆரம்பித்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1,000,000 கால்கள் பேசப்பட்டுள்ளன என்பது இணையம் புழங்குபவர்களிடைய ஆச்சரியப்பட வைத்து வாய் பிளக்க வைத்துள்ளது.  இந்த வேகத்தில் சென்றால் கூகிளின் குரல் சேவை ஸ்கைப்பை பின்னுக்கு தள்ளி விடும் என்பது கண்கூடாக தெரிகிறது.  கூகிளின் குரல் சேவை பெற மற்றும் மேலும் அறிந்து கொள்ள சுட்டி

நீங்கள் ஒரு தளத்திற்கு செல்கிறீர்கள் அந்த தளத்தில்  மால்வேர் அல்லது ஸ்பைவேர் என்பதை தெரிந்து கொள்ள அந்த இணையத்தளத்தில் நுழையாமல் கண்டுபிடிக்க முடியாது.  அப்படி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.  இந்த மென்பொருளை யுஎஸ்பி மூலம் எங்கு எடுத்து செல்லலாம். 

மென்பொருளை திறந்தால் URL என்ற பெட்டியில் நீங்கள் நுழைய போகும் தளத்தின் முகவரியை கொடுங்கள்.  பின்னர்  Go என்ற பட்டனை அழுத்துங்கள் இனி கீழுள்ள பெட்டியில் நீங்கள் கொடுத்த தளத்தில் உள்ள லின்க்குகள் அனைத்தும் நல்லவையா அல்லது உங்கள் கணினிக்கு தீங்கு விளைவிக்க கூடியவையா என்று காட்டி கொடுத்து விடும்.  நல்லவை என்றால் நீல வண்னத்திலும். கெட்டவை என்றால் சிகப்பு நிறத்திலும் இருக்கும்.


நம்மில் நிறைய பேர் சிறப்பு எழுத்துக்களை (Special Character) பார்த்திருப்போம் உதாரணத்திற்கு © இந்த எழுத்துக்கு நாம் Copy Right என்று கூறுவோம்.  இது அனைவருக்கும் தெரியும்.  இது போன்ற சிறப்பு எழுத்துக்களுக்கு என்ன பெயர் என்று தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.  இணையதள சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை