இணையதளத்தில் மால்வேர் லின்குகள் கண்டறிய மற்றும் ஹாலிவுட் திரைப்பட வால்பேப்பர்கள்

நண்பர்களே நீங்கள் ஆங்கில திரைப்படங்களை விரும்பி பார்ப்பவரா அத்துடன் அந்த படத்தை பார்த்தவுடன் உடனே உங்கள் கணினி திரையில் அந்த ஆங்கில படத்தின் வால்பேப்பரை தரவிறக்கி உடனே மாற்றிவிடுவீர்களா??  அப்படி என்றால் உங்களுக்குதான் இது அதிகம் உபயோகப்படும்.  

இந்த தளத்திலிருந்து நிறைய புதிய ஆங்கில படங்களின் வால் பேப்பர்கள் அனைத்தும் ஒரே தளத்தில் இருந்து தரவிறக்க இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
 


மேலுள்ள படங்கள் போல ஆயிரக்கணக்கில் அனைத்து ஆங்கில படங்களின் வால்பேப்பர்கள் இங்கு கிடைக்கும். இணையதள சுட்டி


ஜிமெயில் குரல் சேவை ஆரம்பித்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1,000,000 கால்கள் பேசப்பட்டுள்ளன என்பது இணையம் புழங்குபவர்களிடைய ஆச்சரியப்பட வைத்து வாய் பிளக்க வைத்துள்ளது.  இந்த வேகத்தில் சென்றால் கூகிளின் குரல் சேவை ஸ்கைப்பை பின்னுக்கு தள்ளி விடும் என்பது கண்கூடாக தெரிகிறது.  கூகிளின் குரல் சேவை பெற மற்றும் மேலும் அறிந்து கொள்ள சுட்டி

நீங்கள் ஒரு தளத்திற்கு செல்கிறீர்கள் அந்த தளத்தில்  மால்வேர் அல்லது ஸ்பைவேர் என்பதை தெரிந்து கொள்ள அந்த இணையத்தளத்தில் நுழையாமல் கண்டுபிடிக்க முடியாது.  அப்படி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.  இந்த மென்பொருளை யுஎஸ்பி மூலம் எங்கு எடுத்து செல்லலாம். 

மென்பொருளை திறந்தால் URL என்ற பெட்டியில் நீங்கள் நுழைய போகும் தளத்தின் முகவரியை கொடுங்கள்.  பின்னர்  Go என்ற பட்டனை அழுத்துங்கள் இனி கீழுள்ள பெட்டியில் நீங்கள் கொடுத்த தளத்தில் உள்ள லின்க்குகள் அனைத்தும் நல்லவையா அல்லது உங்கள் கணினிக்கு தீங்கு விளைவிக்க கூடியவையா என்று காட்டி கொடுத்து விடும்.  நல்லவை என்றால் நீல வண்னத்திலும். கெட்டவை என்றால் சிகப்பு நிறத்திலும் இருக்கும்.


நம்மில் நிறைய பேர் சிறப்பு எழுத்துக்களை (Special Character) பார்த்திருப்போம் உதாரணத்திற்கு © இந்த எழுத்துக்கு நாம் Copy Right என்று கூறுவோம்.  இது அனைவருக்கும் தெரியும்.  இது போன்ற சிறப்பு எழுத்துக்களுக்கு என்ன பெயர் என்று தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.  இணையதள சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

prince said...

மிகவும் பயனுள்ள பதிவு! குறிப்பாக அந்த மால்வேர் பற்றியது பயனுள்ளதாக அமைந்தது. தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்!!!

Mohamed Faaique said...

about malewares.... gud article....

GUNA said...

Please provide me malware detecting software link (not given in article)

Anonymous said...

Please provide me malware detecting software link (not given in article)

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை