நண்பர்களே நம் கணினியில் ஆன்டிவைரஸ் வேண்டும் என்றால் முதலில் நம் கணினியில் குறைந்த பட்சம் 512 எம்பி நினைவகம் வேண்டும் அதோடு ப்ரோஸசர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மேல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நம் கணினியில் ஆன்டிவைரஸால் வேலை செய்ய இயலும் 512 எம்பி நினைவகம் நம் பென்டியம் 4 வகைகளில் மட்டுமே அப்கிரேடு செய்ய இயலும் அதோடு அந்த வகை கணினிகளுக்கு மட்டுமே நினைவகங்கள் மார்கெட்டுகளிலும் கிடைக்கிறது அப்பொழுது பென்டியம் 3 மற்றும் அதற்கு முந்தைய கணிகளில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவி விட முடியும் ஆனால் ஆன்டி வைரஸ் நிறுவினால் உங்கள் கணினியில் நினைவகத்தை மேம்படுத்துங்கள் என்று பிழைச்சொல் வரும். சரி இது போன்ற பயனர்களுக்காகவே ஒரு ஆன்டி வைரஸ் உள்ளது. அதுவும் ஒரு வருட சட்டரீதியான இலவச உரிமத்துடன் தந்தால் யாராவாது வேண்டாம் என்று சொல்வீர்களா? யாரும் சொல்ல மாட்டீர்கள். இன்னும் பென்டியம் 3 வகை கணினிகள் உபயோகிக்கும் நண்பர்களையும் வாசகர்களையும் எனக்கும் உங்களுக்கும் தெரியும்.
அவர்களுக்காக இந்த மென்பொருள். இந்த மென்பொருள் மற்ற ஆன்டி வைரஸக் காட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது என்பதை மற்ற ஆன்டிவைரஸுடன் சோதித்து பார்க்கப்பட்டதில் இது மிகவும் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் நிறுவ உங்கள் கணினியில் குறைந்தது 450 மெகாஹெர்ட்ஸ் உள்ள ப்ரோஸசர், 256எம்பி நினைவகம், 200எம்பி கொள்ளளவுக்கு மேற்பட்ட வன் தட்டு வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பி அதற்கு மேற்பட்ட அனைத்து விண்டோஸ்களிலும் சிறப்பாக செயல்படும்.
இந்த மென்பொருளை தரவிற்க்க சுட்டி
டொரண்ட் வழியாக திரைப்படங்கள் தர விறக்குவோம் அதற்கு நாம் ஒவ்வொரு தடவையும் இணைய உலாவியை திறந்து அதன் வழியாக டொரண்ட் தேடுபொறி வழியாக நமக்கு தேவையான திரைப்படங்களை தேடி அதன் பிறகு அதை தரவிறக்குவோம். சில நேரங்களில் அந்த திரைப்படங்களின் தரம் நன்றாக இருக்காது.
இவை அனைத்தையும் ஒரே மென்பொருள் வழியாக தேடவும் உயர்தர திரைப்படங்களை தரவிறக்கவும் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாகவும் சுலபமாகவும் உள்ளது உபயோகித்து பார்த்ததில் மிகவும் பிடித்து போன மென்பொருளாக எனக்கு ஆகிவிட்டது. இந்த மென்பொருளை நீங்கள் உபயோகித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு மென்பொருளை தரவிறக்க சுட்டி இந்த மென்பொருளின் பெயர் ZButterfly.
உங்கள் ஊக்கமே எனக்கு சிறந்த மருந்து இன்ட்லியில் ஓட்டும் பதிவில் பின்னூட்டம் இட்டால் இன்னும் சிறப்பாக எழுத ஊக்கமாக இருக்கும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...