நண்பர்களே நேற்று இரவு என் உறவினர் ஒருவருக்கு 7 பாட்டில் ரத்தம் தேவை என்று பஸ் மற்றும் ட்விட்டரில் போட்டிருந்தேன். நம் வலைப்பதிவர்கள் வால்பையன் மற்றும் கேபிள்ஷங்கர் அவர்களிடம் உதவுமாறு கேட்டிருந்தேன். அனைவரும் கட்டாயம் உதவுகிறோம் என்று வாக்களித்து அது போலவே செய்தனர். வால் பையன் ட்விட்டரில் போட்டு எனக்காக உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இரவு 11 மணி வரை அனைவரும் உதவுவதற்காக நட்புக் கரம் நீட்டினர். இறைவன் அருளாலும் நம் வலைப்பதிவர்களாலும் நம் வாசகர்களாலும் தேவையான ரத்தம் கிடைத்துள்ளது. எமக்கு உதவிய வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள், மற்றும் பெயர் தெரியாத நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..
இந்த நல்ல நேரத்தில் என்னுடைய பழைய இணையதளத்திற்கு புதியதாக டொமைன் வாங்கி அதையும் புதிய இணையதளமாக மெருகேற்ற இருக்கிறேன். புதிய வலைத்தளத்தில் தொழில்நுட்பம் தவிர அனைத்தும் பதிவேற்றப்படும். நான் பஸ்ஸில் ரசித்தது ட்விட்டரில் படித்தது பிகாஸா மற்றும் மற்ற இணையதளங்களில் இருந்து எடுத்த புகைப்படங்கள் மட்டுமே அங்கே இடம் பெற போகிறது. வித்தியாசத்தை விரும்புபவர்கள் அங்கே வரலாம். புதிய இணையத்தள சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...