அனைத்து பதிவர்களும் உஷார் பதிவுகள் மட்டுமல்ல வலைத்தளமும் திருடப்படுகிறது

நண்பர்களே இதுவரை 370 பதிவுகளுக்கு மேல் பதிவிட்டிருக்கிறேன்.  பாலோயர்களும் 500க்கு மேல் தொடர்கிறார்கள்.  அலெக்ஸா மதிப்பு பட்டியலும் மேலே சென்று கொண்டிருக்கிறது.  ஹிட்ஸ் இரண்டு லட்சத்தை தொடர போகிறது.  என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திங்கள் காலை 9:30 மணி அளவில் சூர்யா கண்ணன் தொலைபேசுகிறார். 

சூர்யா கண்ணன்
: வணக்க்ம் சார் என்ன சார் ஆச்சு உங்க தளத்திற்கு?

நான்  : ஏன் எனக்கு தெரிந்து இதுவரை ஒன்றுமில்லையே? ஏன் என்ன ஆச்சு பிரச்சனையா கண்ணன்?

சூர்யா கண்ணன்
:  இல்ல உங்க வலை தளத்தை ஒபன் செய்ய முடியலை அதான்???

நான் :  என்ன எர்ரர் வருது?

சூர்யா கண்ணன்:  உங்கள் தளம் ரிமூவ் செய்யப்பட்டுள்ளது என்று வருகிறது.

நான் :  அப்படியா?? (வாய்விட்டு சிரிக்கிறேன்)  அப்படி எல்லாம் இருக்காது கண்ணன்.

சூர்யா கண்ணன்:  இல்லை சார் நிஜம் தான் நீங்க வேணும்னா திறந்து பாருங்கள் என்றார்

நான்:  நான் ட்ரைவிங்கல இருக்கேன் நீங்களே ஒபன் பண்ணி பாருங்க என்று என் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் கொடுக்கிறேன்.

சூர்யா கண்ணன்:  வெரிபிகேசன் கோடு கேட்கிறது.  கொடுக்கட்டுமா

நான் :  ம்ம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன் என்றார்.

பிறகு கூப்பிட்டு பரவாயில்லை பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தீர்கள் இல்லை என்றால் உங்கள் கூகிள் அக்கவுண்ட் அனைத்தும் கண்டமாயிருக்கும் என்றார்.   பாஸ்வேர்ட் மாற்றிவிட்டேன் அதை SMS செய்கிறேன்

அப்புறம் அலுவலகத்திற்கு வந்து என் மெயில் ஐடியை திறந்து பார்த்த பிறகுதான் விபரீதம் புரிந்தது.  என் மெயில  ஐடியை ஹேக் செய்து என் ஐடி வழியாக என்னிடம் உள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் ஆபாச மெயில்கள் அனுப்ப பட்டிருந்தது.  அதற்கு ரிப்ளை வேறு எப்பா தாங்க முடியல எல்லாரும் என்ன அசிங்க அசிங்கமா திட்டி வேற மெயில் அனுப்பியிருந்தாங்க.  ஒரு நண்பி செருப்பு பிஞ்சிடும்னு வேற மெயில் அனுப்பிருந்தாங்க.  என்ன பண்றது எல்லாம் என் நேரம் நினைச்சி போய்க்கிட்டு இருக்கறேன்.

இவ்வளவு விளக்கமா ஏன் சொல்றேனா என் வலைத்தளம் திருட்டு போச்சி ஆனா மீட்டுட்டேன் இதற்கு காரணம் நண்பர் சூர்யா கண்ணன் மற்றும் முத்துவேல் தான்.  முத்துவேல் தொடர்பு கொள்ள வேண்டும் உங்கள் செல்பேசி எண் தரவும்.

நண்பர்கள் பதிவர்கள் பிளாக்கர்கள் அனைவரும் ஒரு பேக் - அப் மற்றும் மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்கள் பாஸ்வேர்டை மாற்றுங்கள். 


(ஆபாச மின்னஞ்சல் வர நான் காரணம் அல்ல எந்த ஒரு கபோதியோ என் வெப்சைட் ஹேக் பண்ணிட்டான் அவன் மட்டும் கிடைச்சான் அவன ஒரு கேள்வி நான் அந்த அளவு என்னடா சம்பாதிச்சிட்டேனு கேட்பேன்.  இதன் மூலமா வர வருவாய் என் பத்து நாள் பெட்ரோல் செலவுக்கு மட்டுமே சரியாக இருக்கிறது.  இந்த நிலையில இத ஏன் பண்ணேனு ஒரு கேள்வி மட்டுமே.  இருந்தாலும் இவன் மூலமா நாமளும் இந்த உலகத்தில ஒரு பிரபல பதிவர் என்ற அடையாளம் நிலை நிறுத்தப்பட்டிருப்பதால் மன்னித்து விடுவோம்.)


என் வலைத்தளம் திருடப்பட்டது பிரான்ஸ் என்ற நகரத்தில் இருந்து ஏன் என்றால் நான் ஜிமெயில் உபயோகித்த பிறகு அங்கிருந்து  உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.  அதை நிரூபிக்கும் படம் மேலே

செப்டம்பர் 1 எனது பிறந்த நாள் உங்கள் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களுக்காக தலை வணங்கி நிற்கின்றேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்

39 ஊக்கப்படுத்தியவர்கள்:

அன்பரசன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..(முன்கூட்டியே)

சைவகொத்துப்பரோட்டா said...

வளமுடன் வாழ்க, பிறந்த நாள் வாழ்த்துக்கள் வடிவேலன்.

rss4sk said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

ஆர்வா said...

என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனாலும் இது போன்ற விஷயங்கள் கண்டிக்கத்தக்கதே

ஜோதிஜி said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

வெளிநாட்டில் சைபர் கிரைம் மக்கள் நல்லவிதமாகத்தானே செயல்படுகிறார்கள். அவர்களிடம் இது போன்ற புகார் செய்தால் பலன் அளிக்குமா வடிவேல்.

இத்தனை துல்லியமாக கண்டு பிடித்தமைக்கு பாராட்டுக்கள்.

vasu balaji said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.:)

Menaga Sathia said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

Jackiesekar said...

வாழ்க வளமுடன்..

Robin said...

வாழ்த்துகள்.
இனிமேல் கவனமாக இருங்கள்.

ஜிஎஸ்ஆர் said...

சாதரணமாக இது போல பிரச்சினைகள் புராக்சி (குறிப்பாக அல்ட்ரா விபிஎன் உபயோகித்தால் பிரான்ஸ் என்பதை தான் காண்பிக்கும் சந்தேகத்திற்கு முயற்சித்து பாருங்கள்) உபயோகித்தாலும் வரும் ஒரு வேளை உண்மையில் ஒருவரால் ஹேக் செய்யப்பட்டால் முதலில் பாஸ்வேர்ட் மாற்றிவிடுவார்கள் தானே ஆனால் தங்களுக்கோ பாஸ்வேர்ட் மாற்றமால், தங்கள் தள தகவல்கள் அளிக்கபடாமல், வெறும் ஆபாச மின்னஞ்சல் மட்டும் அனுப்பியிருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது மேலும் முதல் நாள் திறந்ததிற்க்கும் அடுத்த திறப்பிற்க்கும் நிறைய இடைவெளியும் இருக்கிறதே என் சந்தேகம் என்னவோ நிச்சியம் இது ஹேக்கர்களின் பணியாய் இருக்காது என்றே நினைக்கிறேன், எதுவாக இருந்தாலும் மீட்டெடுத்ததுக்கு வாழ்த்துகள்

எம்.எம்.அப்துல்லா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

உண்மைத்தமிழன் said...

இது போன்ற வெளிப்படையான எச்சரிக்கைகள் பதிவுலகத்திற்கு அவசியம் தேவைதான்..!

கல்விக்கோயில் said...

அய்யா வணக்கம்.
தங்களின் பதிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த வாரம் இதே போல்தான் எனது மின்னஞ்சல் முகவரியிலிருந்து எனக்குத் தெரியாமலேயே வயாக்ரா விளம்பரம் ஒன்று பல முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக எனது பாஸ்வேடை மாற்றினேன்.

கவி.செங்குட்டுவன்.

Anonymous said...

நல்ல வேளை.

'பரிவை' சே.குமார் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.
இது போன்ற வெளிப்படையான எச்சரிக்கைகள் பதிவுலகத்திற்கு அவசியம் தேவைதான்..!

ஜெய்லானி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

வைரஸின் வேலையா இருக்கும்.. ஜி எஸ் ஆர்-ரின் கேள்வியும் நியாயமானதே..!!

prabhadamu said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

:)

இது போன்ற வெளிப்படையான எச்சரிக்கைகள் பதிவுலகத்திற்கு அவசியம் தேவை..


நன்றி.

எஸ்.கே said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்!

வால்பையன் said...

ஆபாச மெயில்கள் அனுப்புவது ஏன்னு தான் தெரியல, கபோதிகளுக்கு வேற எதுவுமே தெரியாதா!?

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

வானவன் யோகி said...

முதலில் சூர்யா கண்ணன் பிறகு நீங்கள்.

இருவருமே வாசகர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதுடன் புதிய தொழில்நுட்பங்கள்..சிறுவி,,இணைப்பு மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு போன்றவற்றை வழங்குதல்

எவர் ஒருவரோ அனைவரின் அறியாமையே தமது மூலதனம் என்ற நோக்கில் உங்களை எதிரியாகப் பாவித்து இது போன்ற தவறுகளில் இறங்குகிறார்கள் என எண்ணுகிறேன்.

மீண்டுவந்ததற்கும்,மீட்டு வந்ததற்கும் தங்கள் புதியதொரு பிறந்த நாள் வாழ்த்தாகக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

நீவிரும்,தங்கள் பதிவும் மென்மேலும் பல்லாண்டு வாழ்க

Thomas Ruban said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Thamira said...

அவ்வப்போது இதுமாதிரி கதி கலங்கச் செய்கிறார்கள். அவ்வ்வ்..

கிரி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நல்லபடியாக திரும்ப பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் இதைப்போல நடப்பதை முற்றிலும் தவிர்ப்பது என்பது சிரமமான விசயமே!

சூர்யாகண்ணன் பலருக்கு நிம்மதி கொடுத்துள்ளார் என்றால் மிகையில்லை.

shanuk2305 said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

You Don't want to achieve immortality through your work.you want to achieve immortality by living forever.

WISH YOU HAPPY BIRTHDAY LIVE LONGLIFE

Madurai pandi said...

Many more happy returns of the dayyyy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இளங்கோ said...

Many more happy returns of the day

Kousalya Raj said...

மீட்டு எடுத்ததிற்கு மகிழ்ச்சி.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

movithan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் விழிப்புணர்ச்சிக் கருத்திற்கு நன்றி.

TechShankar said...

happy b'day 2 u

Unknown said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Anonymous said...

Neengal ஜிபிரிட்ஜ் மென்பொருளை install seyithu erukingala. Yenaku intha software mela konjam nambiki illa.

அணில் said...

பிறந்தநாள் வாழ்த்துதான் சொல்ல முடியவில்லை, ஆசிரியர்தின வாழ்த்தாவது சொல்லிகிறேனே!...
வாசகர் ஆதரவு என்றும் இருக்கும். அது இருப்பதால்தானே நயவஞ்சகக் கண்களுக்கு அரிக்கிறது. இந்த சம்பவத்தை கண் திருஷ்டியென வைத்துக் கொள்ளுங்கள்.

kartook said...

U guys should use keepassx application with strong passwords .
1.No need to type the passwords ( drag and drop)
2.Set that application for password expiration time .that will remind you .
3 The only major stuff you should change your passwords
4. Dont use passwords as your mobile number or DOB's and more

Thanks
K~

S.முத்துவேல் said...

iam muthuvel 9952492962

Anonymous said...

I set up a google custom search bar for my blog in http://www.google.com/cse/

after creating the google custom search bar for my blog http://ramasamydemo.blogspot.com/

the search bar yields results only for the query words which are in english. If i type any query word in tamil the google custom search bar doesnt yield any results…give me solution…

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

gouthaminfotech.blogspot.co..
44/100
Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை