நண்பர்களே உங்கள் கணினி வேகமாக இயங்கவும் நீங்கள் உபயோகிக்கும் அப்ளிகேசன்கள் மென்பொருட்கள் வேகமாக திற்க்கவும் இந்த மென்பொருள் உபயோகமாக இருக்கும் இதன் பெயர் பூஸ்ட் ஸ்பீடு 5 இந்த மென்பொருள் ஜூலை 31 வரை இலவசமாக வழங்கப்படுகிறது.
வன்தட்டில் தேவையில்லாத இடங்களில் உள்ள காலி இடங்களை செம்மை படுத்தி ஒழுங்குபடுத்துகிறது.
உங்கள் ரெஜிஸ்டரியை சுத்தப்படுத்த உதவுகிறது.
உங்கள் வன்தட்டில் உள்ள தற்காலிக கோப்புகள் மற்றும் தேவையில்லாத கோப்புகளை நீக்குகிறது.
உங்கள் கணினி தொடங்கும் போது தானாகவே தொடங்கும் மென்பொருட்களை நிறுத்த உதவுகிறது.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கு சென்று முதலில் ஒரு கணக்கினை தொடங்குங்கள் சுட்டி
பின்பு அந்த கணக்கினுள் நுழைந்து இந்த சுட்டி கிளிக் செய்து இந்த பக்கத்தில் கொடுத்துள்ள மென்பொருளை தரவிறக்குங்கள். சுட்டி
பின்னர் மென்பொருளை நிறுவும் பொழுது Promo Code கேட்கும் அப்பொழுது பின்வரும் கோடினை கொடுக்கவும் Promo Code - CREATIVEMARK0610
பிறகு இந்த தளம் சுட்டி சென்று உங்கள் மென்பொருளை இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து அங்கு உங்கள் உண்மையான மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருளுக்கான பதிவு செய்த சாவி ( License Key) கிடைக்கும்.
நீங்கள் நீக்கிய ( Deleted ) கோப்புகளை திரும்ப பெற ஒரு இலவச கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி இந்த மென்பொருள் விண்டோஸ் 2000 முதல் விண்டோஸ் 7 வரை அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும்.
உங்களிடம் உள்ள எந்த ஒரு வீடியோ ஆடியோ புகைப்படம் போன்றவற்றை உங்களுக்கு பிடித்த கோப்பாக மாற்ற பல்வேறு மென்பொருள் பயன்படுத்த வேண்டும் இவையனைத்தும் ஒரு ஒரு இலவச மென்பொருளில் செய்தால் எப்படியிருக்கும். இதுதன் அந்த இலவச மென்பொருள் பெயர் அடாப்டர் சுட்டி இந்த மென்பொருள் விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்குகளில் இயங்கும் வகையில் வடிவைமைக்கப்பட்டிருக்கிறது.
உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் இருக்கும் பொழுது மேலே Web Clip என்று விளம்பரங்கள் வரும் இந்த இடத்தில் விளம்பரத்திற்கு பதில் உங்களுக்கு பிடித்த வலைப்பதிவர்களின் முகவரி கொடுத்தால் அவர்கள் கடைசியாக எழுதிய பதிவின் தலைப்பு உங்களுக்கு செய்தியாக தரும். அதை எப்படி மாற்றுவது ???
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து வலது புறம் மேலே Settings என்பதனை தேர்வு செய்யுங்கள்.
அதனுள் Web Clips என்பதனை தேர்வு செய்யுங்கள்.
இதில் நிறைய தளங்கள் இணைத்திருப்பார்கள் உங்களுக்கு தேவையில்லாத தளங்களை எடுத்து விடுங்கள்
பிறகு உங்களுக்கு பிடித்த தளங்களின் முகவரியை உள்ளீடுங்கள் இனி உங்கள் இன்பாக்ஸில் உங்களுக்கு பிடித்த தளங்களின் பதிவின் தலைப்புகள் இன்பாக்ஸின் மேலே.
எனக்கு போன வியாழக்கிழமை அன்று பார்பர்ஷாப்பில் முடிவெட்டிவிட்டு இறங்கும் பொழுது தவறி விழுந்து காலில் ரத்தக்கட்டு மற்றும் சுளுக்கால் மிகவும் அவதியால் இருந்த பொழுது நம் நண்பர் ஜாக்கி சேகர் அவர் போன் செய்தார் விஷயத்தை கேள்விபட்டவுடன் தனது அடுத்த பதிவில் என்னை பற்றி தெரிவித்து இருந்தார். உடனே நிறைய போன் கால்கள் மற்றும் மின்னஞ்சல்கள் எப்படி என்று அனைவருக்கும் விளக்கி சொன்னேன். கால் வலியுடன் வாயும் வலிக்கத் துவங்கி விட்டது. என் உடல்நலத்தை விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இப்பொழுதெல்லாம் ஹேக்கர்களின் தொல்லை தாங்க முடியவில்லை நண்பர் சூர்யகண்ணனின் வலைத்தளம் திருடப்பட்ட பொழுது என்ன செய்வது என்றே தோன்றவில்லை உடனே அவருக்கு போன் செய்து ஆறுதல் கூறினேன். அவர் தன் புதிய முகவரிக்கு மாறியிருக்கிறார் அவரின் புதிய முகவரி இது சுட்டி அத்துடன் நண்பர்கள் வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகளை புதிய பதிந்தவுடன் ஒரு பேக் - அப் ஒன்றை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைனில் பணவர்த்தனை செய்பவர்கள் உங்கள் வங்கி கொடுத்துள்ள ஆன்லைன் விசைபலகையை பயன்படுத்துங்கள். மிகவும் பாதுகாப்பானது.
நண்பர்கள் யாராவது முடிந்தால் இந்த பதிவை தமிழிசில் இணைத்து விடவும்
நன்றி மீண்டும் வருகிறேன்
2 ஊக்கப்படுத்தியவர்கள்:
நன்றி. தொடர்க சேவை.
Hello Sir,
A good and useful article..keep it up...after installing this software in my VISTA laptop...i really feel the difference in working..thanks a lot...voted in indli...Keep going...
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்