பிடிஎப் கோப்பிலிருந்து வேர்ட் கோப்பிற்கு மாற்ற மென்பொருள் நிறைய மென்பொருட்கள் உங்களுக்காக

நண்பர்களே உங்களிடம் உள்ள பிடிஎப் கோப்புகளை வேர்ட் கோப்பிற்கு மாற்ற மிகவும் சுலபமான மென்பொருள்  PDF TO Word Converter  இந்த மென்பொருள் சட்டரீதியான மென்பொருள் பாக்ஸாப்ட் நிறுவனத்திலிருந்து வெளி வந்துள்ளது இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே செல்லவும் சுட்டி


உங்கள் கணினியில் உள்ள Vulnerable அதாவது தீங்கு நிரல்கள் மற்றும் பழைய மென்பொருட்கள் காலவாதியான மென்பொருட்கள் மூலம் சில நேரங்களில் உங்கள் கணினி பாதிக்க  வாய்ப்பு உள்ளது அந்த மாதிரி நேரங்களில்  இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியை ஆராய்ந்தால் உங்கள் கணினியில் Vulnerable மென்பொருட்கள் மற்றும் கோப்புகளை கண்டறிந்து நீக்கிவிடும்.  இந்த மென்பொருள் பிசிவேர்ல்ட் மற்றும் ஜிடிநெட் பத்திரிக்கை நிறுவனத்தினர் பரிந்துரைத்துள்ளனர்.  மிகவும் வேகமான மற்றும் சுலபமான மென்பொருள் இது ஒவ்வொரு கணினியிலும் இருக்க வேண்டியது என்று கூறியுள்ளார்கள். இந்த மென்பொருளின் பெயர் பிஸிசெக்யூனியா இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி  


இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்திற்காக பாரட்ட வேண்டியது உள்ளது.  அதுதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 25 வருடம் முடிகிறது.  விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.  இப்பொழுது விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது.  அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம் இ மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.

விண்டோஸ் முதல் பதிப்பின் படம் கீழே


அடுத்த மாதம் டிசம்பர் மாதம் கிறிஸ்தவ நண்பர்கள் மட்டுமல்ல உலகெமே எதிர்பார்க்கும்  நன்னாள் கிறிஸ்து அவதரித்த தினம் வர போகிறது.  அனைவரும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு கட்டாயம் ஒரு பரிசு கொடுப்பீர்கள் பரிசின் மேலே லேபிள் கடைகளில் கிடைக்கும் இருந்தாலும் இந்த வலைத்தளத்தில் இருந்து எடுத்து ஒட்டி பாருங்களேன்  கிறிஸ்துமஸ் லேபிள் எடுக்க சுட்டி


 

நீங்கள் படிக்கும் பதிவு நாலு பேரிடம் செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் அனைத்திலும் ஒட்டு போடுங்கள் உங்களை போல பலரும் தமிழில் தொழில்நுட்பத்தையும் அரிய வலைத்தளங்களையும் அறிந்து  கொள்ளட்டும்.   ஆகையால் கட்டாயம் ஒட்டு போடவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

5 ஊக்கப்படுத்தியவர்கள்:

மாணவன் said...

மிகவும் பயனுள்ள மென்பொருள்கள்,தகவல்களை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை,

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் பயனுள்ள மென்பொருள்கள்..

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

மச்சவல்லவன் said...

பயனுள்ள பதிவுசார்.
வாழ்த்துக்கள்.

ப.கந்தசாமி said...

சரியில்லை.

Unknown said...

Pls tell me how to change.mdi format in to PDF?

Thanks bro


Devi

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை