பிடிஎப் கோப்பில் உள்ள தடைகளை நீக்க மற்றும் டெக்ஸ்ட் கோப்புகளை ஸ்கீரின் சேவராக்க

நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் நண்பர்கள் நேரடியாக அங்கு சென்று அந்த சுட்டி மூலம் நான் எழுதிய பதிவுகளை காண முடியும்.  அத்துடன் நிறைய கேள்விகள் வருகிறது அதுவும் பின்னூட்டப் பெட்டியிலே வருவதால் இனி தனியாக ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  அதுவும் வலது பக்கம் மேலே முதலிலேயே கொடுத்திருக்கிறேன்.  உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க..   இனி பாராட்டு என்றால் பின்னூட்டப்பெட்டியிலும் திட்டுவதாக அல்லது ஏதாவது தவறு செய்திருந்தால் அல்லது உங்கள் மனதில் தோன்றும் கணினி குறித்த சந்தேகங்களுக்கு உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க என்ற பகுதியிலும்
கேட்கவும்.  எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்கிறேன். நண்பர்களே இதுவரை கொடுத்து வந்த ஆதரவை இனியும் தரவேண்டுகிறேன். 

கேள்விகள் கேட்க  சுட்டி

அனைத்து பதிவுகளையும் காண சுட்டி

நாம் கணினியில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை நம்மால் ஸ்கிரின் சேவராக உபயோகப்படுத்த முடியும்.  அதுபோல பவர்பாய்ன்ட் கூட ஸ்கிரின் சேவராக உபயோகப்படுத்தலாம்.  ஆனால் டெக்ஸ்ட் கோப்புகளான நோட்பேட் மற்றும் மைக்ரோசாப்டில் உருவாக்கி வேர்ட் கோப்புகளான டெக்ஸ்ட் கோப்புகளை ஸ்கீரின் சேவராக கொண்டுவர முடியுமா?  முடியும் அதை எப்படி செய்வது.  முதலில் இந்த மென்பொருளை தரவிற்க்கிக் கொள்ளுங்கள்.  பிறகு இந்த மென்பொருளை திறந்து உங்களுக்கு தேவையான டெக்ஸ்ட் கோப்பினை தேர்வு செய்யுங்கள்.  பிறகு உங்களுக்கு இந்த ஸ்கீரின் சேவர் எவ்வளவு நேரத்தில் செயல்பட வேண்டும் என் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.  முடிந்தது  இனி நீங்கள் உங்கள் கணினியை எவ்வளவு நேரம் உபயோகப்படுத்தாமல் இருக்கிறீர்களோ அப்பொழுது தானாக இந்த மென்பொருள் இயங்கி டெக்ஸ்ட் கோப்பினை ஸ்கீரின் சேவராக அலங்கரிக்கும்.  இந்த மென்பொருளின் யார் வேண்டுமானாலும் மேம்படுத்தலாம் என்பதே.  அதாவது இது ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருள்.  இந்த மென்பொருளின் பெயர் கோடுசேவர்

 மென்பொருளை தரவிறக்க சுட்டி


நெருப்பு நரி உலாவி உபயோகப்படுத்துபவர்களுக்கான நீட்சிகள்

டவுண்லோடு ஸ்டேடஸ்பார்
நீங்கள் நெருப்பு நரி உலாவி வழியாக இணையத்தில் கோப்புகள் தரவிறக்கும் பொழுது அந்த கோப்புகள் எவ்வளவு வேகமாக தரவிறக்குகிறது.   இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் தரவிறக்கும் வேகம் என்ன என்பதனை தெரிந்து கொள்ள இந்த நீட்சி மிகவும் உபயோகமாக இருக்கும். 


நீட்சி தரவிறக்க சுட்டி

பாக்ஸ்டேப்

நீங்கள் பார்க்கும் தளங்களை 3டி போன்று காண இந்த நீட்சி உதவுகிறது.  அத்துடன் இதில் ஸ்பீடு டயல் வசதியும் உள்ளது.  நீங்கள் அடிக்கடி செல்லும் தளங்களை ஸ்பீடு டயல் மூலம் விரைவாக அணுகவும் உதவுகிறது.

நீட்சி தரவிறக்க சுட்டி

வெப் 2 பிடிஎப்

நீங்கள் காணும் எந்த ஒரு தளத்தையும் ஒரு பிடிஎப் கோப்பாக மாற்றி தர இந்த நீட்சி உதவுகிறது.

நீட்சி தரவிறக்க சுட்டி


பிடிஎப் அன்லாக்கர்

உங்களிடம் ஒரு நண்பர் ஒரு முக்கியாமான பிடிஎப் தருகிறார்.  அத்துடன் சொல்கிறார் அதன் கடவுச்சொல் மறந்து விட்டது என்று கூறினால் எப்படி இருக்கும் மிகவும் அதிர்ச்சயடைய மாட்டீர்கள்.  என்னடா இது முக்கியமான கோப்பாயிற்றே.  இதன் கடவுச்சொல் எதுவும் எடிட் செய்ய முடியாதே கடவுச்சொல் தெரிந்தால்தானே திறக்கவே முடியும்.  நம்முடைய மேலதிகாரி உடனே வேண்டும் என்று சொன்னாரே என்ன செய்வது  என்று ஒரு  குழப்பமான மனநிலைக்கு தள்ளப்படுவீர்கள். அவ்வாறு நடந்தால் குழப்பமடையாமால் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் உடனே இந்த மென்பொருளை தரவிறக்குங்கள்.  நேரடியாக திறக்கலாம் இது ஒரு நேரடி மென்பொருள்.  கணினியில் நிறுவ தேவையே இல்லை என்பதன் சிறப்பு.


இந்த மென்பொருள் பெயர் பிடிஎப் அன்லாக்கர்.  இந்த மென்பொருளை கடவுச்சொல் கொடுத்திருந்தாலோ அல்லது பிரிண்ட் செய்யமுடியாமல் தடை செய்யப்பட்டிருந்தாலோ கூட இதனால் இந்த பிரச்சனைகளை  அனாசியமாக களைந்து உங்களுக்கு உடனே கொடுத்துவிடும். 


இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி



நன்றி. மீண்டும் வருகிறேன்.

5 ஊக்கப்படுத்தியவர்கள்:

DR said...

வழக்கம் போல பதிவு அருமை. தயவு செய்து தமிழ்மனம் ஒட்டுப்பட்டையை சரி செய்யவும்.

பனித்துளி சங்கர் said...

முதலில் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி சொல்லவேண்டும் காரணம் வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்த பிரச்சனை இன்று தங்களின் பதிவின் வாயிலாக முடிவுக்கு வந்திருக்கிறது . பகிர்வுக்கு நன்றி நண்பரே

மச்சவல்லவன் said...

வழகமான நல்ல பதிவை வழங்கியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...

தகவல்களுக்கு மிக்க நன்றிகள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

சாதாரண கிராமத்தான் said...

நல்ல பதிவு. தொடருங்கள். Opera browser உபயோக படுத்தி பாருங்களேன்? speed dial, mail client, download மேனேஜர், speed dial எல்லாம் built-in. தற்போது version 11 நன்றாக இருக்கிறது. வேகமான உலவி.
நன்றி

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை