இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

யுஎஸ்பி கருவிகளை பாதுகாப்பாக நிறுத்த மற்றும் கூகிள் நோட்புக் இலவசமாக பெற

நண்பர்களே இப்பொழுது அனைவராலும் உபயோகிக்க கூடியது பென் ட்ரவை எனப்படுவது.  இந்த பென் ட்ரைவை நிறைய பேர் சரியாக கையாளுவதில்லை.  பென்ட்ரைவை முறையாக நிறுத்தாமல் கணினியில் இருந்து எடுப்பதால் உங்கள் பென்ட்ரைவில் வைத்துள்ள டேட்டாக்கள் எடுக்கமுடியாமல் போகலாம்.  அல்லது உங்கள் பென்ட்ரைவே செயலழிந்து போகலாம்.

இதனால் என்ன ஆகும் முக்கிய அலுவலக கோப்புகளின் பேக் - அப் அதில் வைத்திருப்போம்.  இதனால் அவசர அவசரமாக பென் ட்ரைவை உருவும் போது பென்ட்ரைவ் செயலிழந்து போய்விடும் அபாயம் உள்ளது. 

உங்கள் கணினியில் உபயோகிக்கும் எந்த ஒரு யுஎஸ்பி கருவியையும் பாதுகாப்பாக நிறுத்த இந்த மென்பொருள் உதவிடும்.  மற்ற மென்பொருள்களை காட்டிலும் இதில் பயன்கள் அதிகம்.   அப்படி என்ன பயன்கள் உள்ளது இந்த மென்பொருளில்.  இந்த மென்பொருளில் நீங்கள் ஒரு பென்ட்ரைவினை செருகியிருக்கீர்கள் என்றால் அந்த பென்ட்ரைவில் எவ்வளவு மீதம் இடம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.  பென்ட்ரைவின் பெயரை மாற்றிக் கொள்ளும் வசதி.   ஒரே நேரத்தில் அனைத்து யுஎஸ்பி கருவிகளை நிறுத்தும் வசதி.  இது போன்று நிறைய வசதிகள் உண்டு.
 
இந்த மென்பொருள் ஒரு சட்டரீதியான மென்பொருள்.  அதாவது மென்பொருளை தயாரித்து வெளியிட்ட நிறுவனமே இலவசமாக கொடுக்கிறது.  இதற்கு நீங்கள் ஒரு படிவத்தினை பூர்த்தி செய்தால் போதும்.  இந்த படிவத்தில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும்.  தேவை எனின் உங்களுடைய சந்தேகங்களை கீழுள்ள பெட்டியில் டைப் செய்து அனுப்பினால் அந்த கேள்விக்கான விடையை உங்களுக்கு மின்னஞ்சல் செய்வர்.   இந்த படிவத்தினை பூர்த்தி செய்த அடுத்த ஐந்தாவது நிமிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மென்பொருளின் உரிமத்தினை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.  ஆனால் இந்நிறுவனம் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 7 வரை மட்டுமே கொடுத்திருந்தனர்.  ஆனால் இப்பொழுதும் கூட தரவிறக்க வழி செய்திருக்கின்றனர்.

மென்பொருளின் உரிமம் பெற சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டிஐ கேர் கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள்

ஐகேர் கோப்புகளை மீட்டெடுக்கும் கருவி குறித்து சில மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவில் கொடுத்திருந்தேன்.  அந்த மென்பொருள் இப்பொழுதும் இலவசமாக தர முடிவு செய்து தருகிறார்கள்.  முந்தைய ஐகேர் குறித்த பதிவின் சுட்டி

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின் Activate பட்டனை அழுத்தி CG7332343A7XEOUD3EHH4AIL2WSB4G9F  இந்த சீரியலை கொடுத்திடவும்.  சீரியலின் முன்னே பின்னே ஸ்பேஸ் எதுவும் கொடுக்கவேண்டாம்.  இணையத்தின் வழியாக உங்கள் ஆக்டிவேசனை உறுதி செய்யப்படும்.  இந்த ஆக்டிவேசன் கோடு டிசம்பர் 25 அதாவது வருகிற கிறிஸ்துமஸ் வரை மட்டுமே செயல்படும்.   அதற்கள் ஆக்டிவேசன் செய்தால் மட்டுமே உங்களுக்கு முழு வெர்சனாக செயல்படும்.

உங்களுக்கு பிடித்த வால்பேப்பர்கள் தரவிற்க்க இலவச தளங்கள் உங்களுக்காக ஐந்து

நேசனல் கிராபிக் வால்பேப்பர்கள் தளம் மிக அருமையான தளம் இது

விண்டோஸ் தீம்ஸ் குறித்த தளம் இதுவும் நிறைய வால்பேப்பர்களை தன்னகத்தே கொண்டது

வால்பேப்பர் ஸ்டாக்

நாஸா விஞ்ஞான பிரியர்களுக்கான இலவச வால்பேப்பர்கள் தளம்.

போர்ஸ்ச் /  Porche  கார்களின் அணிவகுப்பு வால்பேப்பர்கள்.

வால்பேஸ் இந்த தளத்தில் 350000 மேற்பட்ட வால்பேப்பர்கள் கொண்டது
கூகிளினால் வழங்கப்படும் இலவச நோட்புக்

அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு இலவச கூகிள் குரோம் ஒஎஸ் கொண்ட நோட்புக் இலவசமாக வேண்டுமா.  கூகிள் நிறுவனத்தினர் இந்த அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கின்றனர்.  இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த படிவத்தினை பூர்த்தி செய்தால் போதுமானது.  அத்துடன் மிக முக்கியமான விஷயம் நீங்கள் கட்டாயம் அமெரிக்காவில் குடியிருந்தால் கூகிள் குரோம் நோட்புக் பெற வாய்ப்பு உள்ளது.  அவர்கள் மிகவும் குறைந்த அளவிலான நோட்புக் மட்டுமே தருவதாக கூறியுள்ளனர்.  உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கு கிடைக்கும்.

படிவத்தினை பூர்த்தி செய்ய சுட்டி

இந்த நோட்புக்கின் படங்கள் கீழே


 உங்கள் ஓட்டுக்கள் என்னை பலபேருக்கு அறியச்செய்யும் தமிழ்மணம் தமிழிசில் திரட்டிகளில் ஒட்டு போடுங்கள்.  உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிடுங்கள்.  உங்கள் உறவினர்களுக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.நன்றி மீண்டும் வருகிறேன்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை