நண்பர்களே விண்டோஸ் எக்ஸ்பியில் சில மென்பொருட்கள் நிறுவும் போது பார்த்தீர்களேயானால் .நெட் பிரேம்வொர்க் என்ற மென்பொருள் இல்லை அதனால் இந்த மென்பொருளை நிறுவ இயலாது என்று கூறிவிடும்.
இந்த மென்பொருளை ஆன்லைனில் அப்டேட் செய்தாலும் மிகவும் நேரம் எடுக்கும். ஆகையால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்லைனில் நிறுவக்கூடிய வகையில் தனி செட்டப் கோப்புகளாக கொடுக்கிறார்கள். இவற்றை தரவிறக்கி பயன்படுத்தாலாம்.
.நெட் பிரேம்வொர்க் 3.5 (64 பிட்& 32 பிட்கணணிகளில் நிறுவ) சுட்டி
இதற்கு சர்வீஸ் பேக் 1 சுட்டி
.நெட் பிரேம்வொர்க் 3.0 32பிட் சுட்டி
.நெட் பிரேம்வொர்க் 3.0 64பிட் சுட்டி
.நெட் பிரேம்வொர்க் 2.0 32பிட் சுட்டி
.நெட் பிரேம்வொர்க் 2.0 64பிட் சுட்டி
எந்த மென்பொருளுக்கும் மாற்று என்ற உண்டு. அதனால் நிறைய பேர் இந்த மாற்று மென்பொருளையே பயன்படுத்துவர். ஏன் என்றால் உருவாக்கிய மென்பொருளைக்காட்டிலும் மாற்றாக உருவாக்கிய மென்பொருட்கள் எளிதாகவும் இலவசமாகவும் பயன்படக்கூடிய வகையில் இருக்கும்.
உதாரணம் மைரோசாப்ட் ஆபிஸ் முதலில் உருவாக்கப்பட்டது அதற்கு மாற்றாக சன் மைக்ரோசிஸ்டம் உருவாக்கிய ஒபன் ஆபிஸ்.
இது போன்ற மாற்று மென்பொருளை கண்டுபிடிக்க உதவும் தளம்தான் இந்த தளம் பெயரைபோன்றே இந்த தளம் வேலை செய்கிறது. கண்டுபிடிக்க மட்டுமல்ல நேரடியாக அந்த மென்பொருள் தரவிறக்க சுட்டியும் தந்துவிடுகிறது. சுட்டி
இந்த தளம் விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய இயங்குதள மென்பொருட்களையும் கண்டுபிடித்துத்தருகிறது.
உங்கள் கணணியில் எந்த மென்பொருள் அல்லது எந்த .exe கோப்புகள் இயங்கி கொண்டிருந்தாலும் அந்த கோப்பின் பெயரை இந்த தளத்தில் உள்ளீடு செய்தால் போதும் அதன் மென்பொருள் என்ன எதற்காக இயங்குகிறது என்று கூறி விடும். இணையதளத்தின் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
6 ஊக்கப்படுத்தியவர்கள்:
நல்ல தகவல்.
ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியாக இணைய இணைப்பின்றி மென்பொருட்களை நிறுவுவதற்கு ஏற்புடையதாக இருக்கும்.
வடிவேலன்,
அருமையான தகவல்கள் அசத்துங்க தினம் ஒரு குறள் போன்று தினம் ஒரு பதிவு அதுவும் மிக பயனுள்ள பதிவு நம் நண்பர்களுக்காக.
வாளர்க உங்கள் பணி,
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
முத்துக்குமார் என்னை உற்சாகப்படுத்துவதில் நீங்கள் முதலிடத்தில் உள்ளீர்கள் மிகவும் நன்றி உங்கள் ஊக்கமே என்னுடைய உற்சாக மருந்து நினைவில் கொள்ளுங்கள் தினமும் பதிவை படியுங்கள் உங்கள் கருத்துக்களை கூறுங்கள் அத்துடன் நீங்கள் உங்கள் பதிவை தினம் எழுத ஆரம்பிக்கலாமே. நன்றி
வடிவேலன்,
நன்றி உங்கள் விரைவான மற்றும் விரிவான பதிலுக்கு, நான் சிலவற்றை வெளியிலிருந்து பார்த்து மகிழ்பவன். சில விஷயங்கள் பார்வைக்கு சுலபமாக தெரியும் ஆனால் அதில் உள்ளே போகும்போதுதான் தெரியும் அது எத்துணை கடினமானது என்று.
நான் உங்கள் மற்றும் நம் ஒருசில நண்பர்களின் பதிவுகளுக்கு பதில் எழுதி முடிப்பதற்குள்ளே நாக்கு தள்ளி விடுகிறது நான் பதிவு எழுத ஆரம்பித்தால் அவ்வளவுதான் இருக்கிற கொஞ்ச நேரத்தையும் அதில் செலவு செய்துவிட்டு அதிமாய் அறியும் நேரத்தைவிட அறிந்த கொஞ்சத்தை நெஞ்சத்தில் இருந்து இம்மன்றத்தில் பகிர்ந்து பத்தோடு பதினொன்றாய் விரைந்து காணாமல் கரைந்துவிடுவேன்.
பதிவு எழுதுவதென்பதைவிடுத்து வெகுசில தேர்ந்தெடுத்த பதிவர்களின் பதிவுகளிள் இருந்து முடிந்த வரை கற்றுக்கொள்வோம் என்பது என்னுடைய இப்போதைய திட்டம்.
மற்றும் பதிவுலக நண்பர்களின் பதிவுகளுக்கு பதிலிட்டு முடிந்த வரை அவர்களின் கைமாறு கருதாத உதவிக்கு உத்திரமாய் இருப்பதே இப்போதைக்கு உத்தமம் என்று நினைக்கிறேன்.
ஆனால் என்னால் என்றும் அடித்து சொல்ல முடியும் தமிழ் பதிவர்களின் தமிழ் மொழிக்காற்றும் தொண்டு மற்றும் கணிணி நண்பர்களுக்கு இடையறாது தரும் இன்ப அதிர்ச்சி இலவச டிப்ஸ்கள் என்றும் தமிழ் கூறும் கணிணி நல்லுலகத்தால் மறுக்கப்படவும், மறக்கப்படவும் மற்றும் மறைக்கப்படவும் கூடாது என்பது என்னுடைய ஆவல்.
வளர்க உங்கள் பணி,
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
thank u..
its really useful to all..
பயனுள்ள தகவல்களுடன் அருமையான பதிவு:)
[Thanks for following my page]
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்