புதிய வால்பேப்பர்கள் மற்றும் பதிவர்கள் அறிமுகம்

நண்பர்களே இன்றும் சில பதிவர்கள் அறிமுகம் கொடுக்க போகிறேன் ((சூரியனுக்கே டார்ச் அடிக்க போகிறேன் யாரும் கலாய்க்க கூடாது சரியா??))

திரு.  லதானந்த் அவர்கள் தன் பெயருடன் தன் திருமதி பெயரையும் இணைத்து பெண்ணிற்கு பெருமை தரும் மிகப் பிரபலமான பதிவர் இவரை பற்றி அறியதாவர்கள் பதிவுக்கு புதியவர்கள் மற்றும் வெகு சிலரே.  இவர் எழுதிய நாய் வளர்க்கலாம் வாங்க மற்றும் ரேஞ்சர் மாமா பற்றிய பதிவுகள்.  மிகவும் பிடித்த பதிவர் இவர் இதுவரை இவரை பார்த்ததில்லை இவர் பேசும் கோவை தமிழ் மிக்க அழகு. 


மூடுபனி  இவர் எழுதிய பதிவுகளுக்கு நான் வெகுநாள் ரசிகன் இருந்தாலும் இவரை சந்தித்ததில்லை  இவரை இன்டிப்ளாக்கர் மீட்டிங்கில்தான் சந்தித்தேன்.  மிக பெரிய பெண்ணாக இருப்பார் என்று எதிர்பார்த்த எனக்கு இவர் சிறு பெண் என்று தெரிய வந்த போது மிகவும் வியப்பு ஏற்பட்டது.  இவ்வளவு சிறுவயதில் இவ்வளவு தெளிவாக எழுதுகிறாரே என்று.  மிக அழகானவை அவர் எழுத்துக்கள் அவரை போன்றே.  இவரை பற்றி படிக்க இங்கே செல்லுங்கள் மூடுபனி  இவங்க தொடர்ந்து அடிக்கடி பதிவு எழுதனும்னு கடவுளை பிரார்த்திக்கிறேன்.


மிகப் பிரபல பதிவர் தாமிரா அவர்கள் எழுதிய பதிவுகள் அனைத்தும் பிடிக்கும் இவர் மூலம் என் பதிவிற்கு வந்தவர்கள் அதிகம் நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே தன்னுடைய வலைப்பக்கத்தில் எனக்கென்று தனி இடம் அளித்தவர்.  இவரை நினைக்காத நாளில்லை.   இவர்  தங்கமணி பற்றி எழுதும் பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கும்.  இவர் எழுதிய சூடான இன்றைய பதிவு இவர் புலம்பல்கள் என்ற பெயர் வைத்திருக்கிறார் தன் வலைப்பதிவிற்கு

இன்று இது போதும் அடுத்து நம் டெஸ்க்டாப்பில் அழகான வால்பேப்பர்கள் நிறைய வைத்திருப்போம்.  அது போல இந்த வால்பேப்பர் பயன் படுத்தி பாருங்கள்.  ஒரு அலுவலகத்தில் எப்படி வைத்திருப்போமோ அது போல வைத்துக் கொள்ளலாம்.  படத்தின் மீது ரைட் கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.  பின்னர் வால்பேப்பராக மாற்றிக் கொள்ளுங்கள்

etxm47.jpg


.
slh4dj.jpg

rvm634.png



--
வடிவேலன் ஆர்.
வலைப்பதிவு http://www.gouthaminfotech.com


10 ஊக்கப்படுத்தியவர்கள்:

வால்பையன் said...

லதானந்த் கோவை வட்டார வழக்கிலும், தாமிரா நெல்லை வழக்கிலு எழுதும் மொழி ஆளுமை கொண்டவர்கள்!

வரதராஜலு .பூ said...

பகிர்வுக்கு நன்றி. இன்றைய ஆதியின் புலம்பல்களை முன்பே படித்துவிட்டேன்.

Unknown said...

புதிய பதிவர்களை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி
உண்மையிலேயே இந்த பதிவர்களை இத்தனை நாட்கள் தவற விட்டதற்கு
வருத்தம் எனக்கு இப்போது.
நாய் வளர்க்கலாம் வாங்க ..... ஹ ஹ ஹ
நல்ல பகிர்வு ... ...

Rajeswari said...

அறிமுகத்திற்கு நன்றி..

தாமிராவின் ஆயுதம் குறும்படம் பார்த்திருக்கிறீர்களா? மிகவும் அருமையானதொரு படைப்பு.நான் மிகவும் ரசித்து சிரித்தது.

சிட்டுக்குருவி said...

நல்ல பதிவு

பகிர்வுக்கு நன்றி

Thamira said...

பெருமை எனக்கு. நன்றி வடிவேலன்.

தொடரும் அன்புக்கு நன்றி வால்பையன், ராஜேஸ்வரி.!

அன்புடன் அருணா said...

சரிதான் சூரியன்களுக்கே டார்ச் லைட்டா????

லதானந்த் said...

நன்றி

கிரி said...

ஹலோ வடிவேலன் சார்!
நல்ல அறிமுகங்கள்! நல்ல பதிவுகள். Indiblogger சந்திப்பில் நம் சந்திப்பு நினைவிருக்கிறதா?
கிரி

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல அறிமுகங்கள்.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை