மென்பொருள் இல்லாமல் வீடியோவை சேர்க்கலாம்

நண்பர்களே நாம் ராபிட்ஷேர் மூலம் .mpg ஒரு முழு வீடியோ பைலை துண்டு துண்டாக  தரவிறக்கி வைத்து இருப்போம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு பாகம் முடிந்தவுடன் மறுபடி இரண்டாம் பாகத்தை கிளிக் செய்து வீடியோவை தொடர வேண்டும். இந்த மாதிரி துண்டு துண்டு வீடியோக்களை முழுமையாக சேர்த்து பார்த்தால்தான் முழு வீடியோ பார்த்ததிருப்தியாக இருக்கும்.  இதற்காக ஒரு ஜாயின் டூலை தேடிக் கொண்டிருக்க முடியாது அல்லவா அதற்கு ஒரு எளிய வழி டாஸ் கட்டளையில் உண்டு. அதுதான் காப்பி கட்டளை. இப்பொழுது அதை எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம்.

உங்களிடம் உள்ள .mpg கோப்புகளை சரியாக வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்களிடம் நான்கு part1.mpg, part2.mpg, part3.mpg part4.mpg  என்ற துண்டு துண்டாக கோப்புகள் உள்ளது என்று வைத்துக்கொள்வோம்.
முதலில் அந்த கோப்புகள் இருக்கும் டைரக்டரிக்குச் செல்ல வேண்டும்.

நீங்கள் வைத்து இருக்கும் கோப்புகள் c:\temp ல் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

முதலில் start மெனுவை கிளிக் செய்து run  தேர்வு செய்யவும். பின்னர் அதில் cmd என்று டைப் செய்து enter தட்டவும்.

பின்னர் copy /b  part1.mpg + part2.mpg + part3.mpg + part4.mpg  fullmovie.mpg என்று டைப் செய்து என்டர் தட்டவும்.பிரதாப முதலியார் சரித்திரம் மென்னூல்

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை