உங்கள் கணிணி எவ்வளவு மின்சாரம் உபயோகிக்கிறது ?????

நண்பர்களே இதுவரை எத்தனை பதிவுகள் எழுதியிருந்தாலும்  இந்த பதிவு எழுதும் போது கூடுதல் மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன்.  இதில் ஒரு வருத்தமும் உள்ளது அதை பின்னாடி கூறுகிறேன்.  முதல் மகிழ்ச்சி சென்ற பதிவில் கூறியது போன்று இது என்னுடைய 250வது  பதிவு. இந்த பதிவுகள் என்று எழுத ஆரம்பித்த பிறகே எனக்கு நண்பர்கள் அதிகளவில் கிடைக்க ஆரம்பித்தனர். அதில் மிகவும் இவர் அவர் என்று குறிப்பிட முடியாதவர் வெகு பலர் இருந்தாலும். சிலரை கட்டாயம் கூறியாகி வேண்டும்.  அவர்கள் நா. முத்துக்குமார் சிங்கப்பூர், வேலன், தமிழ்நெஞ்சம், கார்த்திகேயன், பொன்மலர்ரிஷான் செரிப், வால்பையன் இவர்கள் மட்டுமல்லாமல் எத்தனையோ பேர் எனக்கு தினமும் மெயிலிலும், சாட்டிங்கிலும், பின்னூட்டமிட்டும் என்னை ஊக்கப்படுத்தி இது வரை கொண்டு வந்தவர்கள்.  இது வரை எழுதுவதை நிறுத்தி விடலாம் என்ற எண்ணம் வந்த போதெல்லாம் இவர்கள் மட்டும் நீங்கள் எழுதுவதை நிறுத்த வேண்டாம் என்று கூறி என்னை தடுத்தவர்கள்.  இவர்கள் அனைவருக்கும் என் மேல் தனிப்பட்ட பாசம் நட்பு உண்டு என்பதனை அறிவேன். இது போல் கிடைக்க என்ன புண்ணியம் செய்தேன் பதிவுகள் புகழ் பெறும் காலத்தில் நான் இருப்பதை பெருமைப்படுகிறேன்.  இவர்கள் மட்டுமல்லாமல் எனக்கு தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போட்டு என்னுடைய பதிவுகளை மேலே கொண்டு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

இவர்கள் மட்டுமல்லாமல் என்னுடைய ஒவ்வொரு பதிவுகளையும் தமிழிசில் இணைத்த போதெல்லாம் நிறைய நண்பர்களுக்கு சென்றடைய உதவியர்களில் குறிப்பிடத்தகுந்த திரட்டி  தமிழிஸ் திரட்டியும் ஒன்று.  என்னுடைய ஒவ்வொரு பதிவையும் பிரபல பதிவாக்கி என்னை ஊக்குவித்த தமிழிசிற்கு நன்றி.

தமிழ்மணம் திரட்டி பேரை கேட்கும்போதெல்லாம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.  ஏன் என்றால் இவர்களும் என்னை ஊக்குவித்த திரட்டிகளி மிகவும் முக்கியாமன ஒரு திரட்டி.

இது மட்டுமல்லாமல் என்னுடைய பதிவுகளை திரட்டி தமிழில் வெளிவரும் முதல் கணிணி இதழ் தமிழ்கம்ப்யூட்டர் மாதம் இருமுறை வெளிவரும் இதழில் இரண்டு முறை வெளியிட்டுள்ளனர்.  தமிழ்கம்ப்யூட்டர் ஆசிரியர் அவர்களுக்கு என் உள்ளங்கனிந்த நன்றி.

சென்ற பதிவிலே கூறியிருந்தேன் என்னுடைய பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது. என் பதிவை வெளியிட்ட விகடன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

என்னடா இவன் எல்லோருக்கும் நன்றி சொல்லி ஒவரா பிட்டை போடறான் என்று நினைக்கலாம் சிலர் அவர்களுக்கு அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.  என் தந்தை சொல்லிக் கொடுத்த குறள் ஒன்று இன்னும் நான் மறக்கவில்லை அதனால்தான்.  அந்தக் குறள் 


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

வருத்தம் என்னவென்றால் பதிவுகளை படிக்கும் அனைவரும் படித்தவுடன் ஒரு நன்றி தெரிவிப்பதில்லை அப்படி தெரிவிக்க இயலாதவர்கள் பதிவில் இடம்பெறும் விளம்பரங்களையாவது கிளிக் செய்யலாம்.  இது வருத்தம் மட்டுமே

என்னுடைய பதிவுகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இதுவரை என்னை பின் தொடர்பவர்கள் - 95
இதுவரை என் பதிவுகளி படித்தவர்கள்   - 41601
ரீடரில் படிப்பவர்கள்                                     -   246
பின்னூட்டமிட்டவர்கள்                              -   410


இது மிகப் பெரிய பதிவாகிவிட்டதால் சில மட்டுமே இன்று மீதி அடுத்து வரும் பதிவுகளில்

உங்கள் கணிணியில் மின்சாரம் எவ்வளவு எந்தெந்த டிவைஸ்களுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது என்று தெரிந்து கொள்ள ஏற்ற தளம்.  இந்த தளத்தில் உங்கள் மதர்போர்டு வகை, ப்ரோஸசர் வகை, நினைவகம் வகை, டிஸ்ப்ளே அடாப்டர் வகை, டிவிடி வகை, ஹார்ட் டிஸ்க் வகை ஆகியவற்றை கொடுத்தால் போதும்.  அதிலும் நினைவகம், டிஸ்ப்ளே அடாப்டர், டிவிடி வகை, அடாப்டர் வகை எத்தனை உபயோகப்படுத்துகிறீர்கள் என்றும் கொடுக்கலாம்.  சிலர் ஹார்ட் டிஸ்க் இரண்டு டிவிடி இரண்டு என்று உபயோகபடுத்துவார்கள் அவர்களுக்காகவும்.  சுட்டிநீங்கள் டிஜிட்டல் கேமராவில் புகைப்படங்கள் எடுத்தால் கண்கள் மட்டும் சிகப்பு கலரில் இருக்கும்.  இது பெரும்பாலும் பழைய கேமராவில் எடுத்தால் இது போல வரும். இதன் பெயர் ரெட் ஐ (Red Eye) என்பார்கள்.  இதை எப்படி நீக்குவது. உங்கள் புகைப்படத்தை இந்த தளத்தில் உள்ளீடு செய்து புகைப்படத்தில் உள்ள ரெட் ஐ நீக்கலாம்.  சுட்டிநன்றி மீண்டும் வருகிறேன்

11 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை