நண்பர்களே இணையத்தில் எவ்வளவோ மின் புத்தகங்கள் உள்ளன. அவை அனைத்தையும் இதனுள்ளே தான் வைத்துள்ளது போல் உள்ளது. நீங்கள் எந்த ஒரு புத்தகங்களையும் தேடி பெறலாம். இங்கு உள்ள அனைத்தும் கணிணி கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மொத்தம் 38,000,000 புத்தகங்கள் உள்ளனவாம். இது மட்டுமல்லாமல் இன்னும் சேர்க்கப்படும். உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை நேரடியாக தரவிறக்கிக் கொள்ளலாம் பிடிஎப் கோப்பாக இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள் செல்லுங்கள் தளத்திற்கு தரவிறக்கச் சுட்டி
உங்கள் குழந்தைகள் இணையத்தில் மிக அதிக நேரம் செலவிடுகிறார்களா கொஞ்சம் உஷாராக இருக்கவும். கணிணி வழியாக உங்கள் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முகம் தெரியாத இணையத் தீவிரவாதிகள் உள்ளனர். அதற்கு என்ன செய்வது அவர்கள் பாடத்திற்கு ரெபரன்ஸ் (Reference) தேடுகின்றனர் என்று கூறி விட்டு ஆபாச பாடம் படிக்க சென்றால் அவர்களை கண்காணிப்பது என்று உங்களுக்கு கவலையா உங்கள் கவலையை விடுங்கள் உங்களுக்கு என்று ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று முதலில் பதிவு கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆக்டிவேசன் மெயில் அனுப்புவார்கள். அதை ஆக்டிவேட் செய்யவும். பிறகு ஒரு மென்பொருள் தரவிறக்க கூறுவார்கள். இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் குழந்தை உபயோகிக்கும் கணிணியில் நிறுவி விடுங்கள். உங்கள் குழந்தைக்கென்று தனி யூசர் உருவாக்கியிருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கண்காணிக்க வேண்டிய யூசர்களை கொடுக்கவும் முடிந்தது. இனி வாரம் ஒரு முறை உங்கள் குழந்தைகள் எந்தெந்த தளங்களுக்கு அதிகசென்றுள்ளனர். எந்தெந்த மென்பொருட்களை அதிகம் உபயோகப்படுத்தியுள்ளனர் என்று உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள். சுட்டி
யூட்யுப் தளத்தில் இருந்து உயர்தர ஒளி படங்களை தரவிறக்க இந்த ஆடு ஆன் உபயோகப்படும் உங்களுக்காக சுட்டி
இந்த ஆடு - ஆன் குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆங்கிலப் பதிவு சுட்டி
நீங்கள் சில மென்பொருட்கள் உபயோகிக்கும் போது மூட ஆல்ட் + எப் 4 (Alt + F4) உபயோகித்திருப்பீர்கள். இதற்கு பதில் இந்த சூப்பர் எப் 4 உபயோகித்து பாருங்கள். மிக வேகமாக மூட இந்த மென் பொருள் உபயோகிக்கலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி
எந்தவொரு வீடியோவாக இருந்தாலும் அதில் இருந்து ஆடியோவை எம்பி3 ஆக மட்டும் தனியாக பிரித்து கொடுக்க இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். சுட்டி
மைக்ரோசாப்டின் லைவ் ஹாட்மெயிலில் 500ஜிபி வரை இடம் அளித்திருக்கிறார்கள் எனக்கு இன்னமும் 5ஜிபி தான் தருகிறார்கள் யாருக்காவது உண்மை என்னவென்று தெரிந்தவர்கள் யாராவது கூறவும்.
நன்றி மீண்டும் வருகின்றேன்
4 ஊக்கப்படுத்தியவர்கள்:
நல்ல தகவல்கள் அண்ணா........
அந்த டுடோரியல் தளத்தை கண்டிப்பாக நான் நன்கு பயன்படுத்திக்கொள்வேன்......
உங்கள் தகவலை நான் ஆர்க்குட்டில் பயன்படுத்திக்கொண்டேன்......
நல்ல தகவலை பகிர்ந்து கொள்ள COPY PASTE தவறில்லைதானே...
நல்ல தகவல்கள் அண்ணா......
வடிவேலன்,
என்ன இவ்வளவு தகவல்களையும் ஒரே பதிவில் கொடுத்து எதை முதலில் படிப்பது எதை முடிவில் படிப்பது என்று திணற வைத்து விட்டீர்கள் எல்லாமே நல்ல தகவல்கள் நன்றி உங்கள் பணிக்கு.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
U may change ur setting of the origin to US & chk, For Hotmail
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்