நண்பர்களே நாம் நெருப்பு நரி உலாவி உபயோகப்படுத்தும் போது சில நேரங்களில் தவறுதலாக உலாவியில் முக்கிய தளம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தெரியமால் டேபை மூடிவிடுவோம். பிறகு அந்த டேபில் எந்த தளம் பார்த்தோம் என்ற ஞாபகம் இருக்காது. அதனால் நேர விரயம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். இதற்கு தீர்வு என்ன அந்த திரும்ப பெற்றால் எப்படியிருக்கும். அதற்கு ஒரு வழி உண்டு
உங்கள் நெருப்பு நரி உலாவி திறந்திருக்கும் போது தெரியாமால் எந்த டேபை மூடினோமோ அந்த டேபை திரும்ப பெறுவதற்கு நெருப்பு நரி உலாவியில் History தேர்வு செய்து Recently Closed Tabs என்பதனை தேர்வு செய்தால் அதில் நீங்கள் கடைசியாக மூடிய பத்து டேப்கள் கிடைக்கும்.
அப்படி இல்லை எனக்கு கடைசியாக மூடிய தளம் மட்டும் உடனே வேண்டுமென்றால் உங்கள் கீபோர்டில் கண்ட்ரோல் கீயையும் சிப்ட் கீயையும் பிடித்துக் கொண்டு டி தட்டுங்கள் Ctrl + Shift + T தட்டினால் உடனே கடைசியாக மூடிய டேப் கிடைக்கும்.
இதையே தொடர்ந்து பத்து முறை செய்தால் கடைசியாக மூடிய பத்து டேப்கள் திறக்கும்.
இதையே கூகிள் க்ரோமில் செய்ய Ctrl + H கொடுத்தால் History பக்கம் திறக்கும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் எந்த தளம் திறக்க வேண்டுமென்று. அதே New Tab என்பதனை தேர்வு செய்தால் வலது பக்கமூலையில் கீழே மூன்று டேப்கள் காட்டும் இதுவே நீங்கள் கடைசியாக மூடிய மூன்று தளங்கள்.
இதையே மைக்ரோசாப்டின் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் செய்ய
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 உபயோகிப்பவர்கள் - Ctrl+Shift+H கொடுத்தால் இடது பக்கம் History பக்கம் திறக்கும் அதில் இருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 மற்றும் 6 உபயோகிப்பவர்கள் Add-on உபயோகிக்க வேண்டும். அதற்கு இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள் சுட்டி
இதையே ஒபராவில் பிரவுசரில் செய்ய Ctrl +Z கொடுத்தால் கடைசியாக மூடிய தளங்கள் கிடைக்கும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
3 ஊக்கப்படுத்தியவர்கள்:
ரொம்ப முக்கியமான தகவல் எனக்கு!
நன்றி தல!
பயனுள்ள தகவல். மிக்க நன்றி வடிவேலன்
வடிவேலன்,
நல்ல தகவல் நன்றிகள் உங்கள் பணிக்கு. தெரியாக அனைவருக்கும் மிக்க பயனாயிருக்கும்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்