வானம் பார்க்கலாம் வாங்க

நண்பர்களே இரண்டு நாட்கள் எழுத முடியவில்லை என்னுடைய படைப்பு திருடப்பட்டதால் வந்த கோபம் இரண்டுமணி நேரத்தில் அந்த பாதிப்பு அடங்கி விட்டாலும்.  சரி விடு இவர்களெல்லாம் திருந்த போவதில்லை நாம் என்ன சொன்னாலும்.

அப்பொழுது இருந்த கோபத்தில் பிளாக்கன் அவர்களிடம் என் கோபதை வெளிபடுத்திருந்தேன். அவர் ஒரு பதிவாக எழுதிவிட்டார். சுட சுட கிழிந்ததென்ன தெரிஞ்சுக்கோ பிளாக்கன்னுக்கு நன்றி எங்கள் கஷ்டங்களை புரிந்து கொண்டு ஒருபதிவாக எழுதியமைக்கு நன்றி மற்றும் எனக்கு தமிழ்நெஞ்சம், சுபாங்கன், முத்துக்குமார் சிங்கப்பூர், சுரேஷ், சக்திவேல், யூர்கன் க்ருகியர், ரெபெல், சாய்தாசன், சுபாஷ், சித்து மற்றும் மெயில் மூலம் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி. 

இன்றைய பதிவிற்கு போகலாம்.  தினமும் வெயில் ஏறுகிறது இறங்குகிறது இருந்தாலும் நாம் அனைவரும் வெயிலில் சென்று வந்தவுடன் அடடா என்ன வெயில் வெயில் என்று மனம் அங்கலாய்க்கும்.  அப்படி செல்லும் முன் நம்மால் எவ்வளவு வெயில் இருக்கும் இன்று மேகம் மூட்டம் இருக்குமா என்று பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்.




இந்த மென்பொருள் மூலம் அதை செய்யலாம்.  அதற்குதான் எத்தனையோ மென்பொருட்கள் உள்ளதே அது மட்டும் இன்றுள்ள இணையத்தில் இதை சுலபமாக பார்க்கலாம் என்று கூறுவது எனக்கு கேட்கிறது. எத்தனை இருந்தாலும் இந்த மென்பொருளில் உங்கள் தலைக்கு மேலே உள்ள வானத்தை நேரடியாக பார்க்கலம்.  மேகங்கள் இப்பொழுது எப்படி உள்ளது என்று பார்க்கலாம். இந்த மென்பொருளுக்கான சுட்டி
குறிப்பு: நண்பர்களே எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் தமிழிலிசில் ஒட்டு போடுங்கள் விளம்பரங்களை கிளிக் செய்யுங்கள் உங்கள் ப்ளாக்கில் போட வேண்டுமென்றால் எங்களை அணுகுங்கள். ஒரு நன்றி அறிவிப்பு கீழே போடுங்கள் எங்கள் தளத்தின் முகவரியை சேர்த்து போடுங்கள்.

நன்றி மீண்டும் வருகிறேன்

2 ஊக்கப்படுத்தியவர்கள்:

யூர்கன் க்ருகியர் said...

nice !

Muthu Kumar N said...

வேலன்,

வானம் வசப்படும் என்ற உத்வேகத்தோடு உங்கள் பதிவுகளை தொடருங்கள். நீங்கள் தொட வேண்டிய உயரங்களை நிச்சயம் தொடலாம்...

வானம் பார்க்கலாம் வாங்க நம் சென்னை வானிலை அறிக்கை நிலையத்திற்கு மிக முக்கியமாய் தேவைப்படும் என்றே நினைக்கிறேன்..

எப்போது பார்த்தாலும் மழை வரலாம் வந்தாலும் வரும் தெற்கு தென்மேற்கு என்று இருக்கிற ஒரு திசையையும் விடமாட்டார்கள் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் மெயிலில் இப்பதிவை அனுப்பி வையுங்கள் உங்களுக்கு புண்ணியமாய் போகும்....

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை