நண்பர்களே நாம் கூகிளில் உள்ள கூகிள் டாக்ஸ் உபயோகப்படுத்தியிருப்போம். அந்த ஆன்லைன் Google docs நிறைய கோப்புகள் சேமித்திருப்போம். அப்படி சேமித்த அனைத்து கோப்புகளையும் தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகப்படும்.
இந்த மென்பொருளை தரவிறக்கி சாதராண மென்பொருள் போல நிறுவிக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த மென்பொருளை இயக்கி அதில் User Name உங்கள் கூகிள் நுழைவுச் சொல்லை கொடுக்கவும்.
பின்னர் Password என்ற இடத்தில் உங்கள் (Password) கடவுச்சொல்லை கொடுக்கவும்.
பின்னர் உங்கள் கணிணியில் எந்த இடத்தில் சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பின்னர் Exec என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்கள் Google Docs அனைத்தும் தரவிறக்கி கொடுத்து விடும்.
இந்த மென்பொருள் மிகவும் நம்பகத்தன்மையானது. அது மட்டுமில்லாமல் புதிய பதிப்பு வந்தால் புதுப்பித்துக் கொள்ளும் வசதி. அத்துடன் கூகிளின் நிறுவனத்தில் இருந்து வந்தது என்றால் கேட்கவும் வேண்டுமா என்ன?
மென்பொருள் தரவிறக்க சுட்டி
.
இந்த பதிவு பிடித்திருந்தால் வோட்டு போடுங்கள் விளம்பரங்களி கிளிக் செய்து வளரச் செய்யுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
5 ஊக்கப்படுத்தியவர்கள்:
தலீவா !! நாதான் டவுசரு வந்து கீறேன், உனுக்கு உன்னொரு ஊடு
கீதா ? தெரியாத்தனமா
அங்க போய் மட்டிகினேன் , அங்க போனா ,ஐயையோ !!!
வேற பாஷைலக் கீதே ??
நம்பளுக்கு ஒன்னும் எட்டலியே !!!
நீ ரொம்ப பட்ச மன்சாலு போல
கீதே ? செரி உங்கிட்டியே மொத்த மேட்டரயும் கத்து கீறேன் அப்பால நம்ப பேட்டைல போய் கொடி நாட்றேன்,
உன்து மொதல்லேந்து படிக்கணும் வேல கீது, வர்ட்டா !!
பயனுள்ள பதிவு நன்றி. வின்ரார் ஒரு பகுதியை மட்டும் திறக்கும் மென்பொருள் இருந்தால் தெரிவிக்கவும்.
அன்புடன் மகாராஜா
பயனுள்ள பதிவு.. உங்கள் தமிழாக்கம் நன்று!!
தொடருங்கள்.. வாழ்த்துக்கள்!!
இந்த கூகிள் பசங்க கலக்குறாய்ங்களே...
:-)
நன்றி பகிர்வுக்கு
வடிவேலன்,
வாழ்த்துகள் அருமையான பதிவு. நல்ல தகவல்.
வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்