அத்திவாசியமான இணையத்தளங்கள்

நண்பர்களே எல்லோரும் விருது வாங்கி  தங்களின் வலைப்பூவில்  நாங்களும் விருது வாங்கிட்டோம் என்று  இணைத்த போது மிகவும் ஆசைப்பட்டேன்.   நானும் இது போல ஒரு முறை விருது வாங்குவேன் என்று நினைத்தேன் அது நடந்தேறி விட்டது. நமது வால்பையன் கூட ஒரு நாள் சாட்டிங்கில் பேசும் போது கரப்பான்பூச்சி விருதுதான் இருக்கிறது என்றார். சரி நமக்கு கிடைக்கும் போது கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு விட்டுவிட்டேன்.  இன்று காலை மெயிலை திறந்தல் நமது வேலனின் மெயில் தான் முதலில் கண்ணில் பட்டது.  என்னையும் சக நண்பர்கள் பதிவின் வரிசையில் சேர்த்து எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கியிருக்கிறார். அவர்கட்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி அவர் விருது அறிவித்த பதிவு சுட்டி என்னுடன் விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  அத்துடன் புதுமையாக திரட்டிகளுக்கும் விருது வழங்கி கெளரவித்துள்ளார் நண்பர் வேலன் அவர்கள் அவருடைய செய்கை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.  இதுவரை யாரும் யோசிக்காத ஒரு விஷயத்தை செய்துள்ளார் வாழ்த்துக்கள்.  என்னுடைய விருது வலது பக்கத்தில் மாட்டி வைத்திருக்கிறேன் பாருங்கள்.
 
இனி விஷயத்திற்கு வருவோம்.
நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பிரிட்ஜ், தொலைக்காட்சி, கணிணி, கணிணி உதிரிபாகங்கள்,  செல்பேசி,  இது மட்டுமல்லாமல் நிறைய பொருட்கள்ளை வாங்கும் பொழுது மட்டுமே அந்த பொருட்களின் கையேடுவை  (Guide), படித்திருப்போம் (அ) பார்த்திருப்போம். பிறகு அதை மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுவோம். அது போன்று பொருட்களின் கையேடுகளை முடிந்தால் உடனே உங்கள் இணையத்தில் சென்று அந்த நிறுவனத்தின் நீங்கள் வாங்கிய பொருளின் கையேடு தரவிறக்கிக் கொண்டால் மிக்க நலமாக இருக்கும் பின்னர் உபயோகமாக இருக்கும்.  சில நாட்கள் ஆகிவிட்டது அந்த நிறுவனத்தில் அந்த கையேடு கிடைக்க வில்லை என்றால் இந்த வலைத்தளத்தில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம். இங்கு அனைத்து கையேடுகளும் கிடைக்கிறது. சென்று பாருங்கள் பிறகு சொல்லுங்கள் .
வலைத்தளச் சுட்டி 

உங்கள் கணிணியில் உள்ள கோப்புகள், புகைப்படங்கள், யுட்யூப் வீடியோக்கள், யாகூ பிளிக்கர், இணைய லிங்குகள், கூகிள் மேப்,  நிகழ்ச்சி நிரல்கள், ஆகியவற்றை நேரடியாக இணையத்தளத்தில் சேமிக்க இந்த இணையத்தளம் மிகவும் உபயோகமாக இருக்கும். அத்துடன் 10ஜிபி அளவு இடம் தருகிறார்கள்.   வலைத்தள சுட்டி.
உங்கள் பயோடேட்டா,  ரெஸ்யூம், (Biodata, Resume) போன்றவற்றை எளிதாக அழகாக உருவாக்க இந்த தளங்கள் மிகவும் உதவியாக இருக்கும். இது போன்ற என்னுடைய பழைய பதிவு சுட்டி
புதிய சுட்டிகள் கீழே
இதில் மேலே சுட்டி இரண்டில் மட்டும் மூன்று பிரிவு வைத்திருக்கிறார்கள், புதியதாக வேலை தேடுபவர்கள், வேலையில் நீண்ட அனுபவத்துடன் வேலை தேடுபவர்கள், வேலையில் குறைந்த அனுபவம் கொண்ட வேலை தேடுபவர்கள் என்று தனித்தனி சுட்டிகள் கொடுத்துள்ளேன்.
புதியதாக வேலை தேடுபவர்கள்     - சுட்டி 
நீண்ட அனுபவம் உள்ளவர்கள்        - சுட்டி 
குறைந்த அனுபவம் உள்ளவர்கள்  - சுட்டி
குறிப்பு : இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் ஒட்டை தமிழிசிலும் தமிழர்ஸிலும் குத்த மறவாதீர்கள். மேலே கீழே உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து எங்களை வளரச் செய்யுங்கள். பிடித்தவர்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்யுங்கள் இதனால் அனைவரும் வெகுஜன மக்களிடம் சேரும் வாய்ப்புள்ளது. 




நன்றி மீண்டும் வருகிறேன்

2 ஊக்கப்படுத்தியவர்கள்:

அன்புடன் அருணா said...

நல்ல நல்ல விஷயமாக எழுதுகிறீர்கள்...ஆனால் இவ்வ்ளோ பெரிய பதிவாயிருந்தால் படிக்க மாட்டாங்களே!!!...ஒவ்வொரு விஷயமா சின்னச் சின்ன பதிவாப் போடுங்க...கலக்கலாம்!

Muthu Kumar N said...

வடிவேலன்,

வாழ்த்துகள் வடிவேலன் விருது
வாங்கியதிற்கு.
நல்ல விஷயங்கள் நிறைந்த பதிவு.

அருணா அவர்கள் சொன்ன கருத்தையும் எண்ணத்தில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு பதிவு என்று இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை