நண்பர்களே நம்மிடம் நிறைய கோப்புகள் இருக்கும் அதை நேரடியாக ஜிமெயிலில் சேமிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கி சாதரணமாக நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் மென்பொருளை திறந்து உங்கள் ஜிமெயில் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுக்கவும். ஒகே கொடுங்கள் பின்னர் Exit கிளிக் செய்து வெளியேறுங்கள். ஒரு சிறிய ஐகான் ஒன்று உங்கள் டாஸ்க் மேனஜரில் அமர்ந்திருக்கும். பின்னர் எந்த கோப்புகள் வேண்டுமோ அதை ரைட் கிளிக் செய்து Backup 2 Email என்பதனை கிளிக் செய்தால் உங்கள் அஞ்சல் முகவரிக்கு நேரடியாக அந்த கோப்பை அப்லோடு செய்துவிடும். ுங்கள் கோப்பு 10 எம்பிக்கு மேல் இருந்தால் அதை தானாகவே Split செய்து அப்லோடு செய்துவிடும்.
இந்த மென்பொருளின் சிறப்பம்சம் ஜிமெயில் மட்டுமல்லாமல் எல்லாவகை மெயிலும் ஆதரிக்கும் திறமை படைத்தவை. உதராணம் யாகூ, ஹாட்மெயில், ரெடிப்மெயில் போன்றவை சில
இதில் ஜிப் செய்யும் வசது உண்டு.
நேரடியாக போல்டரை தரவேற்றலாம்.
SSL SMTP செட்டிங்ஸ் மாற்ற முடியும்.
Default ஆக மெயில் என்று ஒன்று வைத்துக் கொண்டு இரண்டாவது மூன்றாவது என்று அஞ்சல் முகவரிகள் கொடுக்கலாம்.
மென்பொருள் சுட்டி
2 ஊக்கப்படுத்தியவர்கள்:
நல்ல தகவலா இருக்கே.. நன்றி...
வடிவேலன்,
மின்னஞ்சல் மூலம் அதிக பைல்களை ஆன்லைனில் சேமித்துக்கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் பதிவு மிக உதவியாக இருக்கும்.
வளர்க உங்கள் பணி..
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்