நண்பர்களே இது நேற்றே எழுதி வைத்தது இன்றுதான் வெளியிடு்கிறேன். இன்று திருமணநாளை முன்னிட்டு தங்கமணியை வெளியில் கூட்டி செல்லாவிடில் எனக்கு சாப்பாடுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். சரி விஷயத்திற்கு வருவோம் கூகிள் ஜிமெயில் கணக்கு இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏன் என்றால் கூகிள் ஜிமெயிலில் எத்தனையோ வசதிகள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூகிளின் ஜிமெயில் முன் யாகூ மெயில் , மைக்ரோசாப்டின் ஹாட்மெயில் ஆகிய இரண்டும் இரண்டாமிடத்தை பிடிக்கிறது. கூகிளின் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பார்கள் சிலர் இரண்டு மூன்று ஏன் ஐந்து கூட வைத்திருப்பார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது
ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு அஞ்சல் வந்திருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் திறந்து பார்த்து சோதனை செய்ய வேண்டாம். அதற்காகவே மூன்று வெவ்வேறு மென்பொருட்கள் உள்ளது அதன் வரிசைகள் கீழே கொடுத்துள்ளேன்.
1. ஜிமெயில் Notifier
இது கூகிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது மட்டுமே மிகவும் தரமானது என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் மூலம் ஒரு கணக்கினை மட்டுமே பயன்படுத்த இயலும். இந்த மென்பொருள் வழியாக நீங்கள் ஜிமெயில் Login செய்தவுடன் சிறிய ஐகானாக டாஸ்க்பார் ட்ரேவில் அமர்ந்து கொள்ளும் ஏதாவது அஞ்சல் வந்தால் உங்களுக்கு பாப் - அப் செய்து தெரிவிக்கும்.
2. நெருப்பு நரி உலாவியில் ஜிமெயில் Notifier
நெருப்பு நரியில் உலாவில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது அஞ்சல் வந்தால் தெரிவிக்கும் இதன் மூலம் ஒரு கணக்கினை மட்டுமே பயன்படுத்த இயலும்.
3. ஜிமெயில் Notifier 5
இந்த மென்பொருள் மூலம் ஒரே நேரத்தில் ஐந்து கணக்கினை கையாளலாம்.
நன்றி மீண்டும் வருகிறேன்
2 ஊக்கப்படுத்தியவர்கள்:
வடிவேலன்,
நிறைய மெயில் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு தலையை பிய்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு நிச்சயம் இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என்பது நிச்சயம்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
thanks for ur information
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்