உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும்

நண்பர்களே உங்கள் கணனியில் My Computer என்பதை Right Click செய்து பார்த்தால் உங்கள் கணணியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம், நினைவகம்,  ப்ரோசஸரின் பெயர், வேகம் ஆகியவை காட்டும். இது அனைத்தும் வலது பக்கம் இருக்கும்.  இடது பக்கம் ஒரு மானிட்டரின் படம் மட்டும் இருக்கும் அதற்கு கீழே வெற்றிடம் மட்டுமே இருக்கும் அந்த வெற்றிடத்தில் உங்கள் அல்லது மனைவி குழந்தைகள் புகைப்படம் வரவழைப்பது பற்றி பார்ப்போம்.

முதலில் ஒரு Notepad ஒபன் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் கீழே உள்ளவற்றை Copy செய்து Notepad ல் பேஸ்ட் செய்யுங்கள்

[General]
Manufacturer=Your Name Here
[Support Information]
Line1=Your Name Here
Line2=Your Address Here
Line3=Your Email Address Here


இதில் சிகப்பு நிறத்தில் எழுதி உள்ள இடங்களில் உங்கள் பெயர் அல்லது உங்களுக்கு பிடித்த பெயர் நிரப்பி கொள்ளுங்கள்.

நீல நிறத்தில் எழுதி உள்ள இடத்தில் உங்கள் முகவரி எழுதிக் கொள்ளுங்கள்

பின்னர் பச்சை நிறத்தில் எழுதி உள்ள இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது உங்கள் வலைத்தள முகவரி எழுதிக் கொள்ளுங்கள்.

பின்னர் அந்த கோப்பினை File கிளிக் செய்து அதில் Save As என்பதனை தேர்வு செய்து OEMINFO.INI என்ற பெயரில் கோப்பினை சேவ் செய்து C:\Windows\System32 என்ற முகவரியில் சேமியுங்கள்.

பின்னர் நீங்கள் கொடுக்கப்போகும் புகைப்படத்தை http://www.picresize.com இந்த வலைத்தளம் சென்று தரவேற்றி 180x120 pixels அளவுக்கு மாற்றிக் கொண்டு அந்த கோப்பினை oemlogo.bmp என்ற பெயரில் சேமியுங்கள். பின்னர் அந்த கோப்பினையும் C:\Windows\System32 என்ற முகவரியில் சேமியுங்கள்.

முடிந்தது இனி உங்கள் புகைப்படத்தையும் கீழே உள்ளது போல் காணலாம்

 

நேற்று கணணித் திரையை படம்பிடிக்கும் சட்ட ரீதியான மென்பொருளுக்கான வலைத்தளம் கொடுத்திருந்தேன்.   இது போல் நெருப்புநரி உலாவியில் உள்ளதா என சிலர் கேட்டிருந்தனர்.  இது போல் இல்லை என்றாலும் நெருப்பு நரியில் உலாவும் போது மிக பெரியதான வலைத்தளங்களை புகைப்படம் பிடிக்க இந்த ஆடு - ஆன் உதவும்.  சுட்டி


சில மணி நேரங்கள் செலவழித்து எழுதும் கட்டுரைகள் அனைத்தும் எங்களது வலைத்தளத்தில் திருடப்பட்டு வேறோரு வலைத்தளத்தில் வெளியிடப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  இது மிகவும் விரும்பத்தகாத சம்பவம் அத்துடன் அப்படி வெளியிட விரும்பினால் அதன் கீழே எங்கள் வலைப்பதிவு லிங்க் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 


உங்கள் ஒட்டுகள் அனைத்தையும் பதிவு செய்யுங்கள். விளம்பரத்தையும் கிளிக் செய்து எனக்கு உதவுங்கள்.



2 ஊக்கப்படுத்தியவர்கள்:

வினோத்குமார் said...

உங்களின் பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது நண்பரே!. என்னைப் போன்ற software படிக்காதவர்களுக்கு மிகவும் பயனுள்ளது...

வாழ்த்துகள்..........

Muthu Kumar N said...

வடிவேலன்,

அருமையான பதிவு, புதிதாய் காணிணியை சொந்தமாக வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும்...

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
முத்துக்குமார்.ந

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை