நண்பர்களே விண்டோஸ் திரையில் நடக்கும் நிகழ்வை நீங்கள் உங்கள் வலைப்பதிவில் இணைக்க விரும்பினால் என்ன செய்வீர்கள். உடனே ப்ரிண்ட் ஸ்கீரின் பட்டனை தட்டி பின்னர் மைக்ரோசாப்ட் பெயிண்ட் திறந்து அதில் பேஸ்ட் செய்து பின்னர் jpg பார்மேட்டாக சேமிப்பீர்கள். ஆனால் அதே வீடியோவாக வேண்டும் என்றால் உடனே மாற்று மென்பொருள் தேடவேண்டும். இதை இரண்டும் செய்யும் ஒரெ மென்பொருள் உங்களுக்காக இலவசமாக கீழே கொடுத்துள்ளேன்.
இதன் சிறப்பம்சங்கள் கீழே:
- முழுதிரையும் படம்பிடிக்கலாம்
- தேவையான விண்டோவை மட்டும் படம்பிடிக்கலாம்.
- குறிப்பிட்ட பகுதியை மட்டும் படம் பிடிக்கலாம்.
- பின்வரும் பார்மெடுகளாக சேமிக்கலாம். BMP, JPG, GIF, PNG, TIFF, WMV
- நேரடியாக மின்னஞ்சலில் இணைத்து அனுப்பலாம்.
- நேரடியாக PrtScr பட்டனை தட்டி இதை பெற இயலும்.
- முழுவதும் இலவசம்.
- வைரஸ் ஆட்-வேர், மால்வேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
3 ஊக்கப்படுத்தியவர்கள்:
அருமையான மென்பொருள் மற்றும் இலவசம் கூடுதல் அருமை.
வளர்க உங்கள் பணி. உங்கள் தொண்டு சிறக்க என் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
மிகவும் உபயோகமான தகவல்கள்.. நன்றி வேலன்
Thank you for sharing this software.
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்