பாலாவின் நான் கடவுள்

நண்பர்களே நான் கடவுள் பாடல்கள்  தரவிறக்கம் உங்களுக்காக
பாடல்கள் ஒவ்வொன்றும் மிக அருமை

படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கட்டாயம் விருதுகள் தர வேண்டும்.


இயக்குநர் பாலா சினிமா உலகில் ஒரு மைல் கல்.

அத்துடன் படத்தை திருட்டு விசிடியில் பார்க்க வேண்டாம். திரையரங்குக்கு செல்லவும். இந்த மாதிரி படத்திற்கு நமது புது திரை அரங்கான வட சென்னையில் பழைமையான பிரைட்டன் பெயர் மாறி அனைத்தும் மாறி ஐ ட்ரீம்மில் பார்க்கலாம்.

1. அம்மா உன் பிள்ளை
2. கண்ணில் பார்வை
3. மாதா உன் கோவிலில்
4. ஒம் சிவ ஒம்
5. ஒரு காற்றில்
6. பிச்சைப் பாத்திரம்

பிச்சைப் பாத்திரம் பாடலின் வரிகள்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே என் அய்யனே


பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே


அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் 
உண்மையை உணர்ந்திட


பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே


பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒரு முறையா இரு முறையா பல முறை 
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும் 
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மடற் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற 

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே


பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் 
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே0 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை