பிரவுஸிங் சென்டரில் இணையம் வழியே உலாவும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்

நண்பர்களே வீட்டுக் கணிணி வழியாக இணையத்தில் உலாவும் போது மட்டுமல்ல பொது கணிணிகளான சைபர் கபேக்கள், இண்டெர்நெட் பிரவுசிங் சென்டர்களில் உள்ள கணிணி வழியாக இணையத்தில் உலாவும் போதும் மிகவும் உஷாராகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். 

முதல் விஷயம் நீங்கள் பொதுக் கணிணியில் அமர்ந்து உங்கள் வேலைகளை முடித்தவுடன் கட்டாயம் அக்கவுண்டிலிருந்து  Logout அல்லது Sign Out செய்ய வேண்டும்.

நீங்கள் கணிணியில் உலாவிக் கொண்டிருக்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் அப்படியே போட்டுவிட்டு வெளியே செல்லக்கூடாது.  சில நேரம் செல்பேசி அழைக்கும் உள்ளே சிக்னல் கிடைக்க வில்லை என்றவுடன் அப்படியே சென்றுவிடுவார்கள். அதுபோல் எப்பொழுதும் செல்லக் கூடாது.

நீங்கள் பொதுக் கணிணியை உபயோகித்து முடித்தவுடன் மறக்காமல் குக்கீஸ், தற்காலிக இணைய கோப்புகள், (Temporary Internet Files) அனைத்தையும் துடைத்து விடுங்கள். 

முடிந்தவரை ஆன்லைன் பணபரிமாற்றங்களை பொதுக்கணிணியில் மட்டும் செய்வதை தவிருங்கள். அது மிகவும் நல்லது உங்களுக்கும்  உங்கள் பணத்திற்கும்.


நீங்கள் வைத்திருக்கும் சில டெக்ஸ்ட் கோப்புகள் அளவு அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறதா?  இந்த தளத்திற்கு செல்லுங்கள் நீங்கள் டைப் செய்து வைத்திருக்கும் கோப்புகளில் உள்ள எழுத்துக்களை காப்பி செய்து இந்த தளத்தில் பேஸ்ட் செய்யுங்கள் முடிந்தது சுலபமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சுட்டி








நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சவால் விடுங்கள் உன்னுடைய கடவுச் சொல்லை கண்டுபிடிப்பேன் என்று. எப்படி என்று வினவுவார். சுலபமாக முதலில் உங்கள் நண்பரை கடவுச் சொல்லை டைப் செய்ய சொல்லுங்கள் ஆனால் டைப் செய்ய மட்டுமே வேண்டும் என்டர் தட்டக்கூடாது. பிறகு கீழுள்ள ஜாவாஸ்கிரிப்ட் கோடை காப்பி செய்து அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து என்டர் தட்டுங்கள் என்ன கடவுச் சொல் என்று தானாக காட்டி விடும்.











நன்றி மீண்டும் வருகிறேன்




6 ஊக்கப்படுத்தியவர்கள்:

Robin said...

Usefule one. Thanks.

வால்பையன் said...

ரொம்ப நன்றி தல!

sakthi said...

உபயோகமான தகவல்

systechrk said...

நல்ல தகவல், ஆனால் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் இல் மட்டுமே வேலை செய்கிறது

Vadielan R said...

""நல்ல தகவல், ஆனால் இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் இல் மட்டுமே வேலை செய்கிறது""


நீங்கள் அந்த கடவுச்சொல் விஷயத்தை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது நெருப்பு நரி உலாவியிலும் சோதித்தேன் வேலை செய்கிறது.

ஸனு செல்லம் said...

தகவலுக்கு மிக்க நன்றி!!!வடிவேலண்ணே நெருப்பு நரி உலாவியிலும் வேலை செய்கிறது..

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை