இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வீடியோ கோப்பை டிவிடியாக மாற்ற எளிய வழி

நண்பர்களே நீங்கள் வைத்திருக்கும் எந்த ஒரு வீடியோ கோப்பாக இருந்தாலும் அதை டிவிடி கோப்பாக மாற்றுவது எப்படி என்பதை இன்று படிப்படியாக விளக்குகின்றேன்.அதற்கு இந்த மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்

மென்பொருள் தரவிறக்கம் சுட்டி


இந்த மென்பொருளை சாதாரண மென்பொருள் நிறுவிக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த மென்பொருளை திறக்கவும்.

மென்பொருள் திறந்தவுடன் உங்களுக்கு உதவி செய்ய இங்கெல்லாம் அணுகலாம் என்று போட்டு அதில் மூன்று  பெட்டிகள் கொடுத்திருப்பார்கள்.  அதற்கு கீழ் CLOSE என்று போட்டு இருப்பார்கள்.  அதை தேர்வு செய்யவும்.பின்னர் வலது பக்கம் Add Title என்பதை தேர்வு செய்யவும். ஒரு விண்டோ திறக்கும் நீங்கள் வைத்திருக்கும் வீடியோ கோப்பு எங்கு உள்ளது என்பதை தேர்வு செய்யவும்.  (இதில் Drag & Drop வசதி உண்டு).


நீங்கள் கொடுக்கும் வீடியோ கோப்பு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.  (உதராணத்திற்கு WMV, AVI, 3gp போன்று கலந்து கொடுக்கலாம்.)

இதில் முதலில் எது ப்ளே ஆகவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை மேலே கொண்டு செல்ல வலது பக்கம் Move Up என்பதனை தேர்வு செய்து மேலே கொண்டு சென்று முதலில் வைய்யுங்கள்.

எந்த இடத்தில் டிவிடி சேமிக்க வேண்டும் என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


பிறகு Project Settings என்பதனை தேர்வு செய்யுங்கள்

அதில் இடது பக்கம் General, Video, Audio, Playback, Burning என்று நான்கு வகைகள் இருக்கும். 

அதில் General என்பதை தேர்வு செய்தால் நீங்கள் உருவாக்கும் டிவிடிக்கு பெயர் கொடுக்கலாம்.

உங்கள் டிவிடி அளவை மாற்றிக் கொள்ளலாம். அதாவது 4.8ஜிபி அல்லது டிவிடி டூயல் லேயர் 7.2 ஜிபி என்று தேர்வு செய்து கொள்ளலாம்.  நிறைய புழக்கம் டிவிடி 4.8 ஜிபிதான் அதனால் நீங்கள் 4.8 ஜிபி என்று தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Video என்பதில் உங்கள் NTSC என்பதை தேர்வு செய்யுங்கள்.


Audio என்பதில் தேவையானால் 100% என்பதில் இருந்து கூட்டிக் கொள்ளுங்கள்.


Burning என்பதில் நீங்கள் டிவிடியாக எரிக்க போகிறீர்களா அல்லது வெறும் டிஸ்க் இமேஜாக சேமித்து பிறகு தனியாக எரிக்க போகிறீர்களா என்பதை தேர்வு செய்யவும்.பிறகு Accept என்பதை தேர்வு செய்தால் மெயின் விண்டோவிற்கு வந்து விடும். 


பிறகு அதில் மேலே Create DVD என்பதை தேர்வு செய்தால் போதும்.உங்கள் வீடியோ டிவிடியை தயாரிக்க ஆரம்பித்து விடும்.

டிவிடி தயாரிக்கும் போது உங்களுக்கு போரடிக்கமால் இருக்க வலது பக்கம் உள்ள Entertain me என்பதை தேர்வு செய்தால் Tetris Game தொடங்கும் அதில் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கலாம் டிவிடி தயாரிக்கும் வரை. நன்றி மீண்டும் வருகிறேன்.

உங்கள் ஒட்டுக்கள தமிழிலிசிலும் தமிழ்10 மற்றும் தமிழ்மணத்திலும் ஒட்டளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். சில விளம்பரங்களை கிளிக் செய்து என்னை வாழவைக்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை