யூட்யூப் கோப்புகளை ஒன்று சேர்த்து ஒரு முழு படமாக்கலாம் வாங்க

நண்பர்களே இன்று சர்வதேச எழுத்தறிவு தினம் படிக்கத் தெரிந்தவர்கள் தெரியதாவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.  உங்களுக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். 1965ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும்.  அனைவருக்கும் எழுத்தறிவு தின வாழ்த்துக்கள். 


நாம் யூட்யுபிலிருந்து தரவிறக்கும் வீடியோ கோப்புகள் முழு படங்களை பிரித்து தரவிறக்கம் செய்து இருப்போம். அதை தனித்தனியாக  பார்த்தால் படம் பார்த்த மாதிரி இருக்காது.  அதற்கு என்ன செய்வது அனைத்து வீடியோ கோப்புகளையும் ஒன்று சேர்க்க வேண்டும். அதற்கு மென்பொருள் காசு கொடுத்து வாங்க வேண்டுமே.  அதுவும் அதிகமாக இருக்குமே.  இலவசமான மென்பொருள் இருக்க கவலை ஏன் பிடியுங்கள் இந்த மென்பொருளை கொண்டு யுட்யுப் மட்டுமல்ல  FLV1, VP6F, H264 இது போன்ற பார்மெட்டுகளையும் ஒன்று சேர்க்க முடியும். முழு வீடியோவாக சேர்த்த பிறகு வீடியோ தரமும் நன்றாகவே இருக்கிறது.  இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை நேரடியாக இயக்கலாம்.  மென்பொருள் தரவிறக்க சுட்டிகூகிள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் நிறுவ ஆன்லைனில் இணையத்தில் இருந்து தான் நிறுவ வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டுள்ளனர் இணையம் இல்லாத கணிணியில் கூட குரோம் நிறுவலாம். அதற்கு இணைய நிலையத்திற்கு சென்று அங்கு இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கிக் கொள்ள வேண்டும்.  அதை ஒரு யுஎஸ்பி பென் ட்ரைவில் சேமித்துக் கொண்டு இணையம் இல்லாத கணிணியில் நிறுவ வேண்டியதுதான்.  இதன் மூலம் இந்த ஒரு கோப்பைக் கொண்டு பல கணிணியில் குரோம் நிறுவலாம்.

ஆப்லைன் இன்ஸ்டாலர் கூகிள் குரோம். சுட்டி


நெருப்பு நரி உலாவி உபயோகிப்பவர்கள் இந்த் ஆடு ஆன் மூலம் பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை இணையம் உபயோகிப்பவர்கள் எவ்வளவு தரவிறக்கம் மற்றும் தரவேற்றம் செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.  ஆடு -  ஆன் சுட்டி

AVI வீடியோ கோப்பு தரவிறக்கி கொண்டிருக்கும் பாதியேலேயே இணையம் விட்டு போய் விடும். அந்த கோப்பு ரிப்பேர் ஆகிவிடும். அந்த கோப்பினை இயக்கி படம் பார்க்க இயலாது. அப்படியே இயங்கினாலும் உங்களால் முன்னால் பின்னால் ஒட்ட இயலாது அது போன்ற கோப்புகளை இந்த சிறிய மென்பொருள் மூலம் சரி செய்ய முடியும்.  மென்பொருள் சுட்டி


நண்பர்கள் அனைவரும் சில பல விளம்பரங்களை கிளிக் செய்து எனக்கு உதவும்படி கேட்டுக் கொள்கின்றனர்.

நன்றி மீண்டும் வருகிறேன்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

Recent Post

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை