நண்பர்களே நான் ஏதாவது படம் வாங்கினால் முதலில் அதை ரிப் செய்து கணிணியில் சேமித்து வைத்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பேன். ஏன் என்றால் படத்தை ரிப் செய்தால் கணிணியில் இடம் அடைக்காமலும் இருக்கும் அத்துடன் டிவிடியின் தரம் குறையாமாலும் இருக்கும் அதனால்தான் RIP செய்வேன்.
அதற்கு எப்போழுதும் நான் Winx DVD Rip என்ற மென்பொருளையே பயன்படுத்தி வருவேன் அது காசு கொடுத்து வாங்கியது. அந்த மென்பொருளை அந்த நிறுவனத்தினர் செப்டம்பர் 15ல் இருந்து செப்டம்பர் 30 வரை அரை மாதம் இலவசமாக தருகின்றனர். நேரடியாக தரவிறக்கிக் கொள்ளலாம்
விண் எக்ஸ் டிவிடி ரிப் தரவிறக்க சுட்டி
இனிமேல் பேஸ்புக்கில் உங்கள் மெயில் ஐடி முழுவதும் கொடுத்து நுழைய தேவையில்லை @ முன்னால் இருக்கும் ஐடி மட்டும் கொடுத்து நுழையலாம்.
உங்கள் போட்டோக்களை கையால் வரைந்த ஒவியம் போல் மாற்ற இந்த தளம் உதவும். சுட்டி
ஏவிரி வலை நிறுவனம் ஆன்லைனில் ஒலி கோப்புகளை எடிட் செய்ய வலைமனை ஆரம்பித்திருக்கிறார்கள். ஐந்து நிமிடக் கோப்புகளை மட்டுமே எடிட் செய்ய இயலும். வலைச்சுட்டி
நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள் ஆனது தெரியும் நாட்கள் கூட கணக்கு போட்டு விடலாம். ஆனால் எத்தனை மணி நேரம் நிமிடங்கள் நொடிகள் எவ்வாறு இவ்வளவு பெரிய கணக்கை போடுவது இதற்கு உதவுகிறது. வயது கணக்கு மென்பொருள் AGE Calculator மென்பொருள் சுட்டி
சிலர் ஒவ்வொரு முறையும் கோப்புகள் திறக்கும் பொழுது Recent Documents என்ற இடத்தில் சேமித்து வைக்கும். இதை நீக்க நாம் டாஸ்க் பாரில் ஏதாவது ஒரு இடத்தில் வலது கிளிக் செய்து அதில் பிராப்பர்டிஸ் தேர்வு செய்து அதில் Start menu தேர்வு செய்து அதில் Customize தேர்வு செய்து அதில் Clear என்ற பொத்தானை அமுக்கி நீக்குவோம். அதையே ஒரு கிளிக் செய்து நீக்க இந்த மென்பொருள். இந்த மென்பொருளை நிறுவிய பிறகு Start > Programs > Blast Documents சென்று இந்த ஷார்ட்கட்டினை Quick Launchல் இழுத்து விடுங்கள் போதும். பிறகு ஒவ்வொரு முறையும் Quick Launchல் Blast Documents கிளிக் செய்வதன் மூலம் Recent Documents நீக்கப்படும். மென்பொருள் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
2 ஊக்கப்படுத்தியவர்கள்:
ரிப்பருக்கு நன்றி தல!
Thanks for the Ripper.
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்