நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மிகவும் நன்றிகள் பல
இதற்கு முன் சட்டரீதியான பிடிஎப் டூ வேர்ட் மாற்றி கொடுத்த நான் மீண்டும் ஒரு இலவச பிடிஎப் டூ வேர்ட் மாற்றி உங்களுக்காக தருகிறேன். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் காப்பி ப்ரொடெக்ட் (Copy Protect) செய்யப்பட்ட பிடிஎப் கோப்பிலிருந்தும் வேர்டுக்கு மாற்றலாம். இதை ஒரு முறை ரெஜிஸ்டர் செய்தால் வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதை ரெஜிஸ்டர் செய்ய இங்கு செல்லுங்கள். இங்கு ஒரு எளிய கணக்கு கேள்வி கேட்பார்கள். அதற்கு பதில் அளித்தால் போதும் உடனே ரெஜிஸ்ட்ரேசன் கீ (Registration Key) கொடுத்து விடுவார்கள். மென்பொருள் தரவிறக்க சுட்டி
சில நேரம் உங்கள் குப்பைத்தொட்டியை (Recycle Bin) தெரியாமல் காலி (Empty Recycle Bin) செய்து விடுவீர்கள். பிறகுதான் தோன்றும் அதில் ஒரு கோப்பை தவறுதலாக அழித்து விட்டோமே என்று. அந்த மாதிரி சமயத்தில் கை கொடுக்கிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருள் உங்கள் கணிணியில் இருந்து மட்டுமல்ல உங்களது யுஎஸ்பி பென் ட்ரைவ், மற்றும் மெமரி கார்டு போன்றவற்றிலும் இருந்து மீட்டெடுக்கும்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
நம் குழந்தைகள் புகைப்படத்தை சாதரணமாக பார்த்தாலே நமக்கு மிகவும் சந்தோசம் வரும். நம் குழந்தை முகத்தை ஒரு ஒவியர் வரைந்து கொடுத்தால் எவ்வளவு சந்தோசம் இரண்டு மடங்காகும். ஆனால் ஒரு ஒவியரை தேட வேண்டும். அவர் முன் ஆடாமல் அசையமால் அமர்ந்து இருக்க வேண்டும் குழந்தைகளிடம் இதை எதிர்பார்க்க முடியாது. அதை நாமே கையால் வரைந்தால் நமக்கு வரையத் தெரியாது. அதற்கு ஒரு மென்பொருள் இருந்தால் எப்படி இருக்கும். இருந்தால் என்ன இருக்கிறது. அதை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் சுட்டி.
நீங்கள் வைத்திருக்கும் வீடியோக்களை .WMV கோப்பாக (விண்டோஸ் மீடியா வீடியோ கோப்பாக ) மாற்ற இந்த இலவச மென்பொருள் தரவிறக்க சுட்டி
(படங்களை பெரிதாக்க படத்தின் மேல் கிளிக் செய்து பார்க்கவும்)
பதிவு பிடித்திருந்தால் தமிழிலிசிலும் தமிழ்10லும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடவும். சில பல விளம்பரங்களை கிளிக் செய்யவும்.
இன்னும் நிறைய மென்பொருட்கள் இணையத்தளங்களுடன் திரும்பவும்
நன்றி மீண்டும் வருகிறேன்.
5 ஊக்கப்படுத்தியவர்கள்:
நன்றி உங்கள் இணைப்புக்கும் எனது பக்கத்துக்கு வருகை தந்ததற்கும். தொடர்ந்து இதே போல் எங்களுக்கு இப்படி எழுதி உதவுங்கள்.
வாழத்துக்கள்
என்னையும் ஓவியராக்கியதற்கு நன்றி!
எல்லாமே அசத்தல் சுட்டி....பூங்கொத்து!
உங்களுக்கு ஒரு சிறிய விருது
http://suryakannan.blogspot.com/2009/08/blog-post.html
பிடிஃப் டூ வோர்ட், மற்றும் போட்டோ பெயிண்டிங் இரண்டுமே அருமை.
வீடியோக்களை .WMV கோப்பாக மாற்றும் மென்பொருள் தரவிறக்கம் செய்தேன். அது ஏனோ html ஆக save ஆகியுள்ளது. ஏன் அப்படி என்று விளக்க முடியுமா?
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்