அதற்கு உங்களுக்கு தேவையான பொருட்கள்
ஒரு பருத்தி துணி / பஞ்சு
சிறிது தூய நீர்
சிறிது பல் விளக்கும் பற்பசை (Toothpaste)
சிறிது ஆல்ஹகால்
முதலில் கீறல் விழுந்த சிடி / டிவிடியை பருத்தி துணியால் துடைத்துக் கொள்ளவும்.
சில நேரங்களில் பருத்தித்துணி வைத்து சில சிடிக்களில் தேவையில்லாத கறைகள் இருக்கும் அதற்கு சிறிது ஆல்ஹகால் வைத்து துடைத்துக் கொள்ளவும்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சிறிது பற்பசையை எடுத்து எங்கெங்கு கீறல் உள்ளதோ அங்கெல்லாம் தடவுங்கள் பின்னர் பருத்தி துணி கொண்டு அப்படியே துடைத்து எடுக்கவும். பின்னர் தண்ணீர் கொண்டு துடைத்து விடுங்கள். ஈரம் இல்லாமல் துடைத்து விடுதல் மிகவும் முக்கியம்.
சிறிது நேரம் கழித்து சிடி டிரைவில் இட்டு மென்பொருட்கள் கொண்டு மீட்டெடுக்க முயன்று பாருங்கள்.
பிடிஎப் கோப்பிலிருந்து டெக்ஸ்டை பிரித்தெடுக்க
சில பிடிஎப் கோப்புகள் Copy Protected உடன் வரும். அந்த மாதிரி பிடிஎப் கோப்புகளில் இருந்து எந்த ஒரு வார்த்தையையும் காப்பி செய்து டெக்ஸ்டாக எடுக்க இயலாது.
அதற்கு இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருள் மூலம் பாதுகாக்கப்பட்ட பிடிஎப் கோப்புகளில் இருந்து டெக்ஸ்டை மட்டும் தனியாக உருவி தந்து விடும்.
(குறிப்பு இந்த மென்பொருள் ஆங்கில பிடிஎப் கோப்புகளுக்கு மட்டுமே)
மென்பொருள் தரவிறக்க சுட்டி
ஆகஸ்ட் 15 2009, அன்று நாடு முழுவதும் அறுபத்திரண்டவாது சுதந்திர தினம் கொண்டாடப் படுகின்றது. (முதலில் 52 என்று தவறாக எழுதியிருந்தேன் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி)
இந் நேரத்தில் சீன வெளியுறவு வல்லுநர் ஒருவர் சீன இணையத்தளத்தில் இந்தியா ஜாதி மாநிலமாக பிரிந்திருப்பதை தனிநாடாக ஆக்க வேண்டும் என்றும் நம் நாட்டை இருபது துண்டுகளாக பிரிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார். அப்பொழுதுதான் சீனாஆசிய பகுதியில் வலுவாக இருக்க முடியும் என்று கூறியிருக்கின்றார். இது போல் பேசி வருபவர்களுக்கு நாம் நம் உழைப்பின் மூலம் நம் பாரத நாட்டை வளம் பெற வைத்து தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்
நன்றி மீண்டும் வருகிறேன்
8 ஊக்கப்படுத்தியவர்கள்:
சோக்கா, தான் கீது !! நம்ப cd கு கூட பல்லு வெலக்கி வுட்டாத்தான் நல்லா வேல செய்யும் போல கீது !! தூளு மேட்டர் பா !!
dvd-இல் இருந்து மீட்டுஎடுக்கும் இலவச மென்பொருள் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்.
நல்ல பயனுள்ள செய்தி.
//anbuaran said... //
//dvd-இல் இருந்து மீட்டுஎடுக்கும் இலவச மென்பொருள் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்.//
நண்பர் anburan என்ன கேக்கறார்னு எனக்கு புரியல.உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்.
சீனப் பன்னிகளே! இந்தியாவில் இருக்கும் சீனக் கம்யூநிஸ்டு கைக்கூலிகளே! தமிழன் தனது கருத்துக்களால் இந்தியாவில் தனித்து விடபட்டாலும் அவன் என்றும் இந்தியன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சீன நாய் களின்
கொக்கரிப்பை விட இந்தியனின் எதற்கும் துணிந்த தியாகமும், துணிவும் பெரியது. ஜெய் ஹிந்த்!
இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
கொல்வின்
இலங்கை
இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
கொல்வின்
இலங்கை
வடிவேலன்,
நல்ல தகவல்களுடன் நன்றாக விளக்கியும் உள்ளீர்கள் எவ்வாறு சிடிக்கு பல் விளக்கிவிடுவது என்று.
அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
சிறிது நேரம் கழித்து சிடி டிரைவில் இட்டு மென்பொருட்கள் கொண்டு மீட்டெடுக்க முயன்று பாருங்கள்.
which recovery software?
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்