நண்பர்களே நாம் இணையத்தில் ஒரு RAR கோப்பை தரவிறக்குவோம். அதனுடைய கடவுச்சொல் மறந்து விட்டால் என்ன செய்வோம். முடிந்தவரை முயற்சி செய்வோம். இல்லை என்றால் அதை ஒரு போல்டரில் ஒதுக்கிவிட்டு ஒரமாக வைத்து விடுவோம். இந்த மாதிரி கோப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். இந்த மாதிரி RAR கோப்பின் கடவுச்சொல்லை கண்டு பிடிக்க ஒரு மென்பொருள் உள்ளது.
அதன் பெயர் RAR PASSWORD CRACKER.
இதை முதலில் இங்கு இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். சுட்டி
தரவிறக்கிய மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும்.
இன்ஸ்டால் செய்தபின் அந்த மென்பொருளை திறக்கவும்.
திறந்தால் மென்பொருள் படத்தில் உள்ளது போன்று இருக்கும்.
பின்னர் NEXT தேர்வு செய்யவும்.
பின்னர் Choose Methodல் Bruteforce Attack தேர்வு செய்யவும்.
பின்னர் Next தேர்வு செய்து Charsetல் A முதல் Z வரையிலும் 0 முதல் 9 வரையிலும் கொடுக்கவும்.
பின்னர் Next தேர்வு செய்து எங்கு சேமிக்க வேண்டுமோ அதனுடைய இடத்தை தேர்வு செய்யவும். பார்க்க கீழ் வரும் படத்தை
Next தேர்வு செய்த பின் கடவுச்சொல் கண்டுபிடித்த பின் இந்த மாதிரி ஒரு உரையாடல் பெட்டியில் கடவுச்சொல் தோன்றும்.
இந்த மென்பொருள் தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருள் வலைத்தளம் சுட்டி
இந்த மென்பொருள் அளவு வெறும் 205கேபி மட்டுமே
இது ஒரு இலவச மென்பொருளும் கூட
நன்றி மீண்டும் வருகிறேன்
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
நன்றி.
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்