நண்பர்களே இன்றைய உலகில் கணணி இல்லாத உலகம் நினைத்துப் பார்க்கவே முடியாது. கணணி நினைவுக்கு வந்தால் கணணியால் உருவாகிய யுஎஸ்பி நினைவுக்கு வராமால் இருக்க முடியாது. அப்படிப்பட்ட் யுஎஸ்பியை நாம் என்றாவது ஒழுங்காக உபயோகித்து இருப்போமா 2 ஜிபி 300 ரூபாய்தானே என்று ஒரு கவனமின்மையுடன் கையாள்கிறோம். யுஎஸ்பி ஒடிக் கொண்டிருக்கும் போது அப்படி எடுப்பது இப்படி போன்ற செயல்கள். முன் ஒரு பதிவில் யுஎஸ்பியை முறையாக எடுப்பது குறித்த சில மென்பொருட்கள் பார்த்தோம். பதிவு
இன்று யுஎஸ்பி கருவிகள சோதனை செய்வது குறித்த மென்பொருட்களை கீழே காண்போம்.
செக் ப்ளாஸ்
இந்த மென்பொருள் உங்கள் யுஎஸ்பி எவ்வளவு வேகம் படிக்கும் / எழுதும் என்று சோதித்துக் கொடுக்கும். ஏதாவாது Writing Error வருகிறதா என்று சோதிக்க இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.
மென்பொருள் தரவிறக்கம் சுட்டி
HD ஸ்பீடு
இந்த மென்பொருள் உங்கள் யுஎஸ்பி மட்டுமல்ல உங்களுடைய ஹார்ட்டிஸ்க், சிடி, டிவிடி ஆகியவற்றின் வேகத்தையும் சோதித்து கொடுக்கும்.
இதை நிறுவ தேவையில்லை
நேரடியாக இயக்கி பார்க்கலாம். வெறும் 80 கேபி அளவு.
சுட்டி
கிரிஸ்டல் டிஸ்க் மார்க்
இது ஒரு பென்ச் மார்க் டூல் இது உங்களுடைய யுஎஸ்பி வேகத்தை சோதித்து கொடுக்கும்.
சுட்டி
கீழ் வரும் இரண்டும் ட்ரையல் வெர்சன்
ப்ளாஸ் மெமரி டூல்கிட்
HD Tune
நன்றி மீண்டும் வருகிறேன்
0 ஊக்கப்படுத்தியவர்கள்:
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்