நண்பர்களே இப்பொழுது எத்தனையோ கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள்கள் உள்ளன. அவைகளால் சுலபமாக நாம் நீக்கிய கோப்புகளை மீட்டெடுத்து கொடுத்து விடுகின்றன. எப்படி இந்த மென்பொருளுக்கு அல்வா கொடுப்பது. இதற்கு இந்த மென்பொருள் உதவுகிறது டிஸ்க் ஸ்க்ரப்பர். ஒரு கோப்பை அழித்தால் ஹார்ட் டிஸ்கில் அந்த கோப்பு அழிந்த இடத்தில் வேறு ஒரு கோப்பை எழுதும் வரை சுலபமாக மீட்டு எடுக்கலாம். அந்த இடத்தில் வேறு ஒரு கோப்பை எழுதப்பட்டுவிட்டால் அழிந்த அந்த கோப்பை எடுப்பது மிகவும் கடினம் இந்த மென்பொருள் மூலம் ஒரு கோப்பை அழிக்கும் போது அந்த கோப்பை அழித்து விட்டு வேறொரு கோப்பை எழுதிவிட்டு எழுதிய கோப்பையும் அழித்து விடுகிறது இதனால் புதியதாக எழுதிய டம்மி கோப்பு மட்டுமே மீட்டெடுக்கும் மென்பொருளுக்கு கிடைக்கும்.
"கீழே இருக்கும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்.
என்னுடைய தவறை திருத்தியதற்கு நன்றி. எனக்கு ஆங்கிலம் அந்த அளவுக்கு தெரியாது தெரியாமல் நடந்த தவறை உணர்த்தியமைக்கு நன்றிகள் பல"" இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருளை வைத்து அழித்த பைல்களை மற்ற மீட்டெடுக்கும் மென்பொருள்களால் மீட்டெடுக்க முடியாது.
மீட்டெடுக்க முடியாத வண்ணம் இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருள் உங்கள் பைல்களை அழித்து விடும்.
இது ஹார்ட்டு டிஸ்க்கை மற்றவர்களுக்கு டொனேட் செய்பவர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும்.
ஏனென்றால் நீங்கள் டிஸ்க்கை மற்றவர்களுக்கு டொனேட் செய்த பிறகு உங்கள் Personal பைல்களை யாரும் மீட்டெடுத்து பயன்படுத்தாத வண்ணம் இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருள் உங்கள் பைல்களை அழித்து விடும்."
மீட்டெடுக்க முடியாத வண்ணம் இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருள் உங்கள் பைல்களை அழித்து விடும்.
இது ஹார்ட்டு டிஸ்க்கை மற்றவர்களுக்கு டொனேட் செய்பவர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும்.
ஏனென்றால் நீங்கள் டிஸ்க்கை மற்றவர்களுக்கு டொனேட் செய்த பிறகு உங்கள் Personal பைல்களை யாரும் மீட்டெடுத்து பயன்படுத்தாத வண்ணம் இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருள் உங்கள் பைல்களை அழித்து விடும்."
இதை தரவிறக்க சுட்டி
இவர்களின் வேறு சில மென்பொருட்கள்
பைல்சர்ச்சர்
பல்க் இமெஜ் ரீசைசர்
நன்றி அனைவருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நேரடியாக வந்து படிப்பவர்களுக்கும் ரீடர் மூலம் படிப்பவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் படிப்பவர்களுக்க்கும் நன்றி உங்கள் ஊக்கமும் உற்சாகமும் என்னை இன்னமும் எழுதிட தூண்டுகிறது. நன்றி வணக்கம்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
5 ஊக்கப்படுத்தியவர்கள்:
வடிவேலன்,
இந்த பதிவு கொஞ்சம் குழப்பமாக உள்ளது இரண்டு பத்திகளாக சற்று இடம் விட்டு கொஞ்சம் மேலும் சற்று சுலபமாக எல்லா தரப்பினருக்கும் புரியும் வண்ணம் எழுதி இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
\\ By using the Disk Scrubber, you can ensure that delete data is written over and thus no longer recoverable by disk recovery software. This is a must when selling or donating your used hard drive.\\
அதாவது இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருளை வைத்து அழித்த பைல்களை மற்ற மீட்டெடுக்கும் மென்பொருள்களால் மீட்டெடுக்க முடியாது.
மீட்டெடுக்க முடியாத வண்ணம் இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருள் உங்கள் பைல்களை அழித்து விடும்.
இது ஹார்ட்டு டிஸ்க்கை மற்றவர்களுக்கு டொனேட் செய்பவர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும்.
ஏனென்றால் நீங்கள் டிஸ்க்கை மற்றவர்களுக்கு டொனேட் செய்த பிறகு உங்கள் Personal பைல்களை யாரும் மீட்டெடுத்து பயன்படுத்தாத வண்ணம் இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருள் உங்கள் பைல்களை அழித்து விடும்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
நன்றி முத்துக்குமார் எனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளேன். மன்னிக்கவும் பதிவை உடனே சரி செய்து விட்டேன்.
நன்றி உங்கள் கருத்து சரியானது நன்றி கோடிகள்
வடிவேலன்,
உங்கள் தன்னடக்கம் உங்கள் பெருந்தன்மையை உணர்த்துகிறது. உங்களுக்கு ஆங்கிலம் நான்றாக வராது என்று உங்களுக்கு சுட்டிக்காட்டும் எண்ணத்தில் நான் அவ்வாறு கமென்ட் எழுதவில்லை.
ஏதோ நான் இந்த சிறு தவற்றை சுட்டிக்காட்டியதால் என்னுடைய ஆங்கில தெளிவு அதிகம் என்று நினைத்து விடாதீர்கள்.
மற்றும் நான் இப்பதிவை சிங்கப்பூரில் இருந்து வெளியிட்டதால் ஏதோ நான் ஆங்கில புலமை அதிகம் உள்ளவன் என்று தவறாக எடை போட்டு விடாதீர்கள், நான் English-ல் பேசுவதை விட சிங்கப்பூரில் Singlish-ல் பேசுவேன்.
உங்கள் தமிழ் பதிவின் வார்த்தைகளையும் அங்கு ஆங்கிலத்தில் இருந்ததையும் compare செய்து ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டியதை தெரிவித்தேன்.
மற்றபடி நான் எழுதியது எந்த விதத்திலாவது தங்கள் மனம் புண்படும்படி வார்த்தைகளை நான் பயன் படுத்தி இருந்தால் என் தவற்றிற்கு நான் வருந்துகிறேன். Really I am very sorry.
உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களிள் நானும் ஒருவன்.
வளர்க உங்கள் பணி என்றும் தன்னம்பிக்கையோடு வழக்கம்போல....
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
அய்யோ நண்பரே அப்ப்டியெல்லாம் ஒன்றும் இல்லை உங்கள் கருத்து வெளிப்பாடு பிடித்திருந்தது அதனால் அப்படியே வெளியிட்டேன். இதில் மன்னிப்பு கேட்பதற்கு ஒன்றுமே இல்லை. உங்கள் கருத்து என்றுமே தேவை எனக்கு.
நன்றி முத்துக்குமார்
எப்பொழுது சென்னை வருகிறீர்கள் வரும்பொழுது எங்களையும் கொஞ்சம் பார்த்துவிட்டு செல்லுங்கள்
வடிவேலன்,
உங்கள் பதில் கண்டு மிக்க சந்தோஷம் எங்கு நம் நண்பரை காயப்படுத்திவிட்டோமோ என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்கள் பதில் கண்டு நீங்கள் நான் சொல்ல வந்ததை சரியான கோணத்தில்தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.
கண்டிப்பாக நான் இந்த வருடம் சென்னை வரும்பொழுது தங்ளை அவசியம் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்