மேனஜரிடம் திட்டு வாங்கமால் இருக்கலாம் வாங்க?

நண்பர்களே நீங்கள் உங்கள் மேனஜர் கூறிய வேலையை செய்து முடிக்க வில்லை என்றால் என்ன செய்வார் உடனே காச் மூச் எல்லோர் முன் உங்களை கத்துவார். அதே நீங்கள் கூறிய வேலையை கணணியில் செய்து முடித்துவிட்டேன். ஆனால் அந்த பைல் எப்படியோ ரிப்பேர் (Corrupt) ஆகிவிட்டது  என்று கூறினால் உடனே உங்கள் பாஸ் என்ன சொல்வார் உனது கணணியில் ஏதொ பிரச்சனை என்று பார்க்கச் சொல்வார் அதற்கு எப்படியும் நேரம் ஆகும் அதற்குப்பிறகு நீங்கள் உங்கள் வேலையை முடித்து கொண்டு போய் கொடுத்து விடலாம்.  (Corrupt)ஆகி விட்டது என்றால் பைலை காட்டு என்பாரே அதற்கு ஒரு வலைத்தளம் உள்ளது.  இங்கு சென்று உங்களுக்கு எந்த பெயர் வேண்டுமோ அதை உள்ளீடு செய்யுங்கள் பின்னர் அந்த கோப்பு எந்த அளவில் வேண்டும் என்று உள்ளீடு செய்யுங்கள் பின்னர் அந்த கோப்பு எந்த எக்ஸ்டன்சனில் வேண்டும் தேர்வு செய்யுங்கள் உடனே உங்கள் கோப்பு தயார் நீங்கள் தரவிறக்கி டெஸ்க்டாபில் வைத்துக் கொள்ளுங்கள்.



ஆனால் இதையே அடிக்கடி காரணம் காட்டினால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். உங்கள் வேலையை தள்ளி போடமால் உடனே செய்தால் இந்த வலைத்தளம் உங்களுக்கு தேவையில்லை.


சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

VASAVAN said...

//ஆனால் இதையே அடிக்கடி காரணம் காட்டினால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். உங்கள் வேலையை தள்ளி போடமால் உடனே செய்தால் இந்த வலைத்தளம் உங்களுக்கு தேவையில்லை.//

Nanraga sonneergal. Vaalththukkal.

Muthu Kumar N said...

வடிவேலன் அவர்களே,

அருமையான (ஏ)மாற்று வழி உங்கள் உதவிக்கு நன்றிகள் இந்த (ஏ)மாற்று வழியைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

Colvin said...

தவறான முன்ணுதாரணம் இப்பதிவு. பதிவிடும்போது சில ஒழுங்குமுறைகளை கடைபிடிக்கவும்

Vadielan R said...

நண்பர் கொல்வின் உங்களுக்கு இந்தப்பதிவு பிடிக்க வில்லை எனில் என்ன காரணம் என்று தெளிவாக சொன்னால் உடனே இந்த பதிவை நீக்கி விடுகிறேன்.

"தவறான முன்ணுதாரணம் இப்பதிவு. பதிவிடும்போது சில ஒழுங்குமுறைகளை கடைபிடிக்கவும்"

கடைசியில் இந்த வரிகளை சேர்த்திருந்தேன் அதனால்தான் அவசரத்துக்கு உதவுவதற்கு மட்டுமே இந்த வலைத்தளம் அடிக்கடி இதை காரணம் காட்டக்கூடாது என்று கூறி இருக்கிறேன்.

"ஆனால் இதையே அடிக்கடி காரணம் காட்டினால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். உங்கள் வேலையை தள்ளி போடமால் உடனே செய்தால் இந்த வலைத்தளம் உங்களுக்கு தேவையில்லை."

நன்றி

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை