நண்பர்களே உங்கள் ஆடியோ சிடியிலிருந்து பாடல்களை எம்பி3 ஆக பிரித்தெடுக்க சிறந்த ஐந்து மென்பொருட்கள்
மீடியாகோடர்
சிடெக்ஸ்
சிடி ரிப்பர்
எக்ஸ்ட்ராக்ட் ஆடியோ காப்பி
ஆடியோகிராப்பர்
இந்த ஐந்து மென்பொருட்கள் இல்லாமலே நீங்கள் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியில் ஆடியோ சிடியிலிருந்து பாடல்களை எம்பி3 ஆக பிரிக்கலாம்.
உங்கள் ஆடியோ சிடியை உங்கள் சிடி ட்ரைவில் போடுங்கள்
பின்னர் விண்டோஸ் மீடியா ப்ளேயரை இயக்குங்கள்
விண்டோஸ் மீடியோ ப்ளேயரில் இடது பக்கம் Copy From CD என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்னர் எந்த ஆடியோ பாடல்கள் என்பதை தேர்வு செய்யுங்கள்.
பின்னர் Copy Music என்பதை தேர்வு செய்யுங்கள்.
காப்பி முடிந்தவுடன் உங்கள் மை டாக்குமெண்ட் போல்டருக்குள் மை மியுசிக் என்ற போல்டருக்குள் அந்த பாடல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். ஆடியோ சிடி தேவையில்லை உங்கள் இனி.
நன்றி மீண்டும் வருகிறேன்
1 ஊக்கப்படுத்தியவர்கள்:
வடிவேலன்,
தங்கள் MP3 பற்றிய மீடியா பிளேயர் பதிவு அருமையாக உள்ளது. வாழ்த்துகள்.
என்னுடைய சிறு கருத்து தங்கள் இன்றைய குறிப்பு பற்றி.
தினமும் கணிணியை ஆன் செய்த உடன் துடைப்பதை விட ஆன் செய்வதற்கு முன் துடைப்பது தான் சாலச் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால் ஆன் செய்து விட்டு துடைத்தால் BIOS Setup புக்குள் போக நேரிடலாம் அல்லது விண்டோஸில் எதேதோ ஓப்பன் ஆகி இருக்கும். எனவே ஆன் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் செலவு செய்து துடைப்பது சுலபம் என்பேன்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்