நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம்

நண்பர்களே படிக்க வர்றிங்க எல்லோரும் உடனே வெளியே போயடாதீங்க ஏன் சொல்றேன்னா நம்ம வலைப்பதிவுலேய என்ன தப்பு இருக்கு என்ன நல்லா இருக்கு எத மாத்தலாம் எப்படி பதிவு எழுதலாம்னூ ஆலோசனை கொடுங்க சரியா!!!!

இன்னைக்கு அறிமுகப்படுத்த போகிற தளம் புது தொலைக்காட்சி வாங்கப் போற அனைவருக்கும் இந்த தளம் ரொம்ப உதவியாயிருக்கும். தொலைக்காட்சியில் முக்கிய ஒளி அதுக்கு ஏற்ற தளம்.   இந்த தளத்தில் இரண்டு டிவி மாடல் வைத்து  நீங்க எந்த தொலைக்காட்சி வாங்க போறிங்களோ  நீங்கள் வாங்கும்  தொலைக்காட்சி அளவினை உள்ளீடு செய்தால் போதும் அந்த தொலைக்காட்சியின் பட அளவை காட்டிவிடும்.  சுட்டி

நீங்கள் டைப் செய்யும் வேகம் கணக்கிட இந்த தளம் உதவும். இந்த தளத்தில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய தேவையில்லை. மென்பொருள் தரவிறக்க தேவையில்லை.  நேரடியாக பயிற்சி செய்யலாம்.  சுட்டி

தினமும் ஒவ்வொரு முறையும் கணனியை ஆன் செய்யும் பொழுதும் நிறுத்தும் பொழுதும் மைக்ரோசாப்டின் ஒரே சத்தத்தை கேட்டு போரடித்து விட்டதா.  சுலபமாக மாற்றலாம் இந்த இசையை.

எப்படி மாற்றுவது????

உங்களுக்கு இரண்டு கோப்புகள் மாற்ற வேண்டும்
ஒன்று விண்டோஸ் தொடங்கும் இசை   - Windows XP Startup.WAV
இரண்டு விண்டோஸ் முடியும் இசை     -  Windows XP Shutdown.WAV

நீங்கள் வைத்திருக்கும் எந்த வித இசையானாலும் அதை .WAV என்ற கோப்பாக மாற்றிக் கொள்ளவேண்டும் பின்னர் அதை 15 விநாடிகளுக்கு தேவையான அளவு கட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.  இவ்வாறு செய்ய உங்களுக்கு ஒரு மென்பொருள் தேவை என்னுடைய சிபாரிசு சுட்டி

நீங்கள் தேர்வு செய்த கோப்புகளை விண்டோஸ் தொடங்கும் போது வேண்டிய இசைக்க கோப்பினை "Windows XP Startup.WAV"   என்றும்

விண்டோஸ் நிறுத்தும் போது வேண்டிய இசைக்க வேண்டிய கோப்பினை  "Windows XP Shutdown.WAV", என்றும் பெயர் மாற்றம் செய்யுங்கள்.

அதன் பிறகு நீங்கள் உங்கள் கணணியில் எங்கு விண்டோஸ் நிறுவியிருப்பீர்கள் என்று உங்களுக்கு தெரியும்.

( உதாரணமாக எப்பொழுதுமே விண்டோஸ் C:\   ட்ரைவில் மட்டுமமே நிறுவி இருப்பார்கள்)

அப்படி என்றால் நாம் அங்கு செல்ல வேண்டும்

முதலில் C:\ திறக்கவும்

பின்னர் Windows போல்டரை திறக்கவும்

பின்னர் Media என்ற போல்டரை திறக்கவும்.

(உதராணம் C:\Windows\Media) இதைத்தான் நாம் திறக்க வேண்டும்

அங்கு "Windows XP Startup.WAV" மற்றும் "Windows XP Shutdown.WAV",  ஆகிய இரண்டு கோப்புகளை தேடி அதை

"Windows XP Startup-Old.WAV" and "Windows XP Shutdown-Old.WAV", என்று மாற்றிக் கொள்ளுங்கள்.

பின்னர் முதலில் நீங்கள் தேர்வு செய்து பெயர் மாற்றம் செய்த கோப்புகள் இரண்டினையும் இங்கு காப்பி செய்து பேஸ்ட்  செய்துவிடுங்கள்.

முடிந்தது இனி ஒவ்வொரு முறை உங்கள் கணணியில் விண்டோஸ்  தொடங்கும்போதும் நிறுத்தும் போதும் நீங்கள் தேர்வு செய்த இசை மட்டுமே ஒலிக்கும்.



குறிப்பு (நமீதா என்றால் உடனே வருகிறார்கள்அதனால் நமீதா படத்தை போட்டுள்ளேன் தலைப்பும் அதற்காகதான்.)



பிடித்திருந்தால் பின்னூட்டமும் விளம்பரங்களையும் கிளிக் செய்யவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்





5 ஊக்கப்படுத்தியவர்கள்:

Media 1st said...

NALA POLAPU SIR

Ram Vibhakar said...

நமீதா என்றவுடம் என் நினைவிற்கு வருவது gadgetguru.com.இந்த தளம் அவருடையது தான்.இந்தியாவில் முதலில் iPhone அறிமுகம் செய்தது இவர்தான்.

Muthu Kumar N said...

வடிவேலன் அவர்களே,

டிவி என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதும் அந்த தளத்தில் அவர்கள் கூறவருவதும் LCD டிவியைப் பற்றியது என்று நினைக்கிறேன், சரியா அல்லது சாதாரண CRT டிவியா என்று தெளிவு படுத்தவும்.
சுட்டியை கிளிக்கினால் தள முகவரி லிங்க் தவறாக உள்ளது http://tvcalculator.com/

சரியானது இதோ உள்ளது மாற்றி விடுங்கள்.
http://www.tvcalculator.com/

மற்றபடி பதிவில் மற்றைய விஷயங்கள் வழக்கம்போல அருமை.

ஆனால் நமீதா படத்தைப்போட்டுத்தான் கணிணி அறிவை பெருக்க வாய்ப்பிருக்கிறது என்கிற நிலையை நினைத்தால்தான் கஷ்டமாக உணருகிறேன்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
முத்துக்குமார்.ந

Suresh said...

ஆஹா நல்ல பதிவ்குக்கும் இப்படி தானா

Tech Shankar said...

நேத்து நான் பாவனா படத்தை பதிவில் இட்டேன். இன்னைக்கு நீங்க நமீதாவா..

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை