இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

ஒரே மென்பொருள் அனைத்தையும் அப்டேட் செய்ய

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இதுவரை எத்தனையோ மென்பொருட்கள் நிறுவியிருப்போம்.  அதை நிறுவிய பிறகு ஒவ்வொரு முறை புதிய பதிப்பு வரும்பொழுதும் பழைய பதிப்பை நீக்கிவிட்டு பிறகு புதிய பதிப்பு நிறுவ வேண்டியது இருக்கும். 

இப்படி ஒவ்வொரு மென்பொருளையும் நீக்கிவிட்டு புதிய மென்பொருளை நிறுவுவதற்குபதிலாக ஒவ்வொரு புதிய பதிப்பும் தானாக அப்டேட் செய்ய ஒரு மென்பொருள் இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்து உருவாக்கப்பட்டது இந்த மென்பொருள்.

இனி அதுபோல் செய்யத் தேவையில்லை இந்த மென்பொருளை நிறுவி விட்டால் தானாகவே புதிய பதிப்பு வந்தால் மேம்படுத்திக் கொள்ளும். நீங்கள் நிறுவிய மென்பொருட்கள் ஒபன் சோர்ஸ்(Open Source) அல்லது பிரிவேர் (Freeware) வகையைச் சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அந்த மென்பொருளை அப்டேட் செய்யவே தேவையில்லை. இந்த மென்பொருள் தானாக புதிய பதிப்பை மேம்படுத்திக் கொள்ளும்.
இந்த மென்பொருள் மொத்தம் இருநூற்றி நான்கு வகையான மென்பொருட்களை மேம்படுத்தும் திறமை கொண்டதாக உள்ளது.  இந்த மென்பொருள் குறைந்த நினைவகத்தை எடுத்துக் கொள்கிறது என்பது கூடுதல் சிறப்பம்சம். 

மென்பொருட்களின் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் நேரடியாக லிங்க் கொடுத்துள்ளேன்.  என்னென்ன மென்பொருட்களை அப்டேட் செய்யும் திறமை வாய்ந்தது என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.  சுட்டி

உதராணத்திற்கு சில மென்பொருட்கள் பெயர் கீழே கொடுத்துள்ளேன்

VLC Player, Audacity, Avira Antivirus, Open Office, 7zip, Adobe Reader, DeepBurner, Cobian Backup, IrfanView, CCleaner, Jv16Powertools, Universal Extractor, VMWare Player, Stellarium

இது சில உதாரணம் மட்டுமே இது போன்று நிறைய உள்ளது

அந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

அல்லது

மேலுள்ள படத்தை கிளிக் செய்தாலும் மென்பொருளை தரவிறக்கலாம்.


என்னையும் என் பதிவையும் மதித்து படிக்கும் அனைவருக்கும்
என்னை பின்பற்றுபவர்களுக்கும்  பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

அத்துடன் Tamilishல் தவறமால் தங்கள் கடமையை செய்யவும். அத்துடன் விளம்பரத்தையும் கிளிக் செய்தும் பின்னூட்டமிட்டும் எம்மை உற்சாகப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்.

0 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை